ஆளுநர் ரவி மூன்று நாள் பயணமாக ஊட்டி புறப்பட்டார்..பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கோவை புறப்பட்டு சென்றுள்ளார். மூன்று நாள் பயணமாக ஊட்டி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ஆளுநர் வருகையை முன்னிட்டு ஊட்டியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று மாலை கோவை புறப்பட்டு சென்றார். மூன்று நாள் பயணமாக ஊட்டி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி அங்கு பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார். ஆளுநர் ஆர்.என். ரவி வருகையை ஒட்டி ஊட்டியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Governor Ravi leaves for Ooty on a three-day visit will Participate various government programs

ஆளுநர் தங்கும் இடத்திலும் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். ஊட்டியில் மூன்று நாட்கள் தங்கியிருக்கும் ஆளுநர் பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் திட்டமிட்டு இருக்கிறார்.

முன்னதாக இன்று காலை சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் 'ஒரே பாரதம் உன்னத பாரதம்' திட்டத்தின் கீழ் கலாச்சார பரிமாற்ற நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக பீகாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருகை தந்துள்ள மாணவர்களிடையே ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார். இதில், மாணவர்களின் பல்வேறு கேள்விகளுக்கு ஆளுநர் பதில் அளித்தார்.

அப்போது, வாழ்க்கையில் வெற்றி பெறும் நேரத்தில் தோல்வி அடைந்தால் எப்படி அதில் இருந்து மீண்டு முன்னேறுவது என மாணவர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, "வாழ்வில் தோல்வி என எதுவுமே இல்லை. அது வெறும் சறுக்கல்கள் மட்டுமே. சறுக்கல்கள் அடையாத நபர்கள் யாருமே இருக்க மாட்டார்கள். நான் இளம் வயதில் திருமணம் செய்து கொண்டேன்.

எனது திருமணம் குழந்தை திருமணம். திருமணத்தின்போது எனது மனைவி சிறுமியாக இருந்தார். எனது மனைவி கல்லூரிக்குச் செல்லவில்லை. ஆனால் எனக்கு பக்க பலமாக இருந்தார். நான் உலகத்தையே எதிர்க்கும் திறனை அவர் எனக்கு அளித்தார். அதுபோல குடும்பத்தினர் நம் பக்கம் இருந்தால் நம்மால் சாதிக்க முடியும்" என்று கூடியிருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+