சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடிநீர் இல்லை, விளக்கு இல்லை.. சுத்தமற்ற தரையில் அமரும் மாணவர்கள்.. அரசுப் பள்ளியில் அவலம்

Google Oneindia Tamil News

சென்னை: முகப்பேர் மேற்கு பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதி கூட இல்லாத காரணத்தினால் பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். மேலும் சுகாதாரமில்லாத காரணத்தினால் மாணவர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படும் அவல நிலையும் உருவாகியுள்ளது.

சென்னை மேற்கு முகப்பேர் பகுதியில் பல ஆண்டுகளாக இயங்கி வருகிறது அரசு உயர்நிலைப் பள்ளி. இங்கு 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்த பள்ளியில் 200 தற்போது வரை 200-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும்... ஒரே நாளில் 2 பேர் போர்க்குரல்..! அதிமுகவிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்க வேண்டும்... ஒரே நாளில் 2 பேர் போர்க்குரல்..!

அரசுப் பள்ளியில் படிக்க வரும் மாணவர்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லாமலும் முறையான கழிப்பறை வசதி மின் வெளிச்சம் இல்லாமலும் தரையில் உட்கார்ந்து மாணவர்கள் பாடங்களை படித்து வருவதாகவும் புகார் கூறுகின்றனர்.

பள்ளித் தலைமையாசிரியர்

பள்ளித் தலைமையாசிரியர்

இது குறித்து அப்பள்ளி மாணவர்கள் அந்த பள்ளியின் தலைமையாசிரியர் சாந்தியிடம் கேட்டபோ அவர் முறையான பதில் அளிக்காமல் இதை பற்றியெல்லாம் நீங்கள் கேட்டால் உங்களை இறுதி தேர்வில் தோல்வி அடைய செய்வேன் என்றும் இதனால் உங்கள் லைஃப்பே போய்விடும் என்றும் அச்சுறுத்தும் வார்த்தைகளால் மாணவர்களை திட்டுவதாகவும் தெரிகிறது.

பள்ளித் திறப்பு

பள்ளித் திறப்பு

மேலும் நீண்ட நாட்களாக பள்ளி திறக்கப்படாமல் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு,பள்ளி திறந்துள்ள நிலையில் பள்ளி வளாகத்திற்குள் வளர்ந்து கிடக்கும் புல், செடிகள் மற்றும் கொடிகளை மாணவர்களை வைத்தே சுத்தம் செய்து வருவதாகவும் புகார் எழும்பியுள்ளது. ஏற்கனவே இருந்த பழைய தலைமை ஆசிரியரும் இதே காரியத்தை தான் செய்து வந்தார் எனவும் கூறுகின்றனர்.

சந்தை

சந்தை

மேலும் மாணவர்கள் உட்காரும் இருக்கைகளை வெளியில் உள்ள நபர்களுக்கு கள்ள சந்தையில் தலைமையாசிரியர் சாந்தி விற்று வருவதாகவும் ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அரசுப் பள்ளியிலேயே இந்த நிலை உருவாகியுள்ளதால் மாணவர்கள் மிகுந்த மன அழுத்தத்தில் இருக்கிறார்கள். உடனடியாக தமிழக அரசு மற்றும் தமிழக பள்ளிக் கல்வித் துறை இதை கவனத்தில் கொண்டு அந்த பள்ளி தலைமையாசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் கூறுகின்றனர்.

சுத்தம் இல்லாத தரை

சுத்தம் இல்லாத தரை

கொரோனா பரவி வரும் நிலையில் சுத்தம் சுகாதாரம் இல்லாத தரையில் அமர்ந்து மாணவர்கள் படித்தால் நோய் பரவும் அபாயம் உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லம் தேடி கல்வி என்ற கற்றலை ஊக்குவிக்க புதிய திட்டத்தை தமிழக அரசு ஒரு பக்கம் தொடங்கியுள்ளது. மறுபக்கம் இது போன்று சுகாதாரமில்லாத சூழலை சிலர் உருவாக்கி மாணவர்கள் படிக்க முடியாத அளவுக்கு செல்கிறார்கள். இதை சம்பந்தப்பட்ட அதிகாரிள் கண்டறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

English summary
Chennai Mugappair West Government school students sit in the contaminated floor. There are no baci amenity like drinking water facility in that school.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X