விஜய் அரசு பண்ற வேலையால் ஜிபேயில் கூட பணம் அனுப்ப முடியல.. நாமக்கலில் அரசு ஊழியர்கள் போராட்டம்

Subscribe to Oneindia Tamil

நாமக்கல்: நாமக்கலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட வருவாய்த்துறையினர், 'ஆளும் அரசும், அரசு நிர்வாகமும் நம்மளை லஞ்சம், ஊழலுக்கு தள்ளுகிறது' என கூறினர். மேலும், "நம் மாமன், மச்சானுக்கு கூட ஜிபேயில் ரூபாய் அனுப்ப முடியலை. நம்ம அண்ணன், தம்பி நமக்கு ஒரு 5 ஆயிரம் ரூபாய் ஜிபேயில் போட முடியலை. அதுக்கும் கேள்வி வருது. போனிலும் பணம் வைக்கக் கூடாது. பாக்கெட்டிலும் பணம் வைத்திருக்க கூடாது. நடு வழியில் எதாவது பிரச்சனை என்றால் அப்படியே சாக வேண்டியது தான்" என கூறினர்.

தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்றதில் இருந்து அரசு அலுவலகங்களில் லஞ்சத்தை ஒழிக்க அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. யாராவது லஞ்சம் கேட்டால் என்னுடைய பெயரை சொல்லுங்கள் என்று கூறிய விஜய், லஞ்சம் கேட்டால் புகாரளிக்க பிரத்யேக வாட்ஸ் அப் எண்ணையும் வெளியிட்டுள்ளார். அரசு ஊழியர்கள் லஞ்சம் வாங்குவதை தடுக்க அவ்வப்போது லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டுகளையும் நடத்துகிறது. இந்த சூழலில், நாமக்கல்லில் அரசு ஊழியர்கள் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்.

Government officials protest in Namakkal Unable to even send money via GPay

அத்தனை பேரும் புறக்கணியுங்கள்

அப்போது அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில், “தயவு செய்து எல்லாரும் ஒருங்கிணைந்து போராட முயற்சி செய்யுங்கள். இந்த மாவட்ட நிர்வாகத்தின் கொடுமையான போக்கினை கண்டிக்க வேண்டும். அனைவரும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அவருக்கு தான் வந்தது, நமக்கு ஒன்னுமில்லை என இருக்கக் கூடாது. எல்லாரும் ஒருங்கிணைந்து செயல்பட்டு இவர்களுடைய இந்த தீய எண்ணத்தை முறியடிக்க வேண்டும். அரசு என்னென்ன நலத்திட்டங்களை கொண்டு வருகிறதோ அதையெல்லாம் நிறைவேற்ற தயாராக இருக்கிறோம்.

ஆனால் தனி மனிதனகாக ஒரு மாவட்ட ஆட்சியர், தன்னுடைய சுயநலத்திற்காக, தன்னுடைய திருப்திக்காக ஒரு வேலையை செய்ய சொன்னால் செய்ய முடியாது. அத்தனை பேரும் மறுங்கள்.. வியாழன்கிழமை தோறும் நடைபெறும் ஆய்வுக்கூட்டங்களில் கலந்துகொள்ளாதீர்கள். உங்களுக்கு பின்னால் நாங்கள் இருக்கிறோம். எதற்காக இரவு 8 மணி வரை இவர் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார். எந்த அரசு ஆணையில் உள்ளது இரவு 10 மணி வரை மகளிரை அமர்த்தி வைத்து ஆய்வுக்கூட்டம் நடத்த வேண்டும் என்று சொல்வதற்கு. அத்தனை பேரும் புறக்கணியுங்கள்.

லஞ்சம், ஊழலுக்கு தள்ளுகிறது

இனிமேல் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் ஆய்வுக்கூட்டங்களில் யாரும் பங்கேற்காதீர்கள். தலைக்கு தூக்கு வந்துவிடுமா? பார்த்துவிடலாம்.. இவர்கள் என்ன செய்வார்கள் என்று.. நண்பர்களே கால சூழ்நிலை சரியில்லை. அரசும் நமக்கு ஆதரவாக இல்லை. நம்மை நாமே காப்பாற்றிக் கொண்டால் மட்டும்தான் உண்டு. ஆகவே இந்த தீர்வு செயலியை கட்டாயம் செய்ய வேண்டாம். இன்றைய தினம் ஒரு அமைச்சர் வருகிறார். அங்கே நலத்திட்ட உதவிகளை செய்கிறார். நாம் அங்கே மேடை அமைக்கிறோம். கார்பட் விரிக்கிறோம். வரும் அமைச்சருக்காக எல்லா வேலைகளையும் செய்கிறோம்.

மக்களுக்கு உணவு அளிக்கிறோம். இதற்கு எல்லாம் பணம் எங்கிருந்து வந்தது என்று யாராவது கேட்டாங்களா? அந்த பணம் எங்கிருந்து வந்தது. ஆளும் அரசும், அரசு நிர்வாகமும் நம்மளை லஞ்சம், ஊழலுக்கு தள்ளுகிறது. எனவே வரும் காலத்தில் யாரும் ஒத்த ரூபாய் கூட செலவு செய்யாதீர்கள். வேண்டும் என்றால் மாவட்ட ஆட்சியர் செலவு செய்து எல்லாத்தையும் செய்யட்டும். அவருக்கு அத்தனை சக்தியும் உள்ளது. கார்பர்ட் விரியுங்கள், தண்ணீர் வாங்குங்கள், முந்திரி குடுங்க, திராட்சை குடுங்கன்னு கேக்குறாங்க.. இனி ஒத்த ரூபாய்க்கு ஒரு டீ கூட வாங்காதீங்க.. எல்லாத்தையும் அவங்களே செய்யட்டும். இஷ்டம்னா வந்து கலந்துகொள்ளட்டும். இல்லையென்றால் அப்படியே போகட்டும்.

ஜிபேயில் கூட பணம் அனுப்ப முடியல

இனி நம்ம வேலையை நாம செய்வோம். பயனாளிகளை கூட்டிட்டு வருவோம். அமர வைப்போம் அவ்வளவுதான் நம்ம வேலை. பயனாளிகள் பட்டியலை ரெடி செய்வோம். அவ்வளவுதான். ஒரு ரூபாய் கூட செலவு பண்ணாதீங்க.. இப்போ இருக்கிற சூழலில் நம் மாமன், மச்சானுக்கு ஜிபேயில் ஒரு ரூபாய் அனுப்ப முடியலை. நம்ம அண்ணன், தம்பி ஒரு 5 ஆயிரம் ரூபாய் போட முடியலை. அதுக்கும் கேள்வி வருது.

ஜிபேயிலும் பணம் அனுப்ப கூடாது, பணம் வாங்கக் கூடாது. பாக்கெட்டிலும் பணம் வைத்திருக்க கூடாது. அப்போ நடு வழியில் எதாவது பிரச்சினை என்றால் அப்படியே சாக வேண்டியது தான். இது தான் நிர்வாகம். 50 ஆண்டுக்ளுக்கு முன்பு வந்த சட்டங்களை வைத்துக்கொண்டு நம்மளை உயிரோடு கொன்றுகொண்டு இருக்கிறார்கள்.

எந்த அரசு வந்தாலும் அரசு ஊழியர்களை வஞ்சிப்பதையே ஒரே நோக்கமாக கொண்டுள்ளனர். நான் விஏஓ, நீ ஆர்.ஐ, தாசில்தார் என பிரித்து பார்க்காதீங்க.. எல்லாரும் ஒன்னு தான். கஷ்டம் என்பது எல்லாத்துக்கும் ஒன்னு தான். இப்போ வந்திருக்கிற தீர்வை செயலி நம்மை தற்கொலைக்கு தள்ளும் செயலி. எனவே நாம் கட்டாயம் புறக்கணிக்க வேண்டும். நம் உயிரை போனாலும், தீர்வை செயலியில் வேலை செய்வதில்லை என்ற முடிவை அத்தனை பேரும் ஒரு மனதாக எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+