தமிழகத்தில் மினி பஸ் கட்டணம் மாற்றியமைப்பு.. எவ்வளவு கூடியிருக்கு? இதோ விவரம்!
சென்னை: தமிழகத்தில் மினி பஸ்களுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இந்த மாற்றி அமைக்கப்பட்ட கட்டண உயர்வு ஏற்கனவே பர்மிட் உடன் ஓடும் மினி பஸ்களுக்கும் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தில் பர்மிட் பெறுவோருக்கும் பொருந்தும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. மினி பஸ்களுக்கு மாற்றி அமைக்கப்பட்ட கட்டணத்தின்படி ஸ்டேஜ் வாரியாக எவ்வளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்ற விவரங்களை பார்க்கலாம்.
தமிழகத்தில் கடந்த 1997 ஆம் ஆண்டு மினி பஸ் சேவை அறிமுகம் செய்யப்பட்டது. நகரப் பேருந்துகள் செல்லாத குக்கிராமங்களுக்கு கூட மினி பஸ்கள் இயக்கப்பட்டன. இந்த மினி பஸ் சேவை பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. கிராமப்புற பெண்கள் மற்றும் முதியவர்கள் அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று வர இந்த மினிபஸ் சேவை பெரிதும் பயனளிப்பதாக இருந்தது.

இந்த மினி பஸ்களை பொறுத்தவரை கிராமப்புற சாலைகளில் அதிகம் ஓடும் வகையில் வழித்தடங்கள் உருவாக்கப்பட்டு இருந்தன. இதனால் பேருந்துகளையே பார்த்திராத பல ஊர்களுக்கும் கூட மினி பஸ் சேவை அறிமுகம் செய்த பிறகு பேருந்து சேவையானது கிடைத்தது. கிராமப்புற மக்கள் அருகில் உள்ள சிறு நகரங்களுக்கு செல்ல பெரும் வரப்பிரசாதமாக இந்த மினி பஸ் சேவை அமைந்துள்ளது.
கடந்த 4 ஆண்டுகளாக புதிதாக மினி பஸ் சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்து வரும் நிலையில் தற்போது, சென்னையில் மினி பஸ்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. சோழிங்கநல்லூர், ஆலந்தூர், அம்பத்தூர், வளசரவாக்கம், மணலி உள்ளிட்ட பகுதிகளில் தனியார் மினி பஸ்களை இயக்க அரசு அனுமதி அளித்து இருக்கிறது. இந்த மினி பஸ் சேவையானது அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த நிலையில்தான் தமிழகத்தில் மினி பஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:- முதல் 4 கிமீ தூர பயணத்துக்கு 4 ரூபாயும், 4 முதல் 6 கிமீ தூரம் வரையிலான பயணத்துக்கு 5 ரூபாயும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 6 முதல் 8 கிமீ தூரம் வரை கட்டணம் 6 ரூபாயாகவும், 18 முதல் 20 கிமீ வரை 10 ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்படுகிறது. இந்த கட்டண உயர்வு வரும் மே 1 ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தற்போது சுமார் 4 ஆயிரம் மினி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 1997 ஆம் ஆண்டுக்கு பிறகு மினி பஸ் கட்டணம் மாற்றி அமைக்கப்படவில்லை என்ற போதிலும் மினி பஸ் உரிமையாளர்களே தன்னிச்சையாக அதிக கட்டணம் வசூலிப்பதாக பல்வேறு பகுதிகளிலும் பயணிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது. பல வழித்தடங்களில் ரூ.10 முதல் 30 வரை கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பது பயணிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டாக உள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications