செந்தில் பாலாஜி கைது.. களமிறங்கிய ஆளுநர் ஆர்.என் ரவி.. போனை எடுத்து அவங்களுக்கே கால் பண்ணிட்டாராமே

Subscribe to Oneindia Tamil

சென்னை: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் தற்போது ஆளுநர் ஆர் என் ரவியும் களமிறங்கி உள்ளார். முக்கியமான சிலருக்கு ஆளுநர் ஆர். என். ரவி போன் செய்து விசாரணை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

நெஞ்சுவலி காரணமாக அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். தீவிர சிகிச்சைப் பிரிவில் செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

செந்தில் பாலாஜி உடல்நிலை குறித்து ஓமந்தூரார் மருத்துவமனை தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது. அதில், செந்தில் பாலாஜியின் இதயத்துடிப்பு , உடலில் ஆக்சிஜன் சமநிலை கண்காணிக்கப்பட்டு வருகிறது. இரண்டிலிருந்து 3 நாட்கள் வரை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை தேவைப்படுகிறது.

Governor RN Ravi is keenly checking on the health of Minister V Senthil Balaji?

அவருக்கு சில நிமிடங்களுக்கு முன் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆஞ்சியோ என்பது தமனி சார்ந்த பெருந்தமனி தடிப்புத் தோல் அழற்சிக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்படும். இதுபோக குறுகலான அல்லது தடைபட்ட தமனிகளை சரி செய்ய பயன்படுத்தப்படும். மேலும் நரம்புகளை விரிவுபடுத்துவதற்குப் பயன்படுத்தப்படும்.

ஒரு வடிகுழாயுடன் இணைக்கப்பட்ட ஒரு காற்றழுத்தப்பட்ட பலூன் தமனியின் பாதைக்கு அனுப்பப்பட்டு பின்னர் நரம்பு அல்லது தமனி பாதையின் அளவு பெரிதாக்கப்பட்டு ரத்த ஓட்டம் அல்லது மூச்சு காற்று ஓட்டம் சரி செய்யப்படும். இந்த ஆஞ்சியோ சிகிச்சைதான் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு செய்யப்பட உள்ளதாம்.

ஆஞ்சியோ முடித்து அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் சர்ஜரி செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். செந்தில் பாலாஜிக்கு நடத்தப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் ரத்தக்குழாயில் 3 அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

கைது: இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் தற்போது ஆளுநர் ஆர் என் ரவியும் களமிறங்கி உள்ளார். முக்கியமான சிலருக்கு ஆளுநர் ஆர். என் போன் செய்து விசாரணை செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதன்படி மருத்துவமனை நிர்வாகத்திற்கு போன் செய்து செந்தில் பாலாஜிக்கு என்ன சிகிச்சை தரப்படுகிறது என்று விவரங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேபோல் தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளருக்கும் போன் செய்து ஆளுநர் ரவி சிகிச்சை குறித்து கேட்டதாக கூறப்படுகிறது.

ஆளுநரிடம் புகார்: முன்னதாக சமீபத்தில் ஆளுநர் ஆர். என் ரவியிடம் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செந்தில் பாலாஜி குறித்து புகார் கொடுத்தார். அமைச்சர் செந்தில் இருந்து நீக்க பாலாஜியை வேண்டும் என்று கோரிக்கை வைத்து கடிதம் கொடுத்தார். அதேபோல் அண்ணாமலையும் செந்தில் பாலாஜிக்கு எதிராக இதேபோல் புகார் கொடுத்தார்.

இதில் செந்தில் பாலாஜியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளதாக அண்ணாமலை பேட்டியும் கொடுத்து இருந்தார். இந்த நிலையில்தான் செந்தில் பாலாஜிக்கு எதிராக வழக்கு உள்ள நிலையில் அவர் அமைச்சராக தொடர்ந்தால் சரியாக இருக்காது என்று ஆளுநர் கருதியதாக கூறப்படுகிறது.

Governor RN Ravi is keenly checking on the health of Minister V Senthil Balaji?

ஆனால் அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என்ற நிலைப்பாட்டில் ஸ்டாலின் உள்ளதாக கூறப்படுகிறது. இப்போது அமலாக்கத்துறை கைது காரணமாக செந்தில் பாலாஜிக்கும் ஸ்டாலினுக்கும் பிரஷர் கூடி உள்ளது.

ஸ்டாலின் கண்டனம்: இது தொடர்பாக ஸ்டாலின் தெரிவித்துள்ள கண்டனத்தில், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தருகிறேன் என்று சொன்ன பிறகும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சு வலி ஏற்படும் வகையில் சித்ரவதை கொடுத்த அமலாக்கத்துறையின் நோக்கம் என்ன?

வழக்கிற்குத் தேவையான சட்ட நடைமுறைகளை மீறி மனிதநேயமற்ற முறையில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்டிருப்பது தேவையா? பா.ஜ.க.வின் இந்த மிரட்டல்களுக்கு எல்லாம் தி.மு.க. அஞ்சாது. 2024 தேர்தலில் மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள், என்று குறிப்பிட்டு உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+