அரசு ஊழியர்களை போல கோவில் பெண் ஊழியர்களுக்கு ஜாக்பாட்! 12 மாத சம்பளத்துடன் லீவு.. தமிழக அரசு சூப்பர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு சலுகை, இப்போது கோவில்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது... இதுவரை 9 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்பு, இனிமேல் 12 மாதங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, ஒரு வருடம் முழுவதும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு கிடைக்கப் போகிறது. அதை பற்றி இங்கே விரிவாக பார்ப்போம்...!!

தமிழ்நாடு முழுவதும் இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் ஆயிரக்கணக்கான கோவில்கள், மடங்கள் மற்றும் அறக்கட்டளைகள் செயல்பட்டு வருகின்றன.

Government Women Employees

மொத்தம் சுமார் 46,341 கோவில்கள் மற்றும் மத நிறுவனங்கள் இந்தத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன. இதில் 43,677 கோவில்கள், 24 சமணக் கோவில்கள், 45 மடங்கள், மடங்களுக்கு சொந்தமான 81 கோவில்கள் உள்ளிட்டவை அடங்கும்.

தமிழக பெண் ஊழியர்கள்

இந்தக் கோவில்களில் ஆயிரக்கணக்கான பெண் ஊழியர்கள் பல்வேறு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். கோவில் நிர்வாகம், அலுவலகப் பணிகள் எனப் பல்வேறு பொறுப்புகளில் இருக்கும் இவர்களின் குடும்ப நலனைக் கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த முக்கிய முடிவை எடுத்துள்ளது.

இதுவரை தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு வழங்கி வந்த மகப்பேறு விடுப்பு சலுகை, திருமணமான பெண் ஊழியர்களுக்கு இரண்டு குழந்தைகள் வரை பொருந்தும். அதன்படி, 12 மாதங்கள் முழுச் சம்பளத்துடன் விடுப்பு வழங்கப்படுகிறது. இதே சலுகையைத் திருக்கோவில்களில் பணிபுரியும் பெண் ஊழியர்களுக்கும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட நாட்களாக இருந்து வந்தது.

மகப்பேறு விடுப்பு சலுகை,

இந்நிலையில், அந்தக் கோரிக்கையை ஏற்று, கோவில் பெண் ஊழியர்களுக்கும் 9 மாதங்களாக இருந்த மகப்பேறு விடுப்பை 12 மாதங்களாக உயர்த்தி தமிழக அரசு இப்போது அதிரடியாக அறிவித்திருக்கிறது.. இதனால் குழந்தை பிறந்த பிறகு தாய்மார்களுக்கு குழந்தையை பார்த்துக்கொள்ள கூடுதல் அவகாசம் கிடைக்கும்... அதுவும் சம்பள இழப்பு இல்லாமல் ஒரு வருடம் விடுப்பு கிடைப்பது அவர்களுக்கு மிக மிக முக்கியமான சலுகையாக இருக்கும்.

அதுமட்டுமல்லாமல், ஓய்வுபெறும் கோவில் ஊழியர்களுக்கும் தமிழக அரசு இன்னொரு சர்ப்ரைஸ் சலுகையை அறிவித்துள்ளது. பொதுவாக, ஊழியர்கள் பணியில் இருக்கும்போது பயன்படுத்தாமல் சேர்த்து வைத்திருக்கும் ஈட்டிய விடுப்பை, ஓய்வுபெறும்போது பணமாக பெற்றுக்கொள்ள முடியும்.

கோயில் ஊழியர்களுக்கு விடுப்பு

இதுவரை கோவில் ஊழியர்கள் அதிகபட்சமாக 210 நாட்களுக்கான ஈட்டிய விடுப்பை மட்டுமே பணமாகப் பெற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால் இப்போது அந்த உச்சவரம்பு 240 நாட்களாக உயர்த்தப்பட்டுள்ளது... இதன் மூலம் ஓய்வுபெறும் ஊழியர்கள் கூடுதலாக 30 நாட்களுக்கான விடுப்புப் பணத்தைப் பெற முடியும். தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதே அளவிலான சலுகை இனி கோவில் ஊழியர்களுக்கும் கிடைக்கும்.

இந்த 2 அறிவிப்புகளையும் நடைமுறைப்படுத்துவதற்காக, இந்து சமய நிறுவனங்களின் பணியாளர் (பணி நிபந்தனைகள்) விதிகள், 2020-ல் உரிய திருத்தங்கள் செய்யப்பட்டு அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் உள்ளதாவது: "இந்து சமய நிறுவனங்களின் பணியாளர் (பணி நிபந்தனைகள்) விதிகள் 2020-ல் உரியதிருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்மூலம் ஓய்வு பெறும் கோயில் பணியாளர்கள், அரசு ஊழியர்களுக்கு இணையாக தங்களது ஈட்டிய விடுப்பை அதிகபட்சமாக 240 நாட்கள் வரை ஒப்படைத்து, அதற்குரிய பணப்பலனைப் பெறும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

12 மாத மகப்பேறு விடுப்பு

கோயில்களில் பணிபுரியும் பெண் பணியாளர்கள், அரசு ஊழியர்களுக்கு இணையாக 12 மாத மகப்பேறு விடுப்பினை பெற்று பயனடையவழிவகை செய்யப்பட்டுள்ளது. கோயில் பணியாளர்களின் பணிநலன், குடும்ப நலன், சமூகப் பாதுகாப்பை மேம்படுத்தும் வகையில் இரு முக்கிய கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன" என்று கூறப்பட்டுள்ளது.

ஆக, ஒருபக்கம் குழந்தையை வளர்க்கும் காலத்தில் பெண்களுக்கு நிம்மதி அளிக்கும் மகப்பேறு விடுப்பு உயர்வு, இன்னொருபக்கம் ஓய்வுபெறும்போது கூடுதல் பணப்பலன்... இப்படி கோவில் ஊழியர்களின் குடும்ப நலனையும் ஓய்வுக்காலப் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு இந்த டபுள் நடவடிக்கைகளை எடுத்துள்ளது... ஆயிரக்கணக்கான ஊழியர்களுக்கு இந்த அறிவிப்புகள் பயனளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+