ஆர்.என்.ரவியை காஷ்மீரில் சுற்றிவளைத்த எதிரிகள்.. காப்பாற்றியது பகவத் கீதையாம்! பிளாஷ்பேக் போன ஆளுநர்
சென்னை: ஜம்மு காஷ்மீரில் எதிரிகளால் தான் சூழப்பட்டபோது தன்னை பகவத் கீதையே காப்பாற்றி நல்ல நிலைக்கு கொண்டு வர உதவியது என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்து உள்ளார். தன்னை நோக்கி விமர்சனங்கள் வரும்போதும் பகவத் கீதையே வலிமையை தந்ததாக தெரிவித்து இருக்கிறார்.
சென்னையில் விஷ்வ விஷ்ணு சஹஸ்ரனமா சமஸ்தான் விஸ்வாஸ் நிறுவனம் மழலைகளுக்காக கோடைக்கால சிறப்பு ஆன்மீக இசை நிகழ்ச்சியை தொடங்கியது. இதில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள், இசை கலைஞர்கள், ஆன்மீகவாதிகள் கலந்துகொண்டு இருக்கிறார். இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார்.

அப்போது அவர், "மிகவும் ஆழமான கருத்துக்களை கொண்டது பகவத் கீதை. அதை மனப்பாடம் செய்தால் சிறந்த மனிதராக உருவாக்கும். பகவத் கீதையை நான் 5 ஆம் வகுப்பு படிக்கும்போதே முழுமையாக மனப்பாடம் செய்து உள்ளேன். ஆனால், பல வார்த்தைகளுக்கு அர்த்தம் தெரியாமல் நான் இருந்து இருக்கிறேன்.
ஒருமுறை ஜம்மு காஷ்மீரில் என்னை எதிரிகள் சூழ்ந்துகொண்டனர். அப்போது பகவத் கீதையே என்னை நல்ல நிலைக்கு கொண்டு வருவதற்கு உதவி புரிந்தது. என்னை நோக்கி விமர்சனங்கள் வரும்போதும் அந்த நேரங்களில் பகவத் கீதை வலிமையை தந்து இருக்கிறது. ஒருபோது குறிக்கோளில் இருந்து விலகியது கிடையாது. குருக்கள், ஞானிகள் உட்பட யாராலும் பகவத் கீதையின் முழுமையான அர்த்தத்தை புரிந்துகொள்ள இயலாது." என்று தெரிவித்து உள்ளார்.
இதேபோல் கடந்த ஆண்டு டிசம்பர் மாதமும் ஆளுநர் ரவி பகவத் கீதை குறித்து பேசி இருக்கிறார். அப்போது அவர், "படிக்க, படிக்க பகவத் கீதையை கண்டு நீங்கள் ஆச்சரியம் அடைவீர்கள். பகவத் கீதையை படித்தால் தனி மனித ஒழுக்கம் அதிகரிக்கும். கீதை படிக்கும் போது நல்லொழுக்கம் கட்டுப்பாட்டினை பெறலாம்.
மனப்பாடம் செய்ய எளிமையான வகையில் அழகாக பகவத் கீதையை இயற்றப்பட்டுள்ளது. எனது ஆரம்பப் பள்ளி மற்றும் கல்லூரி காலங்களில் என்னை ஊக்குவித்து நான் எதைப்பெற வேண்டும் என்று அறிய உதவியது பகவத் கீதை. இதன் மூலம் எந்த ஒரு செயலையும் நேர்கொண்ட பார்வையுடன் இலக்கை நோக்கி கொண்டு செல்லலாம்." என்றார்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications