"2 துருவங்கள்".. சால்வை போர்த்திய முதல்வர்.. கையெடுத்து கும்பிட்ட ஆளுநர் ரவி.. சுவாரசிய சம்பவம்!
சென்னை: முதல்வர் ஸ்டாலினும் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவியும் சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் ஒன்றாக கலந்து கொண்டனர். இந்த நிகழ்விற்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை முதல்வர் ஸ்டாலின் வரவேற்றார்.
முதல்வர் ஸ்டாலினுக்கும் ஆளுநர் ரவிக்கு நேரடியாக எந்த விவாகரத்திலும் மோதல் இல்லை. ஆனாலும் நீட், துணை வேந்தர் நியமனம் உள்ளிட்ட பல விவகாரங்களில் இரண்டு தரப்பிற்கும் இடையில் கடுமையான கருத்து வேறுபாடு உள்ளது.
ஆளுநர் ரவியை விமர்சனம் செய்து முதல்வர் ஸ்டாலின் டெல்லி, கேரளா உள்ளிட்ட பல இடங்களில், பல மேடைகளில் பேசி இருக்கிறார்.

ஆளுநர் ரவி
ஆளுநரும் அரசிடம் கேட்காமல் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் மாநாட்டை நடத்தியது சர்ச்சையானது. முக்கியமாக இரண்டு தரப்பிற்கும் இடையில் நீட் விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையானது. நீட் மசோதாவை ஆளுநர் டெல்லிக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தியது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது. தமிழ்நாடு அரசு ஆளுநருக்கு கடும் அழுத்தத்தை கொடுத்தது. கடைசியில் ஆளுநர் ரவி நீட் மசோதாவை டெல்லிக்கு அனுப்பினார்.

டெல்லி பயணம்
ஆனாலும் துணை வேந்தர் நியமன மசோதா இன்னும் நிலுவையில் உள்ளது. தமிழ்நாடு அரசும் ஆளுநர் தரப்பும் இரண்டு இரண்டு துருவங்களாக மோதிக்கொண்டு இருக்கின்றனர். இந்த நிலையில்தான் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவி இரண்டு நாட்களுக்கு முன் திடீரென டெல்லிக்கு பயணம் மேற்கொண்டார். பல்வேறு முக்கிய விவகாரங்களை மனதில் வைத்து அவர் டெல்லிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

மசோதாக்கள்
நிலுவையில் இருக்கும் 12 மசோதாக்கள் பற்றி இவர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் ஆலோசனை செய்ததாக கூறப்பட்டது. அதோடு இலங்கை தமிழர் விவகாரம் தொடர்பாகவும், அகதிகள் வருவது தொடர்பாகவும் பாதுகாப்பு ரீதியாக இவர் பல்வேறு ஆலோசனைகளை மேற்கொண்டாராம். மேலும் குடியரசுத் தலைவர் தேர்தலில் தென்னிந்தியர் ஒருவரை நிற்க வைப்பது தொடர்பாகவும், அதற்கு ஆளும் திமுக தரப்பின் ஆதரவை பெறுவது தொடர்பாகவும் இவர்கள் ஆலோசனை செய்ததாக கூறப்பட்டது.

ஒரே மேடை
இந்த நிலையில்தான் முதல்வர் ஸ்டாலினும் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என் ரவியும் இன்று ஒரே மேடையில் தோன்றி இருக்கிறார்கள். சென்னை பல்கலையின், 164வது பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது. இதில், முதல்வரும், ஆளுநரும் ஒரே மேடையில் தோன்றி உள்ளனர். சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை புரிந்த ஆளுநர் ஆர்.என் ரவியை பொன்னாடை போர்த்தி வரவேற்றார் முதல்வர் ஸ்டாலின். இதையடுத்து முதல்வர் ஸ்டாலினை ஆளுநர் ரவி கையெடுத்து கும்பிட்டார். ஆளுநர் ஆர்.என். ரவிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி. இருவரும் அருகருகே அமர்ந்து உள்ளனர். கடைசியாக தேநீர் விருந்திற்கு முதல்வர் ஸ்டாலினை ஆளுநர் ரவி அழைத்தார். ஆனால் அதை முதல்வர் புறக்கணித்தார்.

சந்திப்பு
இந்த நிலையில்தான் இன்று சென்னை பல்கலையில் 164வது பட்டமளிப்பு விழா நடத்தப்படுகிறித்து. , தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்த உள்ளார். டெல்லியில் இருந்து சென்னை ஆளுனர் ரவி திரும்பி உள்ளார் என்று கூறப்படுகிறது. ஆளுநர் மாளிகையில் ஓய்வு எடுக்கும் அவர் சென்னை பல்கலை வருகிறார். இன்று ஆளுநர் ரவியிடம் முதல்வர் ஸ்டாலின் பேசுவாரா.. இரண்டு தரப்பிற்கும் சுமுகமான உறவு ஏற்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications