கிராம சபைக் கூட்டத்தில் நவ.1ல் என்னென்ன விவாதிக்கணும்? ஊராட்சிகளுக்கு தமிழக அரசு போட்ட உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவம்பர் 1ம் தேதி தமிழ்நாடு முழுவதும் உள்ளாட்சி தினம் கொண்டாடப்படுகிறது... அந்த நாளில் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடத்த ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககம் சார்பில் உத்தரவிட்டுள்ளது.. இந்த கூட்டத்தில் என்னென்ன விவாதிக்க வேண்டும் என்பது குறித்த வழிமுறைகளும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.. அதை பற்றி பார்ப்போம்..!!

கிராமத்தில் சாலை வசதி சரியில்லை, குடிநீர் பிரச்சனை இருக்கிறது, அரசு நலத்திட்டங்கள் கிடைக்கவில்லை என மக்கள் தங்கள் குறைகளை நேரடியாகவே பேசலாம்.. அதற்கான முக்கியமான வாய்ப்புதான் கிராம சபைக் கூட்டம்.

Gram Sabha Village Panchayat Tamil Nadu News

கிராம சபைக் கூட்டம்

கிராம ஊராட்சியில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ள அனைவரும் கிராம சபையின் உறுப்பினர்களவர்.. கிராம வளர்ச்சிப் பணிகள், அடிப்படை வசதிகள், அரசு நலத்திட்டங்கள் குறித்து இந்தக் கூட்டத்தில் விவாதிக்கலாம்... தமிழகத்தில் பல வருடங்களாகவே நடைமுறையில் உள்ள இந்த கிராம சபைக் கூட்டம், வரும் நவம்பர் 1-ம் தேதி உள்ளாட்சி தினத்தையொட்டி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளது.

இதுதொடர்பாக, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குநர் அமுதவல்லி, அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் (சென்னை நீங்கலாக) கடிதம் அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில், "தமிழ்நாடு அரசின் அரசாணைகளின்படி, நவம்பர் ஒன்றாம் தேதி உள்ளாட்சி தினத்தன்று அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும்.

ஊராட்சிகளுக்கு உத்தரவு

அதன்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள ஊராட்சிகளுக்கு உட்பட்ட வார்டுகளில், சுழற்சி முறையைப் பின்பற்றி, காலை 11 மணிக்கு கிராம சபைக் கூட்டங்களை நடத்த வேண்டும். அதோடு, கிராம சபைக் கூட்டங்களை நடத்துவதற்கு தேவையான குறைந்தபட்ச உறுப்பினர்களின் வருகையை உறுதி செய்ய வேண்டும்.

கிராம சபைக் கூட்டத்தில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்த பட்டியல், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கிராம மக்கள் அனைவரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் வகையில், கூட்டம் நடைபெறும் இடம் மற்றும் நேரம் குறித்த தகவல்களை அந்தந்த ஊராட்சி அமைப்பினர் தங்கள் பகுதி மக்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்த வேண்டும்.

என்னென்ன விவாதிக்கணும்

குறிப்பாக, கிராம சபைக் கூட்டங்களை எந்தவொரு மதம் சார்ந்த கட்டடங்கள் அல்லது வளாகத்தில் நடத்தக்கூடாது. மேலும், நவம்பர் ஒன்றாம் தேதி அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடைபெறுவதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இதனைத் தொடர்ந்து, கிராம சபைக் கூட்ட நிகழ்வுகளை 'நம்ம கிராம சபை' மொபைல் செயலியில் பதிவேற்றம் செய்து, அதுதொடர்பான அறிக்கையை நவம்பர் ஒன்றாம் தேதியன்றே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்ககத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும்

இந்த முறை கிராம சபைக் கூட்டத்தின் விவாதங்கள் மற்றும் நிகழ்வுகளை காணொலியாக பதிவு செய்து, 'சபாசார்' வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தால், ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியுடன் தானாகவே அறிக்கை தயாராகிவிடும். இந்த வசதியை ஊராட்சிகள் பயன்படுத்த வேண்டும்.

தமிழக அரசு உத்தரவு

மேலும், சாதிப் பெயர்களை அடையாளமாகக் கொண்டுள்ள ஊர்கள், சாலைகள் மற்றும் தெருக்களின் பெயர்களை மாற்றுவது தொடர்பாக கிராம சபையில் விவாதித்து ஒப்புதல் பெற வேண்டும். தங்கள் கிராமம் அல்லது வார்டில் கொத்தடிமை மற்றும் குழந்தைத் தொழிலாளர்கள் இல்லை என தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.

வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ளும் வகையில், மழைநீர் வடிகால்களைத் தூர்வாருதல், மணல் மூட்டைகளை தயார் நிலையில் வைத்தல், குடிநீர்த் தொட்டிகளில் குளோரின் கலத்தல், டெங்கு கொசு ஒழிப்புப் பணிகளைத் துரிதப்படுத்துதல் குறித்து விவாதிக்க வேண்டும்.

அதேபோல், தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை, முதியோர் ஓய்வூதியம், பட்டா, ரேஷன் கார்டு உள்ளிட்ட உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், மண்பாண்டங்கள், பனைப் பொருட்கள் உள்ளிட்ட தொழில்களை ஊக்குவிக்க கிராம சபையில் ஒப்புதல் பெற வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+