அரசு ஊழியர்கள் ஹாப்பி.. இதோ ஆவினும் ஆரம்பிச்சிட்டாங்க.. அகவிலைப்படி உயர்வு எப்போது? சர்ப்ரைஸ் வருமா?
சென்னை: தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்ட நிலையில், ஆவின் தரப்பிலும் இதுகுறித்த எதிர்பார்ப்பு அதிகமாக எழுந்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டுக்கு முந்தைய ஊதிய விகிதத்தில் சம்பளம் பெற்று வரும் அரசு ஊழியர்களுக்கு, அகவிலைப்படி உயர்த்தப்பட்டிருக்கிறது. இதுகுறித்த அறிவிப்பு கடந்த வாரம் வெளியாகியிருந்தது. அந்தவகையில், 2024ம் ஆண்டு ஜனவரி 1 முதல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 9 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

அரசு ஊழியர்கள்: அரசு ஊழியருக்கான அகவிலைப்படி வீதம் அடிப்படை ஊதியம் அகவிலை ஊதியத்தில் 239 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜனவரி முதல் மே மாதம் வரையிலான அகவிலைப்படி நிலுவைத்தொகை நடைமுறையிலுள்ள பணமில்லா வர்த்தக முறையான மின்னணு சேவை மூலம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டிருந்த அறிவிப்பில் கூறியிருந்தது. எனவே, அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பானது, ஊழியர்களை மிகுந்த மகிழ்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.
ஆவின் ஊழியர்கள்: மொத்தத்தில், அரசு ஊழியர்கள் மற்றும் அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரிபவர்களுக்கு, முதல்வரால் 2 முறை தலா, 4 சதவீதம் என, 8 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும், ஆவின் ஊழியர்களுக்கு இந்த அகவிலைப்படி வழங்கப்படவில்லை.
இதுகுறித்து பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மற்றும் ஆவின் நிர்வாக இயக்குனர் வினீத் ஆகியோரிடம், ஆவின் தொழிற்சங்கங்கள் வாயிலாக பலமுறை கோரிக்கை மனுக்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.
ஆவின் பணியாளர்கள்: இதையடுத்து, ஆவின் பணியாளர்களுக்கு, 4 சதவீத அகவிலைப்படி உயர்வு மட்டுமே வழங்கப்படும் என்று ஆவின் நிர்வாக இயக்குனர் அறிவித்திருந்தார்.. ஆனால் இதுவும் இன்னும் வழங்கப்படவில்லை. இதுபோல் இந்த 2 ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட 8 சதவீத அகவிலைப்படி உயர்வு கிடைக்காமல், ஆவின் ஊழியர்கள் எதிர்பார்ப்பில் உள்ளதாக தெரிகிறது.
போதிய நிதி ஆதாரம் இல்லாததால், அகவிலைப்படி உயர்வை வழங்க முடியவில்லை என்று ஆவின் அதிகாரிகள் தரப்பில் சொல்லப்படுகிறதாம். எனினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வமான தகவல் எதுவுமே வெளியாகிவில்லை. அதேசமயம், தங்களது அகவிலை எப்போது கிடைக்கும் என்ற ஆர்வத்திலும், எதிர்பார்ப்பிலும் ஆவின் ஊழியர்கள் காத்திருக்கிறார்களாம்..!!!












Click it and Unblock the Notifications