இன்பமான அறிவிப்பு வருது.. நாடு முழுக்க அரசு ஊழியர்களுக்கு போன தகவல்.. நீக்கப்படும் மிகப்பெரிய விதி.
சென்னை: நாடு முழுக்க அரசு ஊழியர்களை குஷி படுத்த போகும் முக்கியமான அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகலாம் என்று தகவல்கள் வருகின்றன.
ஜனவரி 1, 2024 முதல் மத்திய அரசு ஊழியர்களுக்கு மற்றும் மத்திய அரசின் ஓய்வூதியதாரர்களுக்கு 4 சதவீத அகவிலைப்படி (டிஏ) உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 2024 ஜனவரி 1 முதல் 13 அலவன்ஸ்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டதும், மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் மத்திய அரசு ஓய்வூதியம் பெறுவோர்களுக்கான டிஏ மற்றும் டிஆர் 50 சதவீதத்தை தொட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதால், விதிப்படி அடிப்படை சம்பளம் மற்றும் சலுகைகள் உயர்த்தப்பட வேண்டும்.
அதன்படி 2024 ஜனவரி 1 முதல் 13 அலவன்ஸ்கள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜூலை 4, 2024 தேதியிட்ட ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், 13 கொடுப்பனவுகளில் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA), போக்குவரத்து கொடுப்பனவு, ஹோட்டல் தங்குமிடம், பிரதிநிதித்துவம் மற்றும் ஸ்பிலிட் டூட்டி அலவன்ஸ் ஆகியவை அடங்கும்.
இவை உயரப்போகின்றன. இதனால் ஊழியர்களின் சம்பளம் கணிசமாக உயரும். மேற்கண்ட கொடுப்பனவுகளின் கொடுப்பனவுகள் தற்போதுள்ள விகிதங்களை விட 25% மேம்படுத்தப்பட்ட கட்டணத்தில் செய்யப்பட வேண்டும்.
புதிய அறிவிப்பு: இந்த நிலையில்தான் நாடு முழுக்க அரசு ஊழியர்களை குஷி படுத்த போகும் முக்கியமான அறிவிப்பு ஒன்று விரைவில் வெளியாகலாம் என்று தகவல்கள் வருகின்றன.
பணிக்காலம் முடிவதற்குள் பணியின் போது இறந்த அல்லது மருத்துவக் காரணங்களுக்காக ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர்களை பணியமர்த்த அனுமதிக்கும் கருணை பணி நியமனங்களுக்கான 5 சதவீத உச்சவரம்பு நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
தற்போது இந்த விதிப்படி பணிக்காலம் முடிவதற்குள் பணியின் போது இறந்த அல்லது மருத்துவக் காரணங்களுக்காக ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களை சார்ந்திருக்கும் குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் பணியில் சேர முடியாது. ஒரு வருடத்திற்கு 5 சதவிகித ஊழியர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு கிடைக்கும். தற்போது இந்த உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டு உள்ளது.
பட்ஜெட்டில் இதற்கான அறிவிப்பு வரலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களின் கூட்டமைப்பு, மத்திய பட்ஜெட் 2024க்கு முன்னதாக ஏழு கோரிக்கைகளுடன் மத்திய அரசுக்கு ஒரு முன்மொழிவை அனுப்பியது. அதில் முக்கிய முன்மொழிவு இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முக்கியமாக த்திய நிதி அமைச்சகம் வருங்கால வைப்பு நிதி வரம்பை கடந்த 10 வருடமாக ரூ.15,000 ஆக வைத்திருந்த நிலையில் தற்போது உயர்த்தும் முடிவை எடுத்துள்ளதாம். அதன்படி மத்திய அரசாங்கம் உச்சவரம்பை ரூ.25,000 ஆக உயர்த்தலாம் என்ற முடிவை எடுத்துள்ளதாம். இதற்காக தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் முன்மொழிவு ஒன்றை தயாரித்துள்ளது. இதேபோல் இன்னும் சில அறிவிப்புகள் வெளியாகலாம் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications