ஆட்டுக் தாடியா ஆளுநர்? கடைசி நேரத்தில் ’பவரை’ காட்டி.. விஜயை அலற விட்ட அர்லேகர்! உச்சகட்ட பரபரப்பு!
சென்னை: தமிழ்நாடு அரசியல் களம் தற்போது உச்சகட்ட பரபரப்பில் இருக்கிறது. 108 தொகுதிகளில் வென்ற விஜய் ஆட்சி அமைப்பாரா இல்லையா என்ற கேள்வி தான் தற்போது அனைவரின் மனதிலும் எழுந்துள்ளது. இந்த நிலையில் ஆளுநருக்கு என்று சில அதிகாரங்கள் இருக்கும் நிலையில் அதை பயன்படுத்தி தனது பவரை காட்டிவிட்டார் என சொல்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தமிழ்நாடு அரசியல் களம் தற்போது மிகப்பெரிய திருப்புமுனையை சந்தித்திருக்கிறது. 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 தொகுதிகளை கைப்பற்றி தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், ஆட்சியை அமைப்பதற்கான இறுதி கட்ட முயற்சிகள் கைகொடுக்காத சூழல் நிலவுகிறது.

இதனால் "விஜய் முதல்வராக பதவியேற்பாரா?" என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் மட்டுமல்லாமல் பொதுமக்களிடமும் பெரிய விவாதமாக மாறியுள்ளது. இந்த தேர்தலில் யாரும் எதிர்பாராத அளவுக்கு தவெக வெற்றி பெற்றது தமிழக அரசியலையே தலைகீழாக மாற்றியுள்ளது.
விஜய் ஆட்சி
திமுக, அதிமுக என இரு பெரிய கட்சிகளையும் பின்னுக்கு தள்ளி, முதல் தேர்தலிலேயே 108 தொகுதிகளை கைப்பற்றியிருப்பது அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய சம்பவமாக பார்க்கப்படுகிறது. இதனால் தவெக தொண்டர்கள் விஜய் விரைவில் முதல்வராக பதவியேற்பார் என்ற உற்சாகத்தில் இருந்தனர். இதற்கிடையில் காங்கிரஸ் கட்சியும் தனது ஆதரவை வெளிப்படையாக தெரிவித்தது.
தவெக பெரும்பான்மை
அதன்பிறகு, கட்சியின் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் மற்றும் ஆதரவு கடிதங்களுடன் ஆளுநர் மாளிகைக்கு சென்ற விஜய், ஆட்சியமைக்க அழைப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் அதற்கான உடனடி முடிவு வெளியாகாதது அரசியல் களத்தில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதோடு மட்டும் இல்லாமல், விஜய்க்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளில் திடீர் மாற்றங்கள் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியானது.
தவெக அதிர்ச்சி
அவரது இல்லம் அருகே வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது தவெக ஆதரவாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், "ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்த ஆரம்பித்துவிட்டார்" என்ற கருத்தும் அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது. தமிழக சட்டசபையில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தவெக வசம் தற்போது 108 உறுப்பினர்களே உள்ளனர்.
ஆளுநர் அர்லேகர்
காங்கிரஸ் ஆதரவு கிடைத்தாலும், முழு பெரும்பான்மைக்கான எண்ணிக்கை இன்னும் எட்டப்படவில்லை என்பதால், ஆளுநர் உடனடியாக அழைப்பு விடுப்பதில் எச்சரிக்கையாக இருப்பதாக கூறப்படுகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தின் படி, தனிப்பெரும் கட்சித் தலைவரை ஆட்சி அமைக்க அழைத்து, பின்னர் சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க கால அவகாசம் வழங்கும் அதிகாரம் ஆளுநருக்கு உள்ளது. இதற்கு முன்பும் பல மாநிலங்களில் இப்படியான நடைமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன.
நம்பிக்கை வாக்கெடுப்பு
குறிப்பாக, முதலில் பதவியேற்பு செய்து வைத்து, பின்னர் 10 அல்லது 15 நாட்களுக்குள் நம்பிக்கை வாக்கெடுப்பில் பெரும்பான்மையை நிரூபிக்க சொல்லப்பட்ட சம்பவங்கள் இந்திய அரசியலில் ஏராளமாக நடந்துள்ளன. ஆனால் இம்முறை, முழு ஆதரவு கடிதங்களையும் முதலில் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஆளுநர் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கு பின்னணி நடந்தது என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
உச்சநீதிமன்ற தீர்ப்பு
சமீப காலங்களில் உச்சநீதிமன்றம் வழங்கிய சில தீர்ப்புகளில், "எந்த கட்சி உண்மையான பெரும்பான்மையைக் கொண்டிருக்கிறது என்பதை தெளிவாக உறுதி செய்த பின்னரே ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும்" என்ற கருத்துகள் வலியுறுத்தப்பட்டிருந்தன. அதையே தற்போது ஆளுநர் பின்பற்றுகிறார் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். இதனால் தற்போது தமிழக அரசியலில் ஒவ்வொரு மணி நேரமும் முக்கியத்துவம் பெற்றுள்ளதாக மாறியுள்ளது.
ஆளுநரின் அதிகாரம்
இதற்கிடையே ஆட்சி அமைக்க தேவையான எம்.எல்.ஏ ஆதரவை தவெக திரட்டுமா? காங்கிரஸ் மட்டும் போதுமா? இடதுசாரிகள் மற்றும் பிற கட்சிகள் என்ன நிலைப்பாட்டை எடுக்கும்? என்பதே மிகப்பெரிய கேள்வியாக உள்ளது. மற்றொரு பக்கம், இந்த விவகாரம் மூலம் "ஒரு மாநிலத்தில் ஆளுநரின் அதிகாரம் எவ்வளவு முக்கியமானது" என்ற விவாதமும் மீண்டும் எழுந்துள்ளது. தேர்தலில் வெற்றி பெற்ற கட்சி இருந்தாலும், அரசியலமைப்புச் சட்ட நடைமுறைகள் மற்றும் ஆளுநரின் அதிகாரம் தான் இறுதி முடிவை தீர்மானிக்கும் என்பதையும் இந்த அரசியல் சூழல் மீண்டும் நினைவூட்டியுள்ளது.
-
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
விஜய் டெல்லி பயணம் 2.0.. அமித் ஷாவை எப்படியாவது சந்திக்க காய் நகர்த்தும் முதல்வர்.. மீண்டும் ட்ரிப்? -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
அதிமுகவில் நீடிக்கிறீர்களா? கேள்வியை தவிர்த்துவிட்டு எஸ்கேப்பான முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர்! -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications