TDS லிமிட்டை உயர்த்திய மத்திய அரசு! மூத்த குடிமக்களுக்கு ஜாக்பாட்.. மாற்றம் இதுதான்!
சென்னை: மத்திய அரசு சமீபத்தில் வரி சீர்திருத்தங்களை அறிவித்திருந்தது. அதன்படி TDS லிமிட் உயர்த்தப்பட்டிருக்கிறது. இந்த மாற்றம் யாருக்கெல்லாம் பலன் கொடுக்கும் என்பதை விரிவாக இங்கு தெரிந்துக்கொள்ளலாம்.
கடந்த 1ம் தேதி பட்ஜெட் உரையை வாசித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த சீர் திருத்தத்தை அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு மூத்த குடிமக்களுக்கு மிகுந்த பலனளிக்கும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவில் ஊதியம் பெறும் அனைவரிடமும் TDS (Tax Deducted at Source) பிடிக்கப்படும். ஒருவேளை EPF பிடிக்கப்பட்டால் TDS பிடிக்கப்படாது. TDS பிடித்தம் செய்ய தனி வரை முறை இருக்கிறது.

ரூ.2.5 லட்சம் வரை: பிடித்தம் கிடையாது
ரூ.2.5 லட்சம் - ரூ.5 லட்சம் வரை: 5% பிடித்தம்
ரூ.5 லட்சம் - ரூ.10 லட்சம் வரை: 20% பிடித்தம்
ரூ.10 லட்சத்திற்கு மேல்: 30% பிடித்தம்
உதாரணத்திற்கு நீங்கள் மாதம் ரூ.10,000 சம்பளம் வாங்குகிறீர்கள் எனில், ஆண்டுக்கு ரூ.1.2 லட்சம் வருமானம் வரும். இதற்கு TDS பிடிக்கப்படாது. ஒருவேளை பிடித்திருந்தாலும் வருமான வரி ரிட்டன் தாக்கல் செய்து அதை வாங்கிக்கொள்ள முடியும். ஆண்டுக்கு ரூ.2.5 லட்சம் வரை இப்படி பெற்றுக்கொள்ளலாம். அதற்கும் மேல் போனால் பிடித்தம் செய்வார்கள். இப்படித்தான் TDS செயல்படுகிறது.
சரி சம்பளத்திற்கு மட்டும்தான் TDS பிடிப்பார்களா? என்று கேட்டால் கிடையாது. நீங்கள் போஸ்ட் ஆபிஸில் கணக்கு வைத்து சேமிப்பு வைத்திருக்கிறீர்கள் என்றாலும், வங்கி அல்லது கூட்டுறவு வங்கியில் நிலையான சேமிப்பு (fixed deposits) செய்திருக்கிறீர்கள் எனில் அதற்கு வட்டி வரும். உதாரணத்திற்கு ரூ.80 லட்சம் வரை சேமிப்பு வைத்திருக்கிறீர்கள் எனில் அதற்கு ரூ.40000 வட்டி வந்தால் அதில் 10% TDS கழித்தம் செய்யப்படும். அதாவது ரூ.4,000 பிடித்தம் செய்யப்படும்.
இந்த விஷயத்தில்தான் மத்திய அரசு மாற்றம் செய்திருக்கிறது. இனி ரூ.40,000க்கு பதில் ரூ.50,000 என மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. எனவே ரூ.40,000 வட்டி வந்தால் அதற்கு நீங்கள் TDS கட்ட தேவையில்லை. இது 18 முதல் 60 வயதுள்ளவர்களுக்கு பொருந்தும்.
இதுவே, 60க்கு மேற்பட்டவர்கள் ரூ.50,000 வட்டி வாங்கினால் 10% TDS கட்டி வந்திருந்தார்கள். இது தற்போது மாற்றப்பட்டு ரூ.1,00,000 ஆக உயர்த்தப்பட்டிருக்கிறது. இனி மூத்த குடிமக்கள் (60 வயதுக்கு மேற்பட்டவர்கள்) இனி ரூ.1,00,000 வட்டி வரை TDS செலுத்த தேவயைில்லை.
இந்த மாற்றம் மூலம் வங்கி, போஸ்ட் ஆபிஸ்களில் நிலையான சேமிப்பு (fixed deposits) போட அதிகமானோர் முன் வருவார்கள் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications