சவால் விடுக்கிறேன்..தூத்துக்குடிக்கு போய் ஆளுநர் இதை பேச முடியுமா? அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம்
சென்னை: தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுமின் நிலையம் கொண்டு வரும் போது போராட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. வெளிநாட்டு நிதிகள் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கும் இதுபோன்ற நிதிகளே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களைத் தூண்டிவிட்டு அந்த ஆலையை மூடிவிட்டனர் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்தார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை ஆளுநர் நிலுவையில் வைத்தால் அதற்கு நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்பதே பொருள்.
உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வே நிலுவையில் வைப்பது நாகரீகமாக ஒப்புதல் தரவில்லை என்பதே பொருள் என்று தெரிவிக்கிறது என்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியிருந்தார். அதேபோல், ஸ்டெர்லைட் போராட்டம் குறித்தும் ஆளுநர் பேசியிருந்தார்.

நாங்கள் எல்லாம் மக்கள் பிரதிநிதிகள்: ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், தமிழ்நாட்டில் கூடங்குளம் அணுமின் நிலையம் கொண்டு வரும் போது போராட்டம் நடத்தப்பட்டு இருக்கிறது. வெளிநாட்டு நிதிகள் இதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்திற்கும் இதுபோன்ற நிதிகளே பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மக்களைத் தூண்டிவிட்டு அந்த ஆலையை மூடிவிட்டனர்" என்று பேசியிருந்தார். ஆளுநரின் இந்த பேச்சுக்கு திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரித்துள்ளன. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினும் ஆளுநருக்கு கடுமையான கண்டங்களை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில், ஆளுநரின் கருத்து தொடர்பாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியிருப்பதவது:-ஆளுநரின் கருத்து குறித்து முதல்வர் தெளிவாக பதில் சொல்லிவிட்டார். டிக்டேர்ஷிப் மாதிரி ஆளுநர் நடந்து கொண்டு இருக்கிறார். இது கண்டனத்திற்குரியது. ஆன்லைன் ரம்மி சூதாட்டத்தால் கிட்டத்தட்ட 42 க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து இருக்கிறார்கள். சட்டமன்றத்தில் ஆளும் கட்சி எதிர்க்கட்சி என அனைத்து உறுப்பினர்களும் சேர்ந்து இந்த தீர்மானத்தை அனுப்பி வைக்கிறோம். நாங்கள் எல்லாம் மக்கள் பிரதிநிதிகள். மாநில சுயாட்சிக்கு ஏற்பட்டுள்ள பெரிய இழுக்கு. இதற்கு முதல்வர் மு.க ஸ்டாலின் அடுத்த கட்ட நடவடிக்கையை விரைவில் எடுப்பார்" என்றார்.
தூத்துக்குடியில் போய் பேச முடியுமா?
அப்போது செய்தியாள்ர்கள் ஸ்டெர்லைட் போராட்டத்தை வெளிநாட்டில் இருந்து நிதியை பெற்றுக்கொண்டு தூண்டிவிட்டதாக ஆளுநர் சொல்லியிருக்கிறாரே என்று கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தூத்துக்குடிக்கு சென்று இதைப்போல பேச முடியுமா? ஆளுநர் மாளிகையில் உட்கார்ந்து கொண்டு இப்படி பேசுகிறார். வெளியில் வந்து ஒரு பொதுக்கூட்டத்திலே மாணவர்கள் மத்தியிலோ.. தூத்துக்குடியிலோ இதே போன்று பேச முடியுமா? நான் சவால் விடுக்கிறேன். 100 நாட்கள் நடந்த ஒரு போராட்டம், மிகப்பெரிய போராட்டம். 13 பேரை சுட்டுக்கொன்று இருக்கிறார்கள். இது அதிமுகவும் சொன்னதுதானே.. அப்போது முதல்வராக இருந்தவர் என்ன சொன்னார்.. தெரியாது.. டிவியில் பார்த்தேன் என்று சொன்னார். இதுக்கும் அதுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நான் இங்கு அரசியல் பேச விரும்பவில்லை. இதை கண்டிக்கிறேன். தைரியமாக தூத்துக்குடியில் போய் இதை பேச முடியுமா என்று நான் ஆளுநரிடம் கேட்கிறேன். நீங்கள் ராஜ்பவனில் உட்கார்ந்து கொண்டு இதையெல்லாம் பேசுகிறீர்கள். இது வன்மையாக கண்டித்தக்கது. தூத்துக்குடியில் போய் ஆளுநரை இதை பேச சொல்லுங்கள். அப்போது மக்கள் என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார்கள் என்று தெரியும்" என்றார்.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications