தமிழக ஆளுநரின் செயலாளர் ராஜகோபால் தகவல் ஆணையராக நியமனம்.. புதிய செயலாளர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல்
சென்னை: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளராக இருந்த ராஜகோபால், தமிழக தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தலைமை செயலாளர் சண்முகம் இன்று இரவு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் இரண்டு வருடங்களுக்கு முன்பாக நியமிக்கப்பட்ட போது, அவரது செயலாளராக பதவி நியமிக்கப்பட்டவர் மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ராஜகோபால் என்பது குறிப்பிடத்தக்கது.
1984ம் ஆண்டு, கேடர், ஐஏஎஸ் அதிகாரியான, ராஜகோபால், கன்னியாகுமரி, விருதுநகர் கலெக்டராகவும் இருந்தவர். ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, 2013ல் தமிழக உள்துறை செயலாளர் பொறுப்பிலும் இருந்தவர். பின்னர், டெல்லி சென்று மத்திய அரசு பொறுப்பில் இருந்தார். இதன் பிறகு இரண்டு வருடமாக தமிழக ஆளுநரின் செயலாளராக பதவி வகித்தார். இந்த நிலையில், அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு ராஜகோபால் தமிழக தகவல் ஆணையர், பதவியில் தொடர முடியும்.

ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளராக ஐஏஎஸ் அதிகாரி, ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டீல் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தமிழக வீட்டுவசதி வாரியத்தின் மேலாண் இயக்குநராக பதவி வகித்தவர்.
-
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
தவெக தலைமையில் தமிழ்நாடு சமூக நீதி முற்போக்கு கூட்டணி.. திமுகவுக்கு பிரவீன் சக்ரவர்த்தி செக்மேட் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம்












Click it and Unblock the Notifications