சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பேரறிவாளன் விடுதலை மட்டும் போதாது... ஆளுநர் பதவி விலகனும் - புதிதாக ட்விஸ்ட் வைக்கும் தியாகு

Google Oneindia Tamil News

சென்னை: உச்சநீதிமன்ற கண்டனத்திற்கு மதிப்பு கொடுத்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகினால்தான் பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பு முழுமை பெறும் என தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Perarivalan விடுதலை.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில், கொலையாளிகளுக்கு பேட்டரி வாங்கிக் கொடுத்ததாக கூறி 1991 ஆம் ஆண்டு கைதானார் பேரறிவாளன்.

    30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைக்கப்பட்ட பேரறிவாளன் கடந்த மாதம் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இவருக்கு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனை கடந்த 2014 ஆம் ஆண்டு ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

    “தம்பி பேரறிவாளன்.. நடந்து நடந்து அம்மா கால் தேஞ்சு போச்சு.. இனியாவது” - தீர்ப்பு குறித்து சீமான்!“தம்பி பேரறிவாளன்.. நடந்து நடந்து அம்மா கால் தேஞ்சு போச்சு.. இனியாவது” - தீர்ப்பு குறித்து சீமான்!

    ஆளுநர் நடவடிக்கை

    ஆளுநர் நடவடிக்கை

    பேரறிவாளன் உட்பட 7 தமிழர்களை விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளார். தொடர்ந்து பேரறிவாளனின் பரோல் நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் அவருக்கு கடந்த மார்ச் 9 ஆம் தேதி உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. இந்த நிலையில் தன்னை விடுதலை செய்திடக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

    பேரறிவாளன் விடுதலை

    பேரறிவாளன் விடுதலை

    உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வு பேரறிவாளனை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்துள்ளது. உச்ச நீதிமன்றம் தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது. இந்திய வரலாற்றில் உச்ச நீதிமன்றம் இது போன்ற தீர்ப்பை வழங்குவது மிகவும் அரிதான ஒன்றாக பார்க்கப்படுகிறது.

    உச்சநீதிமன்றம் கருத்து

    உச்சநீதிமன்றம் கருத்து

    அப்போது "தன்னை விடுதலை செய்யக்கோரி அமைச்சரவை ஒப்புதல் அளித்த பிறகும் கூட ஆளுநர் எந்த விதமான முடிவையும் எடுக்காமல் இருக்கிறார்." என பேரறிவாளன் தரப்பு தெரிவித்தது. இதைக்கேட்ட நீதிபதிகள், "விடுதலை தொடர்பாக குழப்பம் நீடித்து வருகின்றன். ஏன் பேரறிவாளவனை நீதிமன்றமே விடுவிக்கக்கூடாது. பேரறிவாளனை விடுவிப்பதுதான் ஒரே தீர்வு" என்று தெரிவித்தனர்.

    தியாகு வலியுறுத்தல்

    தியாகு வலியுறுத்தல்

    இதுகுறித்து தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு தனது கருத்தை தெரிவித்து உள்ளார். உச்சநீதிமன்றத்தின் கண்டனத்திற்கு மதிப்பு கொடுத்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலக வேண்டும் என்றும் ஆளுநர் அவ்வாறு விலகினால் மட்டுமே பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பு முழுமை பெறும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

    English summary
    Governor RN Ravi should resign following supreme court judgement to release Perarivalan - Thiyagu: உச்சநீதிமன்ற கண்டனத்திற்கு மதிப்பு கொடுத்து தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி பதவி விலகினால்தான் பேரறிவாளன் வழக்கின் தீர்ப்பு முழுமை பெறும் என தமிழ் தேசிய விடுதலை இயக்க தலைவர் தியாகு தெரிவித்துள்ளார்.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X