அது என்ன பேனா மாதிரி? மாநாட்டிற்கு வந்த வெளிநாட்டினருக்கு தரப்பட்ட வினோத பொருள்.. இதெல்லாம் வேற லெவல்
சென்னை: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வருகை வரும் அத்தனை விருந்தினர்களின் இருக்கையில், துணிப் பை ஒன்று உள்ளது.. இந்த பை அங்கே வந்த வெளிநாட்டினரை பெரிய அளவில் கவர்ந்துள்ளது.
சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடந்து வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு முதலீடுகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன. 2 நாட்கள் நடக்கும் மாநாடு ஆகும். நேற்று பல முக்கிய திட்டங்கள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகின. அதில், ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் காஞ்சிபுரத்தில் தொழிற்சாலை அமைக்க ₹6,180 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம்

தூத்துக்குடி, திருநெல்வேலியில் JSW நிறுவனம் ₹12,000 கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து செய்யப்ப்பட்டு உள்ளது.
ஓசூரில் உள்ள ஐபோன் உதிரி பாக ஆலையில் விரிவாக்கம் செய்ய டாடா நிறுவனம் ரூ.12,800 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. . கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ₹12,082 கோடி மதிப்பில் டாடா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் மொபைல் உதிரி பாகங்கள் தயாரிப்பு தொழிற்சாலை நிறுவ உள்ளது
தூத்துக்குடியில் ₹16,000 கோடி முதலீட்டில் மின்சார வாகனம் மற்றும் பேட்டரி உற்பத்தி ஆலையை அமைக்க, வியட்நாமைச் சேர்ந்த VinFast நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன் மூலம் 3,500 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு. இந்த ஆண்டிலேயே உற்பத்தி ஆலையின் கட்டுமான பணிகள் தொடங்கப்பட உள்ளன
அமெரிக்காவின் First Solar நிறுவனம் - ₹5600 கோடி முதலீடு செய்ய உள்ளது. சென்னையில் பெகட்ரான் - ₹1000 கோடி முதலீடு (8000 பேருக்கு வேலைவாய்ப்பு) செய்ய உள்ளது. சென்னையில் மிட்சுபிசி எலக்ட்ரானிக்ஸ் - ₹200 கோடி முதலீடு செய்ய உள்ளது.தமிழ்நாட்டில் டிவிஎஸ் நிறுவனம் கூடுதலாக ரூ.5,000 கோடி முதலீடு செய்ய உள்ளது. தமிழ்நாட்டில் ஹூண்டாய் நிறுவனம் கூடுதலாக ரூ.6,000 கோடி முதலீடு செய்ய உள்ளது;.
முக்கிய நிறுவனம்: சென்னையில் நடக்கும் தமிழ்நாடு உலக முதலீட்டாளர் மாநாட்டில் கோத்ரெஜ் நிறுவனம் தொடங்க இருக்கும் light house project நிறுவனத்துக்கான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையொப்பம் ஆனது.
சுவாரசிய சம்பவம்: உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கு வருகை வரும் அத்தனை விருந்தினர்களின் இருக்கையில், துணிப் பை ஒன்று உள்ளது.. இந்த பை அங்கே வந்த வெளிநாட்டினரை பெரிய அளவில் கவர்ந்துள்ளது.
அதில் நிகழ்ச்சி நிரலோடு, சென்னையின் சிறப்புகள் பற்றிய ஒரு புத்தகம் உள்ளது. அதேபோல் மீட்டிங் பற்றி குறிப்பெடுக்க ஒரு Diary. தமிழ்நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையிலான ஒரு பரிசுப் பொருள் உள்ளது. அதனோடு ஒரு பேனா, அதன் வெளிப்பகுதி அட்டையால் உள்ளது. அதன் மேற்பரப்பில், நான் விதையினால் செய்யப்பட்ட பேனா, என்னை நடுங்கள் என்ற வாக்கியத்தோடு உள்ளது. அதன் அடிப்பகுதியில் கொத்துமல்லி விதை வைக்கப்பட்டுள்ளது.

இதை மண்ணில் போட்டால் அது தானாக முளைக்கும் விதமாக உருவாக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு அரசின் இந்த முறையான திட்டமிடல் மக்கள் இடையே கவனத்தை பெற்றுள்ளது.
சூப்பர் ஒப்பந்தம்: அதேபோல் கோத்ரெஜ் நிறுவனம் தொடங்க இருக்கும் light house project நிறுவனத்துக்கான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையொப்பம் ஆனது.
இந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 5% பேர்கள் LGBTQ & Differently Abled ஆக இருக்க வேண்டும் என ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளது. முதலீட்டாளர் மாநாட்டில் கோத்ரெஜ் நிறுவனம் தொடங்க இருக்கும் light house project (Global FMCG) நிறுவனத்துக்கான ஒப்பந்தம் முதல்வர் முன்னிலையில் கையொப்பம் ஆனது. இந்த நிறுவனத்தின் மொத்த பணியாளர்களில் 5% பேர்கள் LGBTQ & Differently Abled ஆக இருக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு நிபந்தனை இட்டுள்ளது. இவ்வகையான நிபந்தனை உலகிலேயே முதன்முறை என தொழிற்துறையினர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications