கனமழையால் நடத்த முடியாமல் போன அரையாண்டு தேர்வு.. நாளை நடத்த அரசு உத்தரவு.. விடுமுறை எத்தனை நாட்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பள்ளி மாணவ-மாணவிகளுக்கான அரையாண்டு தேர்வு கடந்த டிசம்பர் 9-ந்தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 12-ந்தேதி மழை காரணமாக சென்னை உள்பட பல மாவட்டங்களில் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆங்கிலத்தேர்வு நடத்த முடியாமல் போனது. இந்நிலையில் 6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு 12ம் தேதி நடத்த முடியாத ஆங்கில தேர்வை நாளை (டிசம்பர் 21) நடத்துமாறு பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

தமிழ்நாட்டில் மாநில பாடத்திட்டத்தில் (மெட்ரிக் மற்றும் ஸ்டேட் போர்டு) பயிலும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கான அரையாண்டு தேர்வு கடந்த டிசம்பர் 9-ம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. ஆனால் ஃபெஞ்ஜல் புயல் மழையால் கடந்த 12-ந்தேதி சென்னை, செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, தூத்துக்குடி, விழுப்புரம், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், ராமநாதபுரம் உள்பட சுமார் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

schools half yearly exam

அந்த நாளில் 6-ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வகுப்பு வரையிலான மாணவ-மாணவிகளுக்கு ஆங்கிலத் தேர்வும், பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 வகுப்புக்கு சில பாடங்களுக்கான தேர்வும் நடத்த முடியாமல் போனது. அந்த தேர்வு எப்போது ஜனவரியில் நடத்தப்படுமா அல்லது டிசம்பரில் நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் இருந்து வந்தது.

இந்த நிலையில் அதுதொடர்பான அறிவிப்பை பள்ளி கல்வித் துறை வெளியிட்டுள்ளது. அதன்படி, தொடக்கக்கல்வித் துறை அனைத்து மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,:- "6, 7 மற்றும் 8-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு கடந்த 12-ந்தேதி கனமழையால் விடுமுறை விடப்பட்டு நடத்த முடியாமல் போன அரையாண்டு தேர்வை வருகிற நாளை (சனிக்கிழமை) நடத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டள்ளது. 6, 7, 8-ம் வகுப்புகளுக்கு மட்டும் சுற்றறிக்கை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், பிற வகுப்புகளுக்கும் வாய்மொழி வாயிலாக உத்தரவு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேநேரம் ஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், ஒத்திவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வு மொத்தமாக ஒத்திவைக்கப்பட்டது, ஜனவரி 2 முதல் 10ம் தேதி வரை நடத்த உத்தரவிடப்பட்டிருக்கிறது. கடலுார், விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டங்கள் பெஞ்சல் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக, இம்மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில், அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.

வரும், டிசம்பர் 24ம் தேதி முதல் ஜனவரி, 1ம் தேதி வரை, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும், அரையாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த விடுமுறை மழை பாதித்த மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் பொருந்தும். எனவே, அப்பள்ளிகளில் ஒத்தி வைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகளை, ஜனவரி, 2 முதல் 10ம் தேதி வரை நடத்த, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டிருக்கிறார்.

அரையாண்டு தேர்வு விடுமுறை எப்போது: அரையாண்டு தேர்வுகள் தமிழ்நாட்டின் மெட்ரிகுலேசன் தனியார் பள்ளிகளில் இன்றே தேர்வுகள் முடிந்துவிடுகின்றன. தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை வெளியிட்ட அட்டவணையின் படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் வரும் டிசம்பர் 23ம் தேதி கடைசி தேர்வு நடைபெறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+