இந்த 4 ராசிகள்தான் அதிர்ஷ்டக்காரர்கள்.. 2025ல் வாழ்க்கையே மாறும்.. பாபா வங்காவின் அசத்தல் கணிப்பு
சென்னை: பாபா வங்காவின் வைரல் கணிப்பின்படி, 2025ம் ஆண்டு மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடகம் ஆகிய 4 ராசிகள் நிதி ரீதியாக பலனடையப் போகின்றன.
பாபா வங்காவின் அதிர்ச்சி தரும் கணிப்புகள் பற்றி நாம் பார்த்த நிலையில்.. அவர் யார் என்று ஒரு சின்ன இன்ட்ரோ பார்த்து விடலாம். பல்கேரியாவை சேர்ந்த மூதாட்டி பாபா வங்கா. இவர் 1996லேயே இறந்துவிட்டார். பிறகு ஏன் இவரின் கணிப்பு முக்கியத்துவம் பெறுகிறது என்று கேட்கிறீர்களா?

இன்னும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு அவர் இறக்கும் முன்பே கணிப்புகளை எழுதிவைத்துவிட்டு சென்றுள்ளார். இவருக்கு 12-13 வயது இருக்கும் போது பல்கேரியாவில் ஏற்பட்ட பெரும் புயல் வெள்ளத்தில் பாபா வங்காவின் கண்களில் மின்னல் தாக்கி அவருக்கு பார்வை பறிபோனது.
சக்தி: அந்த நொடியில் அவருக்கு எதிர்கால காட்சிகள் மனதில் வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் எந்த வருடத்தில் என்ன நடக்கும் என்பது இவருக்கு தினமும் காட்சிகளாக வந்துள்ளதாம். இதைத்தான் இவர் கணிப்புகளாக எழுதி உள்ளார். கடவுள் தனக்கு கொடுத்த சக்தி இது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 5079ம் ஆண்டு உலகம் அழியும் என்றும், அது வரையிலான கணிப்புகளை இவர் எழுதி வைத்துவிட்டு மரணம் அடைந்துள்ளார்.
இதுவரை உலகின் பல முக்கிய நிகழ்வுகளை இவர் துல்லியமாக கணித்ததாக கூறப்படுகிறது. உதாரணமாக 9/11ல் அல்கொய்தா அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தில் தாக்குதல் நடத்தியதை இவர் துல்லியமாக கணித்து இருந்தாராம். அதேபோல் இளவரசி டயானா மரணம், தாய்லாந்தில் ஏற்பட்ட 2004 சுனாமி, ஜப்பான் சுனாமி, அமெரிக்க அதிபராக ஒபாமா பதவி ஏற்றது, சோவியத் யூனியன் உடைந்தது என்று பல விஷயங்கள் இவர் கணித்து உள்ளாராம்.
பாபா வங்காவின் வைரல் கணிப்பின்படி, 2025ம் ஆண்டு மேஷம், ரிஷபம், மிதுனம் மற்றும் கடகம் ஆகிய 4 ராசிகள் நிதி ரீதியாக பலனடையப் போகின்றன.
2025 ஆம் ஆண்டிற்கான பாபா வங்காவின் ஜோதிட கணிப்பு:
மேஷ ராசி - பாபா வங்காவின் கூற்றுப்படி, 2025 ஆம் ஆண்டு மேஷ ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் அந்தஸ்து உயரும், எல்லா துறைகளிலும் வெற்றி பெறுவார்கள்.
ரிஷப ராசி - ரிஷப ராசியினருக்கு இந்த ஆண்டு நிதி ரீதியாக மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த ஆண்டு நீங்கள் எந்த வேலையைச் செய்தாலும் அதில் வெற்றி பெற 99 சதவீதம் வாய்ப்புகள் உள்ளன. மேலும், நிலுவையில் உள்ள அனைத்து வேலைகளும் முடிவடையும் மற்றும் நீங்கள் சிறந்த முடிவுகளைப் பெறுவீர்கள்.காதல் கைகூடும்.
மிதுனம் ராசி - இது தவிர, 2025 மிதுன ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமானதாக இருக்கும். இந்த ராசிக்காரர்களுக்கு இந்த வருடம் வாழ்க்கையில் மகிழ்ச்சி மட்டுமே இருக்கும். நீண்ட நாட்களாக எதையாவது திட்டமிட்டு இருந்தால், அது இந்த வருடத்தில் நிச்சயம் நிறைவேறும். திடீர் பலன்களைப் பெறலாம். திருமணம் நடக்கும்.
கடகம் ராசி - இந்த ராசிக்காரர்களுக்கும் இந்த வருடம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கடக ராசிக்காரர்கள் பணப் பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். மேலும் நிலுவையில் உள்ள பணிகள் நல்ல பலன்களுடன் முடிவடையும்.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications