கிராம நத்தம் நிலம் வைத்திருப்போருக்கு செம சான்ஸ்.. நத்தம் பட்டாவை ஆன்லைனில் பார்க்க முடியுமா? அட ஈஸி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிராம நத்தம் பட்டா என்றால் என்ன? இந்த நத்தம் பட்டாக்களை ஆன்லைனில் எப்படி டவுன்லோடு செய்வது தெரியுமா? கிராம நத்தம் நிலங்கள் யாருக்கு சொந்தம்? இதுகுறித்து நீதிமன்றம் சொல்லும் கருத்துக்கள் என்னென்ன தெரியுமா?

தரிசு நிலங்கள், ஆறு, ஓடை, வாய்க்கால், சாலை, இடுகாடு என பொதுப்பயன்பாட்டிற்கான நிலப்பகுதிகளை புறம்போக்கு நிலம் என்கிறோம். இந்த நிலத்தில் விவசாயம் செய்யமுடியாது.

grama natham land tamil nadu government

இவைகளில் பல வகை என்றாலும், நத்தம் என்ற வகைகளில் மட்டும், மக்கள் வீடு கட்டிக்கொள்ள அரசு அனுமதி தந்திருக்கிறது. கிராம நத்தம் என்றால், கிராமத்தில் இருக்கும் குடியிருப்பிற்கு என ஒதுக்கப்பட்ட நிலமாகும். நத்தம் புறம்போக்கு நிலம் எனில், நத்தம் குடியிருப்பு பகுதியில் இருக்கும் புறம்போக்கு நிலம் ஆகும்.

கிராம நத்தம் : கிராம நத்தம் நிலங்களை பொறுத்தவரை, ஏழை மக்கள் குடியிருக்கவும், விவசாயம் செய்யவும் ஒதுக்கப்பட்டு வந்தன.. இவைகளை குடியிருப்புகளாக மட்டுமே பயன்படுத்த முடியுமே தவிர, வணிக நோக்கத்திற்கு பயன்படுத்த முடியாது.. கிராம நத்தம் நிலத்தையும் கண்டிப்பாக வாங்கலாம். ஆனால், குடியிருப்பு நோக்கத்திற்காக மட்டும் இருந்தால் மட்டுமே வாங்கலாம்..

இதில் பல நடைமுறை சிக்கல்கள் வந்ததால், நத்தம் நிலங்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தை, அரசே நேரடியாக செயல்படுத்தி வருகிறது. இப்போது நத்தம் பட்டா மாறுதல் செய்ய வசதியையும் தமிழக அரசு கொண்டுவந்துள்ளது.

பட்டா மாறுதல்: பட்டா மாறுதல் செய்வதுடன், உட்பிரிவு செய்வது உட்பட எல்லாவற்றையுமே குறைவான கட்டணம் செலுத்தி ஆன்லைனிலேயே பெற்றுக் கொள்ளலாம். eservices.tn.gov.in என்ற வெப்சைட்டிற்குள் அடையாளச் சான்று போன்ற ஆவணங்களுடன் விண்ணப்பித்து கொள்ளலாம்.

- https://eservices.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வமான வெப்சைட்டிற்குள் நுழைய வேண்டும்

- "பட்டா / சிட்டா விவரங்களை பார்வையிட" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்

- திரையில் உங்களுடைய மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர், கிராமத்தின் பெயர், பட்டா எண் அல்லது புல எண் அல்லது நிலத்தின் பெயர், நிலத்தின் வகை, நிலத்தின் புல எண், உட்பிரிவு எண் போன்றவற்றை சரியாக பதிவிட வேண்டும்.

- இதையடுத்து, ஊரகமா? நத்தமா? போன்றவற்றையும் நிரப்ப வேண்டும்.. ஊரகம் என்றால் உங்களுடைய வயல் சார்ந்த இடங்களாகும்.. நத்தம் என்றால் உங்கள் வீடு சார்ந்த நிலங்களாகும்.

- இறுதியாக, கேப்சா நம்பரை பதிவிட்டு, "சமர்ப்பி" என்பதை கிளிக் செய்தால், உங்களது நத்தம் நிலத்தின் பட்டாவை ஆன்லைன் நேரடியாகவே காணலாம். தேவைப்பட்டால், இதனை டவுன்லோடும் செய்து கொள்ளலாம்.

நத்தம் இணையவழி பட்டா மாறுதல் திட்டம் வட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட இ-சேவை மையம் மற்றும் Citizen Portal வாயிலாக பெறப்படும் நத்தம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்படும்.

பல்வேறு வழக்குகள்: கிராம நத்தம் நிலங்கள் யாருக்கு சொந்தம்? என்ற கேள்வி, நீதிமன்றத்திலும் பல்வேறு வழக்குகளில் எழுப்பட்டிருக்கின்றன. இது தொடர்பாக, சென்னை ஹைகோர்ட்டும் பல்வேறு வழக்குகளில் பிறப்பித்த உத்தரவுகள் இதுதான்:

"வீட்டு மனையாக தனி நபர் கட்டுப்பாட்டில் இருக்கும் கிராம நத்தம் நிலங்கள், அரசின் சொத்து அல்ல.. கிராம நத்தம் வகைப்பாட்டில் உள்ள நிலத்தை, ஒருவர் விவசாய பயன்பாட்டுக்கு மாற்றியதாலேயே, அதை கையகப்படுத்த, அரசுக்கு உரிமை உண்டு என்று கருத முடியாது.. ஒரு சொத்து கிராம நத்தம் என்று வகைப்படுத்தப்பட்ட நிலையில், அதில் அரசு உரிமை கோர வழி இல்லை.

அரசு புறம்போக்கு நிலம்: அரசு புறம்போக்கு, கிராம நத்தம் ஆகியவை ஒரே பொருள்படும் வார்த்தைகளாக கருத முடியாது.. கிராம நத்தம் என வகைப்படுத்தப்பட்ட நிலத்தில் வீடு கட்டி வசிப்பவர்களை, ஆக்கிரமிப்பாளர்களாக கருத முடியாது. இவர்களை ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறி அகற்ற, அரசுக்கு அதிகாரம் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+