அரசு புறம்போக்கு நிலத்தில் வீடு கட்டியிருக்கீங்களா? கரண்ட் கனெக்‌ஷன் கிடைத்தாலும் இந்த சிக்கல் வருமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: புறம்போக்கு நிலம் மின் இணைப்பு பெறுவதில் தமிழக அரசு இப்போது ஒரு முக்கியமான சலுகையை அறிவித்துள்ளது.. 250 சதுர அடி வரை வீடு கட்டி வசிப்பவர்கள், தடையில்லா சான்று இல்லாமலேயே மின் இணைப்பு பெறலாம்.. ஆனால், எல்லோருக்கும் இந்த சலுகை கிடைக்குமா? அரசு போட்டுள்ள அந்தக் கண்டிஷன் என்ன.. மின் இணைப்பு வாங்குவதில் இன்னும் என்னென்ன சிக்கல்கள் வரலாம்? அவைகளை பற்றி சுருக்கமாக இங்கே பார்க்கலாம்...!!

முதலில், புறம்போக்கு நிலம் என்றால் என்ன என்பதைத் தெரிந்துகொள்வோம்.. அரசு பதிவுகளில் தனிநபர் பட்டா நிலமாக இல்லாமல், நீர்நிலை, மேய்ச்சல் உள்ளிட்ட பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட நிலங்கள் உட்பட பல்வேறு வகையான நிலங்கள் புறம்போக்கு நிலங்களாக வகைப்படுத்தப்படுகின்றன. எந்த வகையான நிலம் என்பதை பொறுத்து, அங்கு வீடு கட்டுவது உள்ளிட்ட விஷயங்களுக்கான விதிமுறைகளும் மாறுபடும்.

Poramboke Land Electricity Connection Tamil Nadu Government

அரசு புறம்போக்கு நிலங்கள்

இந்நிலையில். புறம்போக்கு நிலங்களில் வீடு கட்டி வசிப்பவர்களுக்கு மின் இணைப்பு வழங்குவதில் இருந்த சிக்கல்களைக் கருத்தில் கொண்டு, 250 சதுர அடிக்குள் கட்டப்பட்ட வீடுகளுக்கு அரசு அதிகாரிகளிடம் தடையில்லா சான்று பெறாமலேயே வீட்டு உபயோக மின் இணைப்பு வழங்க தமிழக அரசு கடந்த மாதம் அனுமதி அளித்தது..

இதனடிப்படையில், 2 நாட்களுக்கு முன்பு, மின்வாரியம் தனது அதிகாரிகளுக்கு புதிய உத்தரவைப் பிறப்பித்திருந்தது.. அதில், "புறம்போக்கு நிலத்தில் உள்ள வீட்டின் கட்டிட பரப்பு 250 சதுர அடிக்கு மிகாமல் இருக்க வேண்டும். அந்த வீடு, சலுகை வழங்கப்படாத நில வகைகளில் அமையவில்லை என்பதையும் சம்பந்தப்பட்ட மின்வாரியப் பிரிவு அலுவலர் உறுதி செய்ய வேண்டும்.

மேய்ச்சல் நிலங்கள்

எல்லா புறம்போக்கு நிலங்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தாது. நீர்வழிப் புறம்போக்கு நிலங்கள், மேய்க்கால் மற்றும் மேய்ச்சல் புறம்போக்கு நிலங்கள், வன நிலங்கள், ராணுவக் குடியிருப்புப் பகுதிகள், ரயில்வே உள்ளிட்ட மத்திய அரசுக்குச் சொந்தமான நிலங்கள் ஆகியவற்றுக்கு இந்தச் சலுகை கிடையாது.

அதேபோல, மத நிறுவனங்கள் மற்றும் கோவில்களின் பெயரில் பட்டா உள்ள நிலங்கள், கோவில் புறம்போக்கு நிலங்களுக்கும் இந்தச் சலுகை பொருந்தாது. இந்த வகை நிலங்களுக்கு மின் இணைப்பு வழங்கும்போது தனிப் பிரிவில் கட்டணம் வசூலிக்க வேண்டும்.

புறம்போக்கு நிலத்தில் மின் இணைப்பு

புறம்போக்கு நிலத்தில் உள்ள வீட்டுக்கு மின் இணைப்பு வழங்குவதற்கு முன்பு, அந்த நிலம் எந்த வகையைச் சேர்ந்தது என்பதை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும். இதற்காக, தமிழக அரசின் தமிழ் நிலம் இணையதளத்தையும், மின் பகிர்மான கழக இணையதளத்தையும் இணைக்கும் வசதியை ஏற்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வசதி நடைமுறைக்கு வரும் வரை, சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர் அல்லது வருவாய்த் துறை அதிகாரிகளிடம் இருந்து நிலத்தின் வகையை உறுதி செய்த பிறகே மின் இணைப்பு வழங்க வேண்டும்" என்று மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

கிளம்பிய சந்தேகங்கள்?

அரசின் இந்த அறிவிப்பு ஒருபுறம் நிம்மதி அளித்தாலும், இன்னொருபக்கம் சில கேள்விகளையும், சந்தேகங்களையும் கிளப்பி விட்டுள்ளது..

250 சதுர அடிக்கு மேல் வீடு கட்டி பல வருடங்களாக வசிப்பவர்கள் என்ன செய்வது? நிலத்தின் வகையை உறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டால் கரண்ட் கனெக்‌ஷன் பெறுவதும் தாமதமாகுமா? ஏற்கனவே கரண்ட் கனெக்‌ஷனுக்காக அப்ளை செய்தவர்களுக்கும், இந்த புதிய உத்தரவு எப்படி உதவும்? என்பன போன்ற கேள்விகளுக்கும் தெளிவான விளக்கம் தேவைப்படுகிறது.

மின் இணைப்பு தந்தாலே நில உரிமையா?

இங்கே ஒரு முக்கியமான விஷயத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.. புறம்போக்கு நிலத்தில் உள்ள வீட்டுக்கு மின் இணைப்பு கிடைத்துவிட்டால், அந்த நிலம் வீட்டில் வசிப்பவருக்கு சொந்தமாகிவிடாது. மின் இணைப்பு வழங்குவதும், நிலத்துக்கு உரிமை வழங்குவதும் வெவ்வேறு விஷயங்கள். நில உரிமை சம்பந்தமான பிரச்சினைகள் சிக்கல்கள் இருந்தால், அதையெல்லாம் தனியாகத்தான் அணுக வேண்டும்..

யாருக்கு சலுகை கிடைக்கும்?

புறம்போக்கு நிலங்களில் பல வருடங்களாக குடும்பத்துடன் வசித்து வரும் மக்களுக்கு கரண்ட் என்பது கட்டாயம் தேவைதான். அதேசமயம், யாருக்கெல்லாம் இந்த சலுகை கிடைக்கும், யாருக்கு கிடைக்காது என்பதை அரசு தெளிவாக விளக்க வேண்டும். 250 சதுர அடிக்கு மேல் வீடு வைத்திருப்பவர்களின் நிலை என்ன? ஒருவேளை நிலத்தின் வகையை சரிபார்ப்பதில் தாமதம் ஏற்பட்டால் எங்கே முறையிட வேண்டும்? என்பதற்கும் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது.

இதுகுறித்து மின்வாரியமும் வருவாய்த் துறையும் தெளிவான விளக்கங்களை வழங்கினால், பொதுமக்கள் தேவையில்லாமல் அலைவதைத் தவிர்க்க முடியும்..

அதேபோல, நில உரிமை தொடர்பான பிரச்சினைகளுக்கு என்னென்ன சட்டப்பூர்வ வழிகள் இருக்கின்றன என்பதை சம்பந்தப்பட்ட நிபுணர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்வதும் அவசியம். தகுதியானவர்களுக்கு மின் இணைப்பு கிடைப்பதை எளிமைப்படுத்துவதுடன், பொதுமக்களின் சந்தேகங்களுக்கும் அரசு தெளிவான பதிலை அளிக்குமா என்பதே இப்போது எழும் அவசியமான கேள்வி....!!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+