"ஏஜென்ட்".. இது புரியாத புதிராக இருக்கிறதே.. ஆளுநர் ரவியால் பாஜகவிற்கு சிக்கல்.. உடைக்கும் சுமந்த்
ரம்மியை கேம் ஆப் ஸ்கில் என்று கோர்ட் கூறியுள்ளது. அப்படி இருக்க கோர்ட்டில் ரம்மி வழக்குகள் நிற்காது என்று அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் தெரிவித்துள்ளார்.
சென்னை: திமுக தான் நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக காட்டிக்கொண்டு கடைசியில் ஆளுநர்தான் தடுத்துவிட்டார் என்று காட்டிக்கொள்வதற்கு வசதியாக ஆளுநரின் செயல்பாடுகள் இருப்பதாக அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தைத் தடை செய்யும் சட்டத்தை ஆளுநர் ஆர். என் ரவி திருப்பி அனுப்பி உள்ளார். இந்த சட்டத்தை நிறைவேற்ற தமிழ்நாடு அரசுக்கு சட்ட ரீதியாக தகுதி உள்ளதா என்ற விளக்கத்தை அவர் கேட்டு உள்ளார். இதையடுத்து தமிழ்நாடு சட்டசபையில் மீண்டும் இந்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. இரண்டாவது முறை நிறைவேற்றப்படுவதால் இந்த சட்டத்தை கண்டிப்பாக டெல்லிக்கு அனுப்ப வேண்டிய கட்டாயத்தில் ஆளுநர் ஆர். என் ரவி இருக்கிறார்.
ஆளுநரின் இந்த செயல்பாடு குறித்து அரசியல் விமர்சகர் சுமந்த் சி ராமன் ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி
அவர் தனது பேட்டியில், ஆளுநர் என்ன காரணத்திற்காக ஆன்லைன் ரம்மி மசோதாவை திருப்பி அனுப்பினார். இதனால் ஆளுநருக்குத்தான் சிக்கல். திமுகவையே மக்கள் பாராட்டுவார்கள். அவரின் முடிவு இல்லாஜிக்கல் முடிவாக பார்க்கப்படுகிறது. ஆளுநரின் நடவடிக்கைகள் புரியாத புதிராக உள்ளது. அவரை பாஜகவின் ஏஜென்ட் என்று திமுக சொல்கிறது. ஆனால் அவர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் பாஜகவிற்கு எதிராக உள்ளது. பாஜகவிற்கு எதிரான பல விஷயங்களை ஆளுநர் செய்கிறார். சரியாக சொல்ல வேண்டும் என்றால் ஆளுநர் திமுகவின் ஏஜென்ட் போல செயல்படுகிறார்.

என்ன சொன்னார்?
அவரின் செயலால் பாஜகவிற்கு இன்னும் பிரச்சனைதான் ஏற்படுகிறது. அவரின் செயலால் பாஜகவிற்கு ஆதரவாக எதுவும் இல்லை. திமுக தான் நிறைவேற்ற முடியாத தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியதாக காட்டிக்கொண்டு கடைசியில் ஆளுநர்தான் தடுத்துவிட்டார் என்று காட்டிக்கொள்வதற்கு வசதியாக ஆளுநர் இப்படி செயல்படுகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது. மத்திய அரசு இந்த விளையாட்டை தடை செய்யலாம். ஆனால் அவர்கள் தடை செய்ய மாட்டார்கள். ஆனால் அதற்கும் எதிராக கோர்டில் இவர்கள் களமிறங்க முடியும்.

ஆளுநர் ரவி
இது கேம் ஆப் ஸ்கில் என்று கோர்ட் கூறியுள்ளது. அப்படி இருக்க கோர்ட்டில் ரம்மி வழக்குகள் நிற்காது. சரியாக அரசாங்கம் இதை எப்படி ரெகுலேட் செய்ய போகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது. முதலில் ரம்மி விளம்பரங்களை தடை செய்ய வேண்டும். யூ டியூபில் ரம்மி விளம்பரங்களை தடை செய்ய வேண்டும். அதை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர முயன்று இருக்க வேண்டும். அப்படி இருக்கும் போது செயலியை தடை செய்வது எவ்வளவு தேவையற்ற வேலை இது.. கோர்டில் ரம்மி சட்டம் நிற்காது. ஏற்கனவே மூன்று மாநிங்களில் இயற்றப்பட்ட சட்டங்களை கோர்ட் செல்லாது என்று கூறி உள்ளது.

கோர்ட் தீர்ப்பு
அந்த கோர்ட் தீர்ப்புகளே இந்த சட்டத்திற்கு எதிராக சென்றுவிடும். 44 உயிர்கள் தமிழ்நாட்டில் இதனால் பலியாகி உள்ளனர். அது வருந்தத்தக்க விஷயம்தான். டாஸ்மாக் மூலமும்தான் மக்கள் இறக்கிறார்கள். அதை இவர்கள் தடை செய்யவில்லையே. ரம்மி விவகாரத்தில் மக்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கலாம். அதை கட்டுப்படுத்தலாம். அதுதான் சரியான முறையாக இருக்கும்.அரசுக்கு அதிகாரம் இருக்கிறதா என்பதே டவுட்டாகி இருக்கும் போது அரசு சட்டம்தான் இயற்ற வேண்டும் என்று நினைப்பது சரியாக படவில்லை.

ஒப்புதல்
ஆளுநர் இதற்கு ஒப்புதல் அளித்து இருக்க வேண்டும். அதன்பின் அது சட்டமாகும். சட்டமான பின் ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள் கோர்ட்டிற்கு செல்லும். அப்படி சென்றால் ஏற்கனவே கொடுக்கப்பட்ட தீர்ப்பின் அடிப்படையில் 3-4 மாதங்களில் கோர்ட் மீண்டும் சட்டத்தை நீக்கும். இப்படித்தான் நடக்கும். இதற்கு பதிலாக இந்த துறையை கட்டுப்படுத்த வேறு மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம். அந்த நிறுவனங்களுடன் பேசி, ஒரு நபர் இத்தனை முறைதான் விளையாட அனுமதிக்க வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடத்தி இருக்கலாம். ஆனால் அப்படி செய்யவில்லை. ரம்மி நிறுவன அதிகாரிகள் ஆளுநரை மட்டும் சந்தித்தது சரியில்லைதான். அவர்கள் முதல்வரையும் பார்த்து இருக்கலாம். இதை சட்டத்தை வைத்து தடை செய்ய முடியாது, மாறாக இந்த துறையை கட்டுப்படுத்த வேறு மாதிரியான நடவடிக்கைகளை எடுக்கலாம், என்று கூறி உள்ளார்.












Click it and Unblock the Notifications