குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு வீடு தேடி வரும் நல்ல செய்தி.. ரெடியாக இருங்க
சென்னை: ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கு இன்று முதல் நல்ல செய்தி வீடு தேடி வரப்போகிறது. புதிய ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும் என்பதை இன்றே நீங்கள் அறிய முடியும். அதேபோல் புதிய குடும்ப அட்டை வாங்க இன்று முதல் விண்ணப்பிக்கலாம். ஏனெனில் நடத்தை விதிமுறைகள் முடிந்துவிட்டன.
நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பு கடந்த மார்ச் 16-ந் தேதி வெளியிடப்பட்டது. மார்ச் 16 தொடங்கி ஜூன் 6ம் தேதி வரை தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தன. தேர்தல் நடத்தை விதிகள் ஜூன் 6-ந் தேதியான வியாழக்கிழமை அமலில் இந்த காரணத்தால் அரசின் புதிய அறிவிப்புகள் வெளியாகவில்லை. புதிய திட்டங்கள், மக்கள் குறைதீர் கூட்டங்கள், விவசாயிகள் குறைதீர்கூட்டங்கள் எதுவுமே நடைபெறவில்லை.. எல்லாமே தற்காலிகாக ரத்து செய்யப்பட்டன.

இதுதவிர தேர்தல் ஆணைய நடத்தை விதிமுறைகளின் படி, ஒருவர் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. அதிக மதிப்புள்ள பொருட்கள் கொண்டு செல்லவும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பறக்கும் படையினர், நிலையான கண்காணிப்பு குழுக்கள், வீடியோ கண்காணிப்பு குழுக்கள் மற்றும் வருமான வரித்துறையினரின் பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தொடர் சோதனை நடத்தி ரொக்கப்பணம், தங்கம், வெள்ளி உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள், மதுபான வகைகள், இலவச பரிசுப்பொருட்கள், போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. உரிய ஆவணங்கள் காட்டப்பட்ட பொருட்கள் மட்டும் திரும்பி தரப்பட்ன.
தேர்தல் நடந்த மாநிலங்களில் எல்லாம் தீவிரமாக அமலில் இருந்த நடத்தை விதிமுறைகள் கடந்த ஜூன் 6ம் தேதி நள்ளிரவோடு தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்பட்டன. இனி பணம், பொருட்கள் கொண்டு செல்வதில் எந்தவித கட்டுப்பாடும் இல்லை. அதேபோல் அரசு புதிய திட்டங்கள் அறிவிக்கவும், புதிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவும் எந்த பிரச்சனையும் இல்லை. இதேபோல் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கவும், புதிய குடும்பஅட்டை தரவும் இனி எந்த கட்டுப்பாடும் இல்லை.
கடந்த இரண்டு மாதங்களாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக குடும்ப அட்டை பெற முடியாமல் தவித்து வந்தவர்கள் மற்றும் குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்ய முடியாமலும் தவித்து வந்தவர்கள் இன்று முதல் எளிதாக மாற்றங்களை செய்ய முடியும். சுமார் 2 லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்கள் ஸ்மார்ட் கார்டுகள் கேட்டு கடந்த ஒரு வருடத்தில் விண்ணப்பம் செய்தவர்களுக்கு அதிகாரப்பூர்வ வேலை நாளான திங்கள்கிழமை (இன்று) முதல் விண்ணப்பம் செய்தவர்களின் மனுக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க உள்ளார்கள்.
தமிழகத்தில் பொதுமக்கள் குடும்ப அட்டைகள் பெற https://www.tnpds.gov.in என்ற இணையதளம் மூலம் இன்று முதல் விண்ணப்பம் செய்யலாம். ஒருவேளை ஆன்லைனில் விண்ணப்பிக்க தெரியாது என்றால். இசேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் நகல் ஸ்மார்ட் கார்டு, கார்டில் புதிய உறுப்பினர்களை சேர்க்க, முகவரி மாற்றம் செய்ய, குடும்ப தலைவர் மாற்றம் செய்ய, குடும்ப உறுப்பினர் நீக்கம் போன்ற அத்தனை சேவைகளும் பெற முடியும்
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications