100% ஆன்லைனில் பட்டா, சர்வே எண்! தமிழ் நிலம் செயலியில் நகர்ப்புற நில விவரங்கள்! விரைவில் அரசு அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிலத்தின் சர்வே எண், பட்டா, வரைபட விபரங்களை, மக்கள் எளிதாக அறிவதற்காக துவக்கப்பட்ட, தமிழ் நிலம் ஜியோ செயலி' முழுமையான தகவல்கள் இல்லாமல், முடங்கி உள்ளதாக புகார் எழுந்த நிலையில், அதுகுறித்த புதிய தகவல் வெளியாகியிருக்கிறது.. மேலும் ஊரக பகுதி சார்ந்த தகவல்கள் கிடைக்கும் அளவுக்கு, நகர்ப்புற பகுதி நில விபரங்கள் கிடைப்பதில்லை என்ற சலசலப்புகள் வெளிவந்த நிலையில், அதுகுறித்த நம்பிக்கை தகவல்களையும் வருவாய்த்துறை உயரதிகாரிகள் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக, நிலப்பட்டா வாங்க வேண்டுமானால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு நேரிலேயே செல்ல நேரிடுகிறது. இதனால் வியரமாகும் நேரத்தை தவிர்க்கவும், இடைத்தரகர்களின் தொல்லையை கட்டுப்படுத்தவும்தான், , ஆன்லைனிலேயே தமிழ் நிலம் என்ற வெப்சைட்டை தமிழக அரசு துவங்கியிருக்கிறது.

Tamil Nadu Govt Revenue Dept Patta Survey Data

இதன்படி, தமிழ்நாட்டிலுள்ள நிலங்கள் குறித்த வருவாய் துறை ஆவணங்கள் மற்றும் தகவல்கள், தமிழ் நிலம் தகவல் தொகுப்பில் இணைக்கப்பட்டது..

பட்டாவில் நிலத்தின் சொந்தக்காரர் யார்? நிலத்தின் சர்வே எண்? நிலம் எந்த வகையை சேர்ந்தது? எந்த பகுதியில் அமைந்துள்ளது? என்பனவற்றையும் இந்த வெப்சைட் மூலம் அறிந்து கொள்ளலாம்.

உட்பிரிவற்ற பட்டா மாற்றம்

மாவட்டம், தாலுகா, கிராமம், சர்வே எண் போன்ற விபரங்களை உள்ளீடு செய்து, பட்டா, 'அ' பதிவேடு, நில வரைபட விபரங்களை பெறலாம். அதேபோல எந்த நிலத்திற்கு பட்டா மாற்றம் தேவையோ, அது உட்பிரிவற்ற பட்டா மாற்றமா அல்லது உட்பிரிவுடன் பட்டா மாற்றமா? போன்ற விவரத்தை எல்லாம் விண்ணப்பித்தில் குறிப்பிட்டால் போதும். எளிதாக சேவையை பெற்று கொள்ளலாம்.

இதனால் ஒருவருக்கு சொத்து பதிவு செய்யப்படும்போது, வருவாய் துறை மூலமாக, பட்டாவும் பெயர் மாற்றம் செய்ய முடியும்.. பழைய பத்திரத்தில் பெயர் மாற்றம் செய்யாதவர்கள், ஏற்கனவே பத்திரப்பதிவு செய்தவர்களும் ஆன்லைனில் இதற்காக விண்ணப்பிக்கலாம். அதேபோல, இடம் அல்லது வீடு வாங்குவோரும் ஆன்லைனில் இதற்காக விண்ணப்பிக்கலாம்.


தமிழ் நிலம் செயலி

மேலும், நில ஆவணங்கள், அங்கீகரிக்கப்பட்ட பட்டா நகல்களை பெறவும், பதிவிறக்கத்தை மேலும் எளிமைப்படுத்தும்விதமாகவும், தமிழ் நிலம் ஜியோ இன்போ என்ற இந்த செயலி, கடந்த ஜனவரியில் துவக்கப்பட்டது.

கிராமப்புற நில ஆவணங்கள், அங்கீகரிக்கப்பட்ட பட்டா நகல்களை 'தமிழ் நிலம்' செயலி மூலம் எளிதாக பெறுவதற்கு தமிழ்நாடு புவியியல் தகவல் அமைப்பு மூலம் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதாவது, மாவட்டம், தாலுகா, கிராமம், சர்வே எண் போன்ற விபரங்களை உள்ளீடு செய்து, பட்டா, 'அ' பதிவேடு, நில வரைபட விபரங்களை பெறலாம் என்று அறிவிக்கப்பட்டது.

சொத்துக்கள் குறித்த உண்மையான தகவல்களை பெற முடியும் என்பதுடன், சர்வே எண் போன்ற அடிப்படை விபரங்கள் இல்லாவிட்டாலும், கூகுள் மேப்பில் நீங்கள் தேர்வு செய்யும் இடத்தின் சர்வே எண், பட்டா எண், வரைபட விபரங்களையும் மொபைல் மூலமும் அறிந்து கொள்ள முடியும்.

மாநிலம், மாவட்டம், தாலுகா, கிராமம், வார்டு, நகரம், வட்டம், பஞ்சாயத்துக்கள் உட்பட பல்வேறு துறைகளின் தரவுகள் அனைத்தும் www.tngis.tn.gov.in என்ற புவியியல் தகவல் அமைப்பு தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு, GIS எனப்படும் சிறப்பு கோப்பு வடிவங்களில் பயனாளர்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தாசில்தார் டூ விஏஓ

இவ்வளவு வசதிகள் அடங்கிய இந்த செயலி திடீரென முடங்கிவிடுவதாக புகார் கிளம்பியிருக்கிறது.. அதாவது, இந்த செயலியில் தேவையான தகவல்களை அதிகாரிகள் அப்லோடு செய்யவில்லையாம்.. தங்களுக்கான வசூல் பாதிக்கப்படும் என்பதால், வருவாய் துறையினர், இதில் உரிய தகவல்களை பதிவேற்றம் செய்ய மறுப்பதாக தெரிகிறது.

இந்த சிக்கலால் நிலத்தின் அடிப்படை விவரங்களை தெரிந்து கொள்ள சம்பந்தப்பட்டவர்கள், விஏஓ ஆபீசுக்கும், தாசில்தார் ஆபீசுக்கும் செல்ல நேரிடுவதாக புலம்பல்கள் எழ துவங்கின.


நகர்ப்புற பகுதி நில விவரங்கள்

பொதுமக்களின் இந்த புலம்பல்கள், வருவாய்த்துறைக்கு எட்டியிருக்கிறது.. இதையடுத்து, தமிழ் நிலம் செயலியில், அனைத்து தகவல்களையும் பதிவேற்றம் செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறதாம்..

அதுமட்டுமல்ல, ஊரக பகுதி சார்ந்த தகவல்கள் கிடைக்கும் அளவுக்கு, நகர்ப்புற பகுதி நில விபரங்கள் கிடைப்பதில்லை என்பதால், அந்த குறைபாடுகளையும் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறார்களாம்.. மொத்தத்தில் இந்த செயலியை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்தும் நிலை விரைவில் எட்டிவிடும் என்று வருவாய் துறை உயரதிகாரிகள் தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+