ஆளுநர் ரவி எடுத்த மிட் நைட் முடிவு.. திமுகவை விடுங்க.. அதிமுகவிற்குத்தான் சிக்கல்.. சிரிக்கும் பாஜக!
சென்னை: ஆளுநர் ஆர். என் ரவி நேற்று இரவு எடுத்த முடிவு அதன்பின் முடிவை பின்வாங்கியது உள்ளிட்ட விஷயங்கள் திமுகவை விட அதிமுகவிற்குத்தான் பெரிய அளவில் பிரச்சனையை கொடுக்க போகிறது.
2024 லோக்சபா தேர்தலுக்கு இன்னும் அதிக காலம் இல்லை. சரியாக சொல்ல போனால் 1 வருடம் கூட இல்லை. எதிர்கட்சிகள் ஒன்று சேர்வதை தடுக்கும் விதமாக லோக்சபா தேர்தலை முன்கூட்டியே நடத்த மோடி நினைக்கவும் கூட வாய்ப்புகள் உள்ளன.
இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவிற்கும் - பாஜகவிற்கும் இடையில் தொடர் மோதல் நிலவி வருகிறது. சமீபத்தில் கூட ஜெயலலிதா பற்றி அண்ணாமலை பேசியது பாஜக - அதிமுக உறவில் பெரிய பிளவை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் அதிமுகவின் இடத்தை பிடிக்க.. அல்லது இரண்டாவது பெரிய கட்சி என்ற அந்தஸ்தை பெற.. பாஜக தீவிரமாக முயன்று வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் நேற்று ஆளுநர் ரவி விவகாரம் உச்சம் எடுத்தது. அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான விசாரணை நியாயமாக நடக்க வேண்டும் என்றால் அவர் அமைச்சரவையில் நீடிக்க கூடாது. அதனால் அவரை அமைச்சரவை பதவியில் இருந்து நீக்குகிறேன் என்று ஆளுநர் ஆர். என் ரவி அறிவித்தார்.
இந்த நடவடிக்கை காரணமாக தமிழ்நாட்டில் அரசியல் மோதல் என்பது திமுக vs பாஜக என்று மாறி உள்ளது. கடந்த சில நாட்களாகவே அரசியல் மோதல் திமுக - பாஜக என்றுதான் இருக்கிறது. சமீபத்தில் 2 - 3 பொது நிகழ்ச்சிகளில் பேசிய போதும் கூட முதல்வர் ஸ்டாலின் அதிமுக பற்றி பேசவே இல்லை.
எடப்பாடி பழனிசாமி பற்றியும் அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. மாறாக பிரதமர் மோடி குறித்து பேசினார். நேற்று நடந்த திருமண நிகழ்விலும் கூட பிரதமர் மோடியைத்தான் முதல்வர் ஸ்டாலின் விமர்சனம் செய்தார். அதிமுக பற்றி பேசவே இல்லை. அப்படி இருக்க தற்போது ஆளுநரின் முடிவால் தமிழ்நாட்டில் திமுக - பாஜகதான் மோதல் உள்ள கட்சிகள் என்ற பிம்பம் ஏற்படும்.

நேற்று நடந்த இந்த விவகாரம் காரணமாக அதிமுக தமிழ்நாடு அரசியல் சீனிலேயே இல்லை என்ற நிலை ஏற்பட்டு உள்ளது. இதனால் லோக்சபா தேர்தலிலும் அதிமுகவிற்கான வாய்ஸ் குறையும். நாங்கதான் லைம்லைட்டில் இருக்கோம் என்று கூறி பாஜகவும் கூட்டணி பேச்சுவார்த்தைகளில் அதிக இடங்களை கேட்கும் நிலை ஏற்படும். இதனால்தான் ஆளுநர் ஆர். என் ரவி நேற்று இரவு எடுத்த முடிவு அதன்பின் முடிவை பின்வாங்கியது உள்ளிட்ட விஷயங்கள் திமுகவை விட அதிமுகவிற்குத்தான் பெரிய அளவில் பிரச்சனையை கொடுக்க போகிறது என்கிறார்கள் அரசியல் வல்லுனர்கள்.
சமீபத்தில் செந்தில் பாலாஜியை இலாக்கா இல்லாத அமைச்சராக வைத்துக்கொள்ள முடியாது என்று ஆளுநர் ஆர். என் ரவி கூறினார். அமைச்சரவை மாற்றத்திற்கான உண்மையான காரணத்தை கூற வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார் .
ஆனால் தமிழ்நாடு அரசு.. செந்தில் பாலாஜியின் இலாக்கா மாற்றத்திற்கு காரணம் அவரின் உடல்நிலைதான் என்று அறிவித்தது. அதோடு இல்லாமல் ஆளுநர் ஆர். என் ரவிக்கு இதில் விளக்கம் கேட்கும் அதிகாரம் எல்லாம் இல்லை என்றும் அறிவித்தது. இதையடுத்து அமைச்சரவை மாற்றத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆனால் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வதில் எனக்கு விருப்பம் இல்லை என்றும் அறிவித்தார்.

ஆனாலும் செந்தில் பாலாஜி இலாக்கா இல்லாத அமைச்சராக தொடர்வார் என்று அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நிலையில்தான் இந்த நிலையில்தான் அமைச்சர் ஒருவர் மீது புகார் உள்ளதாலும், அவர் நீதிமன்ற காவலில் உள்ளதாலும் அவரை பதவியில் இருந்து நீக்குவதாக ஆளுநர் ஆர். என் ரவி அறிவித்தார். ஆளுநருக்கு பொதுவாக இந்த அதிகாரம் கிடையாது. அமைச்சரை தன்னிச்சையாக நியமிக்கவோ, நீக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது.
பின்வாங்கினார்: இந்த நிலையில் சரியாக 5 மணி நேரத்தில் ஆளுநர் ஆர். என் ரவி தனது முடிவை மாற்றினார். அதாவது செந்தில் பாலாஜியை நீக்கியது செல்லாது என்று அறிவித்தார்.
தேசிய அளவில் இந்த விவகாரம் சர்ச்சையான நிலையில் தனது முடிவை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அதோடு இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம்தான் தனக்கு அறிவுறுத்தியது. அவர்களின் அறிவுரை காரணமாக எனது அறிவிப்பை நிறுத்தி வைக்கிறேன். அதோடு இது தொடர்பாக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்துவிட்டு முடிவு எடுக்கிறேன், என்றும் ஆளுநர் ஆர். என் ரவி தெரிவித்துள்ளார் .
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி!












Click it and Unblock the Notifications