துபாய் ரோட்டை பார்த்து இருக்கீங்களா? அதைவிடுங்க சென்னை ரோட்டை பாருங்க.. அல்டிமேட்டாக மாறும் சாலைகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ.442.75 கோடி மதிப்பில் 741.93 கி.மீ நீளத்திலான 4,711 உட்புறச் சாலைகளும், 20.38 கி.மீ நீளத்திலான 39 பேருந்து தட சாலைகளும் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கார சென்னை 2.O திட்டத்தின் கீழ் சென்னை சாலைகளின் தரத்தை மேம்படுத்துதல் மற்றும் புதிய சாலைகளை அமைத்தல் போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன. மட்டுமல்லாது 47 ஆண்டுகளுக்கு பின்னர் சென்னை மாநகராட்சி விரிவாக்கம் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சென்னையின் மொத்த பரப்பளவு 5,904 சதுர கி.மீட்டராக விரிவடைகிறது. இதில் 1,225 கிராமங்கள் கூடுதலாக சேர்ந்துள்ளன. இவைகளுக்கும் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Greater Chennai Corporation announced that the construction of roads worth Rs. 442.75 crore will start soon in Chennai

இந்நிலையில், 4,750 சாலைகள் அமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கப்பட இருப்பதாக மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான அறிவிப்பில், "மாநகராட்சி சார்பில் 387 கிமீ நீளமுடைய 471 பேருந்து தட சாலைகள் மற்றும் 5 ஆயிரத்து 270 கிமீ நீளமுடைய 34 ஆயிரத்து 640 உட்புறச் சாலைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மாநகராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் சாலைப் பணிகள் அனைத்தும் பொறியாளர்களின் நேரடி மேற்பார்வையில் ஏற்கெனவே அமைக்கப்பட்ட பழைய சாலைகள் முழுவதுமாக அகழ்ந்தெடுக்கப்பட்டு, தரமான சாலைகளாகப் புதிய சாலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.

சிங்கார சென்னை 2.0 திட்டத்தின்கீழ் 2022-23-ம் ஆண்டில் திருவொற்றியூர், மணலி, ராயபுரம், வளசரவாக்கம், அடையாறு மற்றும் சோழிங்கநல்லூர் ஆகிய மண்டலங்களில் ரூ.55.61 கோடியில் 414 உட்புற சாலைகள் மற்றும் 38 பேருந்து தடச் சாலைகள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்புத் திட்டத்தில் அனைத்து மண்டலங்களிலும் ரூ.149 கோடியில் 1,335 சாலைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு முடிக்கப்பட்டுள்ளன.

நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டம் 1-ல் ரூ.162.69 கோடியில் மொத்தம் 222.59 கிமீ நீளமுடைய 1,408 சாலைப் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் கோரப்பட்டு பணி நடைபெற்று வருகிறது. திட்டம் 2-ல் ரூ.97.49 கோடியில் 147.84 கிமீ நீளத்துக்கு 917 உட்புற சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தில் ரூ.298.04 கோடியில் 517.7 கிமீ நீளமுடைய 3,298 சாலைப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. தமிழ்நாடு நகர்ப்புற சாலைகள் உட்கட்டமைப்புத் திட்டத்தில் ரூ.144.71 கோடியில் 244.61 கிமீ நீளமுடைய 1,452 சாலைப் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தம் கோரப்பட்டு, பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. மொத்தம் ரூ.442.75 கோடியில் 763 கிமீ நீளத்துக்கு, 4,750 சாலைகள் அமைக்கும் பணி விரைவில் தொடங்கப்பட உள்ளது" என்று கூறப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+