பைபர், ஏர் பைபர் எல்லாம் ஓரம் போ! டான்பிநெட் உடன் கைகோர்க்கும் TACTV..! வருகிறது அதிவேக இணைய சேவை!
சென்னை: விரைவில் டான்பிநெட் நிறுவனத்தின் வழியாக ஸ்டேன்ட் பை சிக்னல் வழங்கப்படும் என்றும் அரசு கேபிள் டிவியும் டான்பிநெட் நிறுவனமும் இணைந்து குறைந்த விலையில் அதிவேக இணைய சேவையுடன் கூடிய ஐபி டிவியும் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அரசு கேபிள் டிவி வாரிய தலைவர் தஞ்சை ஜீவா கூறியுள்ளார்.
தமிழகத்தில் குறிப்பிட்ட சில கேபிள் டிவி நிறுவனங்கள் ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் தரமான கேபிள் சேவையை வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்டது.

தொடர்ந்து கேபிள் மூலம் சேவை வழங்கப்பட்ட நிலையில், அது டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்படுகிறது. மேலும், அந்த செட்டாப் பாக்ஸ்கள் இலவசமாக வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
200க்கும் மேற்பட்ட சேனல்கள் 200 கட்டணத்தில் வழங்கப்படுகிறது. 140 ரூபாய் ஜிஎஸ்டி வரியுடன் சந்தா தொகை வசூலிக்க வேண்டும் என கூறப்பட்டாலும் சில இடங்களில் கூடுதலாக வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. அப்போது பிற தனியார் நிறுவனங்களில் இருந்த ஆபரேட்டர்கள் அரசு கேபிள் சேவையில் இணைந்தனர். இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சேவை தொடர்ந்து விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஹெச்டி செட்டாப் பாக்ஸ்கள் வழங்க வேண்டும் என கேபிள் டிவி ஆபரேட்டர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வந்தனர். இதனையடுத்து உயர் தொழில்நுட்பத்துடன் அரசு கேபிள் டிவிக்கு விரைவில் எச்டி செட்டாப் பாக்ஸ்கள் வழங்கப்பட உள்ளன. இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஹெச்டி செட்டாப் பாக்ஸ்கள் அனுப்பி வைக்கப்பட்டு ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இது தொடர்பாக விநியோகஸ்தர்கள் மேலாளர்கள் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், சில இடங்களில் பிஎஸ்என்எல் நிறுவனத்துடன் இணைந்து இணைய சேவையும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அரசு கேபிள் டிவியும் டான்பிநெட் நிறுவனமும் இணைந்து குறைந்த விலையில் அதிவேக இணைய சேவையுடன் கூடிய ஐபி டிவியும் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை அரசு கேபிள் டிவி வாரிய தலைவர் தஞ்சை ஜீவா கூறியுள்ளார்.
தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் சார்பில் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் ஆலோசனை கூட்டம் தமிழ்நாடு அரசின் கேபிள் டிவி வாரிய தலைவர் தஞ்சை ஜீவா தலைமையில் தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் கேபிள் டிவி வாரிய தலைவர் தஞ்சை ஜீவா கலந்து கொண்டு பேசினார். அப்போது பேசிய அவர்," 25 லட்சம் இணைப்புகளை இலக்காக வைத்து தமிழ்நாடு முழுவதும் களப்பணியாற்றி வருகிறோம். 40 லட்சம் இணைப்புகளை அடைந்த உடன் தற்காலிக பணியாளர்களை முதலமைச்சர் , துணை முதலமைச்சர் ஆகியோரின் கவனத்திற்கு எடுத்து சென்று நிரந்தர பணியாளர்களாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
அரசு சார்ந்த அனைத்து கட்டிடங்களிலும் அரசு கேபிள் டிவி ஒளிபரப்பாவதை உறுதி செய்ய வேண்டும்.
விரைவில் டான்பிநெட் நிறுவனத்தின் வழியாக ஸ்டேன்ட் பை சிக்னல் வழங்கப்படும். அரசு கேபிள் டிவியும் டான்பிநெட் நிறுவனமும் இணைந்து குறைந்த விலையில் அதிவேக இணைய சேவையுடன் கூடிய ஐபிடிவியும் வழங்க உள்ளது" என்றார்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications