அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா- தமிழ்நாட்டு மக்கள் தீபம் ஏற்றி கொண்டாட ஆளுநர் ரவி வேண்டுகோள்
சென்னை: அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு தமிழ்நாட்டு மக்கள் நாளை தீபம் ஏற்றி கொண்டாட வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்டமான ராமர் கோவில் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. அயோத்தியில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மதத் தலைவர்கள், பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா நாளில் மத்திய அரசு அரை நாள் விடுமுறை அறிவித்துள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் நாளை விடுமுறை அறிவித்துள்ளன.
அத்துடன் அயோத்தி ராமர் கோவில் திறப்பு நாளில் பொதுமக்கள் வீடுகளில் தீபம் ஏற்றி வழிபாடு நடத்த வேண்டும் என ஏற்கனவே பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். தற்போது தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியும் இதே வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: நமது தேசம் இப்போதெல்லாம் ஸ்ரீ ராம பக்தியில் மூழ்கியுள்ளது. நமது தமிழ்நாட்டு சகோதர, சகோதரிகள் மத்தியில் இதை நானே பார்த்து உணர்ந்திருக்கிறேன். 'ஸ்ரீ ராமர்' பாரதத்தின் தேசிய அடையாளம். நாளை ஜனவரி 22 ஆம் தேதி அயோத்தியில் பால ராமர் பிராண பிரதிஷ்டையுடன் தேசம் ஒரு அற்புதமான ஸ்ரீ ராமர் கோயிலை பெறும். இந்த வரலாற்றுப் பொன்னாளை ஒவ்வொரு வீட்டின் முன்பும் தீபம் ஏற்றி ஒட்டுமொத்த தேசமும் கொண்டாடும். தமிழ்நாட்டின் சகோதர, சகோதரிகள் அனைவரும் தங்கள் வீடுகள் மற்றும் குடியிருப்புகள் முன்பு தீபம் ஏற்றி இந்நாளை கொண்டாடி வழிபடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஆளுநர் ஆர்.என்.ரவி தமது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications