'ஸ்டார்லிங்க்' அனுமதி.. இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் .. பொருளாதார நிபுணர் வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: 'ஸ்டார்லிங்க்' சேவைக்கு அனுமதி அளிக்குமாறு எலான் மஸ்க் கடந்த சில நாட்களாக இந்தியாவைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஸ்டார்லிங்க் என்பது வெறும் தொழில்நுட்பம் மட்டுமல்ல; மஸ்க் என்பவரும் வெறும் தொழில் அதிபர் மட்டுமல்ல. தேசிய நெருக்கடி காலங்களில், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையிலும் ஸ்டார்லிங்க் பயன்படுத்தப்படக்கூடும் என்று சென்னையைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் முத்துக்கிருஷ்ணன் தண்டபாணி தெரிவித்துள்ளார்.

உலகின் நம்பர் 1 செல்வந்தர் எலான் மஸ்க் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா, எக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களை நடத்தி வருகிறார். எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு சுமார் 81.5 லட்சம் கோடிக்கு மேல் உள்ளது. செல்போன் சிக்னல் இல்லாத இடங்களுக்கும் செயற்கைகோள் வாயிலாக இணையதள சேவை வழங்கும் தனது 'ஸ்டார்லிங்க்' திட்டத்தை உலகின் பல்வேறு நாடுகளுக்கு எலான் மஸ்க் செயல்படுத்தி வருகிறார். அந்த வகையில் இந்தியாவிலும் அந்த சேவையை அறிமுகப்படுத்த எலான்ஸ் மஸ்க் முயற்சி செய்தார்.

Granting permission for Starlink service poses a threat to India s security Economic expert warns

ஆனால் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் சில விதிமுறைகள், தேசிய பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் இந்திய விதிமுறைகளுடன் பொருந்தவில்லை என்பதால் இந்தியாவில் இந்த திட்டத்திற்கான ஒப்புதல் இன்னும் கிடைக்காமல் உள்ளது.

இதனிடையே இந்தியாவில் 11,256 கிராமங்களில் 4ஜி சேவை இல்லை என்ற ஒருவர் ட்விட் போட்டார். அதற்கு பதில் அளித்த எலன் மஸ்க் ஸ்டார்லிங்க் இந்தியாவில் அறிமுகமாவதற்கு சில சக்திவாய்ந்தவர்கள் தடையாக இருப்பதாக குற்றம்சாட்டினார். போக ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ளவே ஸ்டார்லிங்க் சேவையை சில செல்வந்தர்கள் தடுப்பதாக கூறிய மஸ்க், இதை இந்திய மக்களுக்கு இழைக்கப்படும் குற்றம் என்று தெரிவித்தார்.

எலான் மஸ்க்கின் குற்றச்சாட்டு குறித்து மத்திய அரசு அளித்த விளக்கத்தில், "எலான் மஸ்க் குற்றச்சாட்டு அடிப்படை ஆதாரமே கிடையாது. இந்தியாவில் செயற்கைக்கோள் இணைய சேவைகளுக்கு பாரபட்சமற்ற அனுமதி வழங்கப்பட்டிருக்கிறத 3 நிறுவனங்களுக்கு செயற்கைக்கோள் இணைய சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அனைத்து செயற்கைக்கோள் தகவல் தொடர்பு சேவைகளுக்கும் நியாயமான, பாகுபாடற்ற விதிமுறைகளே பின்பற்றப்படுகின்றன. ஸ்டார்லிங்க் உள்ளிட்ட 3 நிறுவனங்களுக்கும் GMPCS உரிமம் வழங்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு மதிப்பீடு முடிந்ததும் அலைக்கற்றை ஒதுக்கீட்டுக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எலான் மஸ்க் மீண்டும் 'எக்ஸ்' தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், "ஸ்டார்லிங்க் 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் உரிமம் பெற்றுள்ளதுடன், இந்திய அரசின் ஒவ்வொரு சட்டத்தையும், தேவையையும் ஐந்து ஆண்டுகளாகப் பின்பற்றி வருகிறது. அப்படியிருந்தும் ஏன் இன்னும் உரிமம் வழங்கப்படவில்லை? இந்தியாவின் உண்மையான தலைவர் அம்பானியா?" என்று கேள்வி கேட்டிருந்தார்.

இதுபற்றி சென்னையைச் சேர்ந்த பொருளாதார நிபுணர் முத்துக்கிருஷ்ணன் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில், "இரண்டு உண்மைகள் ஒரே நேரத்தில் நிலவக்கூடும். இந்தியாவின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் பெரும் பகுதியை ஒரு குறிப்பிட்ட குழுவே கட்டுப்படுத்துவது நாட்டின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமானதல்ல என்று நான் முன்பே கூறியுள்ளேன். அந்தக் குழு மின்சாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சிமெண்ட், தாமிரம் மற்றும் சுரங்கத் தொழில் போன்ற பிற முக்கியத் துறைகளிலும் வேகமாகத் தனது ஆதிக்கத்தை விரிவுபடுத்தி வருகிறது. நிலைமை மாற வேண்டும்.

அதே வேளையில், 'ஸ்டார்லிங்க்' (Starlink) சேவைக்கு அனுமதி அளிக்குமாறு எலான் மஸ்க் கடந்த சில நாட்களாக இந்தியாவைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஸ்டார்லிங்க் என்பது வெறும் தொழில்நுட்பம் மட்டுமல்ல; மஸ்க் என்பவரும் வெறும் தொழில் அதிபர் மட்டுமல்ல. தேசிய நெருக்கடி காலங்களில், இந்தியாவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விளைவிக்கும் வகையிலும் ஸ்டார்லிங்க் பயன்படுத்தப்படக்கூடும்.

அமெரிக்காவின் மிகப் பெரிய பணக்காரரோ அல்லது முன்னணி தொழில்நுட்பத் தலைவர் மட்டுமல்லாமல், அந்நாட்டின் மிகச் செல்வாக்கு மிக்க தனியார் நபர்களில் ஒருவராகவும் மஸ்க் திகழ்கிறார். அவரை ஒரு நடுநிலையான வணிகக் கூட்டாளியாக மட்டும் கருதக்கூடாது. சீனா அடைந்துள்ளதைப் போன்றதொரு தன்னிறைவு நிலையை இந்தியா அடைவதை அமெரிக்க அதிகார வர்க்கத்தில் உள்ள உயர்மட்டத்தினர் விரும்புவதில்லை. ஒரு பெரும் நெருக்கடி சூழலில், மஸ்க்கும் அவரது நிறுவனங்களும் இந்திய நலன்களுக்கு எதிரான வகையில் அமெரிக்கக் கொள்கைகளுக்கு ஆதரவாகச் செயல்படக்கூடும்.

சமீபத்திய நடவடிக்கையாக, டிசிஎஸ், இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ உள்ளிட்ட இந்தியத் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்கள் மேற்கொள்ளும் 'கிரீன் கார்டு' ஸ்பான்சர்ஷிப் விண்ணப்பப் பதிவுகளை அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ளது. ரஷ்யாவிலிருந்து தொடர்ந்து கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வதற்காக இந்தியா 100% வரை அதிக இறக்குமதி வரிகளைச் சந்திக்க நேரிட்டாலும் நான் ஆச்சரியப்படமாட்டேன்.

அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவு மிகவும் கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. அமெரிக்கா இந்தியாவின் மீது மேலும் மேலும் விரோதப் போக்கைக் கடைப்பிடித்து வருகிறது. வரவிருக்கும் காலம் மிகவும் சவாலானதாக இருக்கப்போகிறது.இந்தியாவில் ஒரு சிலரின் கைகளில் அதிகாரம் குவியும் 'ஒலிகார்சி' (oligarchy) அல்லது அதிகாரக் குவிப்பு முறை நிலவுகிறது என்பது உண்மைதான். அதே சமயம், நெருக்கடி காலங்களில் எலான் மஸ்க்கை நம்ப முடியாது என்பதோடு, அவர் இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டையும் எடுக்கக்கூடும் என்பதும் உண்மையே.

'ஒலிகார்சி' என்பது தீர்க்கப்பட வேண்டிய ஒரு உள்நாட்டுப் பிரச்சனையாகும். ஸ்டார்லிங்க் என்பது இந்தியாவில் அனுமதிக்கப்படக் கூடாத ஒரு வெளிநாட்டு அச்சுறுத்தலாகும். எலான் மஸ்க் விஷயத்தில் நாம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்." இவ்வாறு கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+