GP Muthu: முட்டாளா நீங்க? நாய் கடிச்சி உங்க புள்ளை போச்சுன்னாதான் வலி தெரியும்! ஜி.பி.முத்து ஆவேசம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எல்லாரும் நாய காப்பாத்தணும்னு முட்டாள்தனமா பேசுறீங்களே, உங்க புள்ளைய நாய் கடிச்சி ரேபிஸ் வந்து புள்ள போச்சுன்னா வலி தெரியும். என் பையன் மூஞ்சை பாருங்க, நாய் கடிச்சி குதறி வச்சிடுச்சி என யூடியூபரான ஜி.பி.முத்து ஆவேசமாக பேசியிருந்தார்.

ஆங்காங்கே தெரு நாய்கள், வீட்டு நாய்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடித்துவிடுவதாக புகார்கள் எழுந்துள்ளன. சாதாரணமாக சாலையில் நடந்து சென்றுக் கொண்டிருந்தாலும் கூட தேடி வந்து அவை கடிப்பதாகவே சொல்கிறார்கள்.

gp Muthu dog Chennai

இந்த நிலையில் டெல்லியில் உள்ள அனைத்து தெருநாய்களையும் பிடித்து காப்பகங்களில் அடைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை எதிர்த்து பல்வேறு மாநிலங்களிலும் விலங்குகள் நல அமைப்பினர் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

நாய்க்கு ஆதரவு

இந்த நிலையில் நாய்க்கு ஆதரவாக நடிகைகள் அம்மு, சந்தியா உள்ளிட்டோர் குரல் கொடுத்து வருகிறார்கள். இரவு நேரத்தில் பெண்களுக்கு பாதுகாப்பாக இருப்பது பெரும்பாலும் தெரு நாய்கள்தான். அவை உணவின்றி கஷ்டப்பட்டு வருகிறது. அந்த நாய்களை ஏன் காப்பகங்களில் அடைத்து கஷ்டப்படுத்துகிறீர்கள் என பலர் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

ஜி.பி.முத்து ஆதங்கம்

இந்த நிலையில் இவர்களது வீடியோக்களை பார்த்த யூடியூபர் ஜி.பி.முத்து, தனது ஆதங்கத்தை வீடியோவாக வெளியிட்டுள்ளார். அவர் அந்த வீடியோவில் கூறியிருப்பதாவது: இப்போதான் வீடியோ பார்த்தேன். எல்லாருமே வந்து நாய்களுக்கு ஆதரவாக பேசுறீங்க.

எத்தனை பிள்ளைகள்

எத்தனை பிள்ளைகளை நாய் கடிக்குது தெரியுமா? முட்டாள்தனமாக பேசுறீங்களே! உங்கள் பிள்ளைகளை நாய்கள் கடித்து குதறி ரேபீஸ் நோய் வந்து அந்த பிள்ளை துடிதுடித்து போச்சுன்னா அப்போ நெஞ்சு வலிக்கும். இந்தா பாருங்க, என் பையன் மூஞ்சை பாருங்க.

நாய் கடித்து

என் பையனை நாய் கடித்து, கன்னத்தை எப்படி தோண்டி வைச்சிருக்கு பாருங்க. பிள்ளைகளுக்கு ஏதாவது ஆச்சுன்னா யாரு பார்ப்பாங்க! பெத்தவங்களுக்குத்தான் தெரியும், பிள்ளையை பற்றி! நாயை வளர்க்க வேண்டுமானால், நீங்கள் வீடை கட்டுங்கள், காம்ப்வுண்ட் சுவர் போட்டு தெருநாய், வளர்ப்பு நாய் என எல்லாத்தையும் உள்ளே வைத்து வளர்த்துக்கோங்க.

30 நாய் இருக்கு

பிள்ளைகளுக்கு ஒன்று என்றால் நெஞ்சு தாங்காது. எத்தனை பேரை இந்த நாய்கள் துரத்தி கடிக்குது. ஒரு தெருவுல 25 முதல் 30 நாய்கள் இருக்கு. ராத்திரி கடைசி பஸ்ஸுல ஒருத்தர் வீட்டுக்கு வந்தா போதும், நாய்கள் துரத்தி கடிக்குது.

காட்டுமிருகம்

ஒரு நாய் காட்டுமிருகம் போல் கடிக்க ஆரம்பித்துவிட்டால், நமக்கு எந்த நாயும் தேவையில்லை. முட்டாள்தனமா நாய்களுக்கு ஆதரவா பேசுறீங்க. நாயை வளர்க்க வேண்டுமானால் உங்கள் வீட்டில் சாப்பாடு போட்டு வளர்த்துக்கோங்க!

உங்க புள்ளைய கடிச்சா தெரியும்

எத்தனை நாய் வெறிப்பிடித்து துரத்துது தெரியுமா, எத்தனை வயதானவர்களை துரத்துது தெரியுமா, அதெல்லாம் உங்கள் கண்ணுக்கு தெரியலையா? நாய்க்கு ஆதரவாக பேசுற யாருமே ஒரு நாய்க்கு கூட சோறு போட மாட்டீங்க! நாய் கடிச்சி எத்தனை ஆட்களை இழுத்துட்டு போகுது. உங்களுக்கெல்லாம் மனசாட்சி இல்லையா? உங்கள் பிள்ளைகளுக்கு நாய் கடிச்சி அவர்களுக்கு ஏதாவது ஆனால்தான் உங்கள் நெஞ்சு வலிக்கும். எங்களுக்கு பிள்ளைகள்தான் முக்கியம். அதை புரிந்து கொண்டு பேசுங்க என ஜி.பி.முத்து ஆவேசமாக பேசியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+