அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி.. தமிழகம் முழுதும் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை: ஜனவரி 25 பணி நாள்
சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் இன்று ஜனவரி 17-ம் தேதியும் விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த ஆண்டு ஜனவரி 14-ம் தேதி செவ்வாய்கிழமை அன்று தைப்பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதற்காக ஏற்கனவே 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தன.

பணிநாள்: அதாவது, ஜனவரி 15,16, 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் அரசு விடுமுறை நாட்கள் என்பதாலும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில், அதற்கு இடைப்பட்ட நாளான ஜனவரி 17 (இன்று) தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வரப்பெற்றன.
அக்கோரிக்கைகளை ஏற்று, தமிழக முதலவர் ஸ்டாலின், மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊர் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், இன்று தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார்..
அத்துடன், இன்றைய நாள் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், ஜனவரி 25 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் உத்தரவிட்டுள்ளார்.. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தொடர்ந்து 6 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால், அரசு ஊழியர்களும் சொந்த ஊர்களுக்கு செல்பவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சிறப்பு பஸ், ரயில்: அதுமட்டுமல்ல, பொங்கள் பண்டிகையை கொண்டாட பல லட்சக்கணக்கான மக்கள் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளனர்.. வெளியூர்களில் பணி செய்யும் ஊழியர்கள் மற்றும் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இன்றைய தினம் விடுமுறை மிகவும் வசதியாக இருக்கும் என்று நம்பப்படுகிறது.. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பேருந்துகளையும் இயக்கி வருகிறது.. சிறப்பு ரயில்களையும் தெற்கு ரயில்வே அறிவித்து, இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications