கிராம நத்தம் நில ஆவணங்கள்.. புதிய சர்வே நம்பர்? ஆன்லைனில் மீண்டும் அதிரடி.. தமிழக அரசு சூப்பர் வசதி
சென்னை: கிராம நத்தம் நில ஆவணங்களை, ஆன்லைன் முறைக்கு மாற்றுவது உள்ளிட்ட பல்வேறு வசதிகளை தமிழக அரசு செய்து வருகிறது.. எனினும், ஒருசில குழப்பங்களும், சந்தேகங்களும் நிலவியபடியே உள்ளதால், இதற்கும் ஒரு மாற்று கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருக்கிறது. இதுகுறித்து மீடியாக்களிலும் செய்திகள் வெளியாகியிருக்கின்றன.
தமிழகத்தில், 2000ம் ஆண்டுக்கு பிறகு வழங்கப்படும், பட்டா, நில அளவை வரைபடம் உள்ளிட்ட ஆவணங்கள், ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட்டுள்ளன. தமிழ் நிலம் என்ற தகவல் தொகுப்பில், இந்த ஆவணங்கள் ஒருங்கிணைக்கப்படுகின்றன. எனவே, நில ஆவணங்களை, ஆன்லைன் மூலமே எளிதாக பார்க்கலாம், பிரதியும் எடுக்கலாம்.

கிராம நத்தம்
எனினும், கிராம நத்தம் உள்ளிட்ட சிலவகை நிலங்களுக்கு வழங்கப்பட்ட பட்டாக்கள், இன்னும், மேனுவல் முறையிலேயே இருப்பதால், தேவையற்ற குழப்பம் ஏற்படுவதால், இந்த ஆவணங்களையும் ஆன்லைன் முறைக்கு மாற்ற, தமிழக அரசு கடந்த ஆண்டு உத்தரவிட்டது. ஆன்லைன் முறையில், பட்டாவை பார்க்கும் இணையதளத்தில், நத்தம் நிலங்களுக்கு தனி வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
கிராமங்களில் நத்தம் என வகைப்படுத்தப்பட்ட குடியிருப்புகளுக்கு உடனடியாக பட்டா வழங்கப்படவில்லை என்பதால்தான், ஒரு நிமிட பட்டா திட்டத்தை நம்முடைய அரசு விரிவாக்கம் செய்திருக்கிறது. இதற்காக பத்திரப்பதிவுத்துறை சர்வரில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது..
பட்டா மாற்றம்
இதன்மூலம், கிராமங்களில் உள்ள வீடுகளை பத்திரப்பதிவு செய்யும்போதே பட்டா பெயர் மாற்றம் செய்யப்படும் .. அதேபோல, உட்பிரிவு செய்ய தேவையில்லாத நிலங்களை பத்திரப்பதிவு செய்யும்போதே உடனடியாக பட்டா மாற்றம் செய்யப்படும்.
எனினும், சில குறிப்பிட்ட வகை நிலங்களின் பட்டா விபரங்கள், ஆன்லைன் முறைக்கு மாறாமல் உள்ளன. பெரும்பாலான கிராமங்களில், நத்தம் நிலங்களுக்கான சர்வே எண்கள் தனியாகவும், வழக்கமான பட்டா நிலங்களுக்கான சர்வே எண்கள் தனியாகவும் பராமரிக்கப்பட்டு வந்தன.
குழப்பம் தவிர்க்க நடவடிக்கை
ஆனால், ஆன்லைன் முறைக்கு மாறும்போது, ஒரே வரிசையில் சர்வே எண்கள் ஒதுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாகவும், இதற்காகவே குழப்பம் ஏற்படும் நத்தம் நிலத்துக்கு மட்டும், புதிய சர்வே எண் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.
இது குறித்து வருவாய்த் துறை அதிகாரிகள் தரப்பில் சொல்லும்போது, உதாரணத்துக்கு, கிராம நத்தம் நிலத்துக்கு, 127 என்ற சர்வே எண், மேனுவல் ஆவணத்தில் இருக்கும்போது, அதே கிராமத்தில் வழக்கமான பட்டா நிலத்துக்கும், 127 என்ற சர்வே எண் இருக்கலாம்.. இந்த குழப்பத்தை தவிர்க்க, நத்தம் நில ஆவணங்களை, ஆன்லைன் முறைக்கு மாற்றும்போது, கிராம அளவில் அனைத்து நிலங்களுக்கும், தனித்தனி சர்வே எண்கள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
நில ஆவணங்கள் - புதிய சர்வே நம்பர்
மேலும், குழப்பம் ஏற்படும் நத்தம் நிலத்துக்கு மட்டும், புதிய சர்வே எண் ஒதுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட கிராமத்தில், புழக்கத்தில் உள்ள இறுதி சர்வே எண்ணுக்கு, அடுத்த எண்களாக புதிய சர்வே எண்கள் ஒதுக்கப்படும்.
இதற்கு தேவையான திருத்தங்களை மேற்கொள்ள வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டுள்ளதால், சர்வே எண் குழப்பம் தீர்வதுடன், அனைத்து நில ஆவணங்களையும், ஆன்லைன் முறையில் எளிதாக பார்க்க முடியும்" என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications