“கையில எடு பவர..” இன்று தமிழ்நாடு முழுவதும் கிராம சபைக் கூட்டம்! அப்படி என்ன ஸ்பெஷல் நாள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு முழுவதும் இன்று ஊராட்சிகள் தினத்தை முன்னிட்டு அனைத்து கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ளது.

இது குறித்து அரசு விடுத்துள்ள அறிவிப்பு வருமாறு: மக்கள் திகாரத்திற்கு முக்கியத்துவம் தரும் வகையில் சக்தி வாய்ந்த அமைப்பாக இந்த அரசியல் அமைப்பில் பார்க்கப்படுவது கிராம சபை. இதற்கு முக்கியத்துவம் தரும் வகையில் தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைத்தவுடன் கிராம ஊரட்சிகளில் ஆண்டுதோறும் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களின் எண்ணிக்கையை 4ல் இருந்து 6 ஆக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டது.

Gram sabha meetings will be held in all village panchayats across Tamilnadu today

அந்த வகையில் கிராம சபை கூட்டம், இந்தியக் குடியரசு தினமான 26 - ஜனவரி, தொழிலாளர் தினமான மே - 1, இந்திய சுதந்திர தினமான ஆகஸ்டு - 15, காந்தி ஜெயந்தியான அக்டோபர் - 2, உலக நீர் நாளான மார்ச் - 22 மற்றும் உள்ளாட்சி நாளான நவம்பர் - 1 ஆகிய ஆறு சிறப்பு நாட்களின் போது கிராம சபைக் கூட்டங்கள் கூட்டப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த மாதம் காந்தி ஜெயந்தி நாள் அன்று கிராம சபைக் கூட்டம் கூட்டப்பட்டது.

அன்றைய தினம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி குறும்பட உரையின் மூலம் கிராமசபை கூட்டங்களை தொடக்கி, கிராமசபை குறித்த கருத்துக்களைத் தெரிவித்தார். அமைச்சர்களும் அவர்களது மாவட்டங்களில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டங்களில் கலந்து கொண்டனர். சட்டமன்ற உறுப்பினர்களும் தொகுதிக்கு உட்பட்ட ஒரு கிராமத்தில் நடைபெற்ற கிராம சபையில் பங்கேற்றனர்.

அந்த வகையில் இன்று தமிழ்நாடு முழுவதும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பொன்னையா அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில், "உள்ளாட்சிகள் தினமான நவம்பர் 1 காலை 11:00 மணிக்கு, கிராம ஊராட்சிகளில், கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும். கூட்டத்திற்கான செலவின வரம்பு, 5,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது." என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+