அரசு பள்ளிக்கு சுடிதாருடன் வந்த HM.. வாசலிலேயே தடுத்த காவலாளி.. நிஜமாவே கேரளாவுலதான் இது நடந்துச்சா?
சென்னை: அரசு பள்ளிக்கு சுடிதார் அணிந்து கொண்டு வந்தாராம் அந்த பள்ளியின் தலைமை ஆசிரியை.. கடைசியில் கேட் வாசலில் நிறுத்தப்பட்டுள்ளார்.. அதுவும் ஸ்கூல் செக்யூரிட்டியால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.. இதுதான் கேரளாவில் ஹாட் டாப்பிக்காக ஓடிக் கொண்டிருக்கிறது.. என்ன நடந்தது கேரளாவில்???
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் கொட்டாரக்கரை அருகே உள்ளது நெடுவத்தூர் என்ற பகுதி.. இங்கு ஒரு அரசு உதவிபெறும் பள்ளி இயங்கி வருகிறது..

இந்த பள்ளியின் தலைமை ஆசிரியையாக சிந்து எஸ். நாயர் பணிபுரிந்து வருகிறார்.. நேற்று முன்தினம் காலை வழக்கம்போல், தலைமை ஆசிரியை பள்ளிக்கு வந்துள்ளார்.. ஆனால், சுடிதார் அணிந்து பள்ளிக்கு வந்தாராம்.
சுடிதாருடன் அரசு பள்ளிக்கு வந்த ஹெச்.எம்
ஆனால் அவர் ஹெச்.எம் என்று தெரிந்துகூட, கேட் வாசலில் இருந்த செக்யூரிட்டி அவரை பள்ளிக்குள் விடவில்லையாம்.. மாணவர்களின் சத்துணவு திட்டத்திற்காக முட்டைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஒரு ஆட்டோவில் ஏற்றி வந்த அவரை, பள்ளியின் காவலாளி கேட்டை திறக்காமல் தடுத்து நிறுத்தியுள்ளார்.
பிறகுதான் தெரிந்தது, அந்த பள்ளியின் மேனேஜர் சுரேஷ் குமார் பிறப்பித்த கட்டளையின்படி, சேலை அணியாமல் சுடிதார் அணிந்து வரும் ஆசிரியர்களை உள்ளே அனுமதிக்க முடியாது என்று செக்யூரிட்டி கூறியுள்ளார்.
கேரளா அரசு பள்ளி
பள்ளி வாசலில் தடுத்து நிறுத்தப்பட்டதால் அதிர்ச்சியடைந்த தலைமை ஆசிரியை, தான் கொண்டு வந்த உணவுப் பொருட்களுடன் கேட்டின் முன்பே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். மாணவர்கள் மற்றும் இதர ஆசிரியர்கள் வந்த பிறகும் பள்ளி நிர்வாகம் தனது பிடிவாதத்தை தளர்த்தவில்லை. இது குறித்து தகவலறிந்து வந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
நிலைமை மோசமடைவதை கண்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பள்ளி நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய பிறகு, போலீசாரின் பாதுகாப்போடு தலைமை ஆசிரியை தனது அலுவலகத்திற்குள் அழைத்துச் செல்லப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து அவர் கொட்டாரக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
தலைமை ஆசிரியை
அந்தப் புகாரில், பள்ளி மேலாளர் தன்னை தொடர்ந்து துன்புறுத்தி வருவதாகவும், அரசு பணிகளை செய்ய விடாமல் தடுத்து ஒரு பொது ஊழியரை அவமதித்துவிட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாதுகாப்பு ஊழியர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
இந்த சம்பவம் கேரளாவில் உள்ள பல்வேறு ஆசிரியர் சங்கங்கள் மற்றும் அரசியல் அமைப்புகளிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தனிநபரின் உடை சுதந்திரத்தில் தலையிடுவதும், அரசு விதிகளை மதிக்காமல் நடப்பதும் சட்டவிரோதமானது என்று அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
கேரளாவில் நம்ப முடியாத சம்பவம்
ஆசிரியர்கள் தங்களுக்கு விருப்பமான மற்றும் சௌகரியமான கண்ணியமான உடைகளை அணியலாம் என்று கேரள அரசு ஏற்கனவே அரசாணை வெளியிட்டிருந்தது. அரசின் இந்த உத்தரவையும் மீறி, பள்ளி மேலாளர் தன்னிச்சையாக இத்தகைய தடையை விதித்துள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கல்வி துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும், முறையான அறிக்கை கிடைத்தவுடன் பள்ளி மேலாளர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர். ஒரு தலைமை ஆசிரியருக்கே இந்த நிலைமை என்றால், மற்ற பெண் ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் சுதந்திரம் கேள்விக்குறியாக உள்ளதாகப் பலரும் சோஷியல் மீடியாவில் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.
இந்தியாவிலேயே கல்வியறிவு அதிகம் பெற்ற மாநிலமான கேரளா திகழ்கிறது.. பெண் கல்விக்கும், தனிநபர் சுதந்திரத்திற்கும் பெயர் பெற்ற கேரள மண்ணிலேயே, ஒரு தலைமை ஆசிரியைக்கு அவரது உடையின் அடிப்படையில் இந்நிலை ஏற்பட்டிருப்பது வேதனையான முரண்பாடாகவே பார்க்கப்படுகிறது...!!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications