வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி கட்டாயம்.. சென்னையில் மாநகராட்சி வாகனங்களுக்கு பறந்த அதிரடி உத்தரவு
சென்னை: சென்னை மாநகராட்சி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தி கண்காணிக்க அனைத்து மண்டல அலுவலர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தவு பிறப்பித்துள்ளார். குப்பை லாரிகள், பொக்லைன் வாகனம், மெக்கானிஸ் ஸ்வீப்பர் உள்ளிட்ட வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. வாகனங்களை டிரைவர்கள் முறையாக இயக்குவதில்லை என்ற புகார்கள் எழுந்த நிலையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகர மாநகராட்சியில் குப்பை சேகரிக்கும் பணிகளை 5 மண்டலங்களில் மாநகராட்சியும், 10 மண்டலங்களில் தனியாரும் மேற்கொண்டு வருகின்றன. குப்பை சேகரிப்பில் தனியார் வசம் மொத்தம் 2,287 வாகனங்கள் உள்ளன. மாநகராட்சி சார்பில் குப்பை சேகரிப்புக்கு மட்டுமின்றி பல்வேறு தேவைகளுக்காக மொத்தம் 2886 வாகனங்கள் உள்ளன.

லாரிகள், பேட்டரி வாகனங்கள், பொக்லைன், மெக்கானிஸ், மாடு மற்றும் நாய் பிடிக்கும் வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்களை ஓட்டுவதற்காக கிட்டத்தட்ட சுமார் 400 வாகன ஓட்டுனர்கள் நிரந்தரமாகவும், ஒப்பந்தம் அடிப்படையிலும் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் அதிகாரிகள் வாகனங்களை தவிர மற்ற வாகனங்கள் களத்தில் பணி செய்ய பயன்படுத்தப்படுவதில்லை என தொடர் புகார்கள் எழுந்து வருகின்றன.
மாநகராட்சி ஓட்டுனர்கள் சிலர் பணியில் இருப்பதாக பதிவேட்டில் மட்டும் கையெழுத்து போட்டுவிட்டு சொந்த வேலைக்காக சென்று விடுவதாகவும், இதனால் அவர்கள் இயக்க வேண்டிய பொக்லைன் மற்றும் குப்பை லாரிகள் இயக்கப்படாமல் அப்படியே முடங்கி கிடக்கின்றன. இதனால் தூர்வாரப்படவேண்டிய கழிவுகள் அப்படியே கிடப்பதாகவும், ஆகாயத்தாமரைகள், மனித கழிவுகள், நாய் பிடிக்கும் பணிகளில் தொய்வு ஏற்படுவதாகவும் தொடர் புகார்கள் வந்தபடி இருந்தன.
இந்த நிலையில் தான் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க சென்னை மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டிருப்பதாவது:- மாநகராட்சி வாகனங்களை இயக்கி கண்காணிக்க, அனைத்து வாகனங்களிலும் ஜிபிஎஸ் கருவி கண்டிப்பாக பொருத்த வேண்டும் என்று மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தரவிட்டுள்ளார்.
மண்டல அலுவலர்களுக்கும் மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் உத்தவு பிறப்பித்துள்ளார். குப்பை லாரிகள், பொக்லைன் வாகனம், மெக்கானிஸ் ஸ்வீப்பர் உள்ளிட்ட வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் தற்போது நடந்து வருவதாக அதிகாரிகள் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications