உதயநிதியை பார்த்து சட்டென சிரித்த ஆர். என் ரவி.. தோளில் தட்டிய ஸ்டாலின்.. அந்த ரியாக்சன்! என்னாச்சு?
சென்னை: தமிழ்நாடு அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் இன்று ஆளுநர் மாளிகையில் பதவி ஏற்றார். இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பபட்டார்.
தமிழ்நாடு அமைச்சரவை இன்று மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. உதயநிதி ஸ்டாலின் எம்எல்ஏ இன்று தமிழ்நாடு அமைச்சராக பதவி ஏற்று உள்ளார். இன்று இவருக்கு விளையாட்டு, இளைஞர் நலன் ஆகிய துறைகள் இன்று அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமைச்சராக பொறுப்பேற்க உள்ள உதயநிதி ஸ்டாலின் இன்று பல்வேறு சந்திப்புகளை, பயணங்களை மேற்கொள்ள உள்ளார். இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் செய்துள்ள ட்விட்டில், எப்போதும் வழிநடத்தும் மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களிடம், சமூகநீதி திட்டங்களை செயல்படுத்தி தமிழர் நலன் காக்கும் திராவிட மாடல் அரசின் அமைச்சரவையில் பங்கேற்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தெரிவித்து வாழ்த்து பெற்றேன். பதவியாக கருதாமல் பொறுப்பாக உணர்ந்து என்றும் பணியாற்றிடுவேன், என்று கூறி உள்ளார்.

பதவி ஏற்பு
சரியாக காலை 9.30 மணிக்கு இன்று உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்றார். உதயநிதி ஸ்டாலி என்னும் நான் என்று குறிப்பிட்டு உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார். அச்சமும், ஒருதலை சார்பும் இன்றி, விருப்பு, வெறுப்பு இன்றி அமைச்சராக செயல்படுவேன் என்று உதயநிதி ஸ்டாலின் குறிப்பிட்டார். இதில் கடவுளின் பெயரில் பதவி ஏற்பேன் என்று சொல்லாமல் உதயநிதி ஸ்டாலின் பதவி ஏற்றார். அதன்பின் ரகசிய காப்பு பிரமாணத்தில் உதயநிதி ஸ்டாலின் கையெழுத்து போட்டார்.

ஆளுநர் ஆர். என் ரவி
ஆளுநர் ஆர். என் ரவி இதையடுத்து உதயநிதி ஸ்டாலினின் பதவி பிரமாண பாத்திரத்தை கையெழுத்து போட்டார். இந்த நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பபட்டார். பதவி ஏற்ற பின் முதல்வர் ஸ்டாலின் காலில் உதயநிதி ஸ்டாலின் விழுந்து, அப்பா - மகன் என்ற முறையில் ஆசி பெற்றார். இதையடுத்து ஆளுநர் ஆர். என் ரவியிடம் பூக்கொத்து கொடுத்து உதயநிதி ஸ்டாலின் நன்றி தெரிவித்தார். இதையடுத்து உதயநிதி ஸ்டாலினை பார்த்து ஆளுநர் ஆர். என் சிரித்தார்.

உதயநிதி ஸ்டாலின்
அந்த நொடியில் உதயநிதி ஸ்டாலின் தோளில் முதல்வர் ஸ்டாலின் தட்டிக்கொடுத்தார். அதோடு உதயநிதி ஸ்டாலினை பார்த்து சிரித்தபடி இருந்தார். இதையடுத்து உதயநிதி ஸ்டாலின் முதல்வர் ஸ்டாலினுக்கு இன்னொரு பூங்கொத்து கொடுத்தார். ஆளுநர் ஆர். என் ரவிக்குக்கும் - முதல்வர் ஸ்டாலினுக்கும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் உள்ளன. இரண்டு தரப்பும் பல்வேறு விஷயங்களில் கடுமையான மோதி வருகின்றன. இந்துத்துவா குறித்தும், சானதானம் குறித்தும் ஆளுநர் ஆர். என் ரவி பேசுவது தமிழ்நாடு அரசியலில் புயலை கிளப்பி உள்ளது. சமீப நாட்களாக தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி பல்வேறு மேடைகளில் தமிழ்நாடு வரலாற்று, கலாச்சாரம், பழமை, இந்துத்துவா, சனாதன தர்மம் என்று பல விஷயங்கள் பற்றி பேசி வருகிறார்.

பதவி நீக்கம்
இதனால் ஆளுநரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும் திமுக கோரிக்கை விடுத்து வருகிறது. இது தொடர்பாக குடியரசுத்தலைவரிடமும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதேபோல் நாடாளுமன்றத்திலும் எம்பி வில்சன் ஆளுநரை நீக்க தனி நபர் மசோதா கொண்டு வந்துள்ளார். ஆனாலும் இன்று அதை எல்லாம் காட்டிக்கொள்ளாமல் ஆளுநர் ஆர். என் ரவி சிரித்தபடி முதல்வர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினுடன் நெருக்கமாக காணப்பட்டார். இவர்கள் நெருக்கமாக சிரித்தபடி காணப்பட்டனர்.
-
ஒவ்வொரு அமைச்சருக்கும் டார்கெட் நிர்ணயித்த முதல்வர் விஜய்.. கேபினட் மீட்டிங் பற்றி நிர்மல் விளக்கம்! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு?












Click it and Unblock the Notifications