உயர்தொழில்நுட்ப கண்காணிப்பு மண்டலமாக.. உருவெடுக்கும் மெரினா பீச்.. களமிறக்கப்பட்ட 300 ஏஐ கேமரா
சென்னை: சென்னை காவல்துறை, மெரினா கடற்கரை பகுதியை உயர்தொழில்நுட்ப கண்காணிப்பு மண்டலமாக மாற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாக, அங்கு சுமார் 300 AI-திறன் கொண்ட சிசிடிவி கேமராக்களை நிறுவ முடிவு செய்து உள்ளது.
லேபர் சிலை முதல் சீனிவாசபுரம் வரை உள்ள 71 முக்கிய இடங்களில் இந்த கண்காணிப்பு அமைப்பு அமைக்கப்படவுள்ளது. இதில் 280 4K அல்ட்ரா HD கேமராக்களும், முகம் மற்றும் வாகன அங்கீகார வசதியுடன் கூடிய 20 PTZ அலகுகளும் அடங்கும்.

மெரினா காவல் நிலையத்தில் அமைக்கப்படவுள்ள ஒரு சிறிய கட்டுப்பாட்டு மையம், இந்த நேரடி காட்சிகளை வேப்பேரியில் உள்ள ICCC-க்கு அனுப்பும். ICCC என்பது ஒருங்கிணைந்த கண்காணிப்பு அமைப்பு ஆகும்.
இந்த முயற்சி பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துவதோடு, போதைப்பொருள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர். அதோடு அங்கே பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும், திருட்டு சம்பவங்களை தடுக்கும். அதோடு பொதுச்சொத்துக்களை சேதப்படுத்தும் நிகழ்வுகளும் தடுக்கப்படும். சமீபத்தில்தான் மெரினா கடற்கரையின் ஒரு பகுதி blue flag அங்கீகாரம் பெற்றது. இதையடுத்து அங்கே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. . இந்த முயற்சிக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் மற்ற கடற்கரைகளிலும் இந்த திட்டத்தை செயல்படுத்த இது ஊக்கமளித்துள்ளது என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மெரினா கடற்கரை நீச்சல் குளத்தை சுற்றி 30 ஏக்கர் பரப்பளவில் 40 மூங்கில் இருக்கைகள், 20 குடைகள், நான்கு கண்காணிப்பு கோபுரங்கள், விளையாட்டு உபகரணங்களுடன் கூடிய நான்கு குழந்தைகள் விளையாட்டு பகுதிகள், இரண்டு செல்ஃபி புள்ளிகள், கண்காணிப்புக்காக 20 கேமராக்கள், திறந்தவெளி உடற்பயிற்சி உபகரணங்கள் மற்றும் 24 ஜோடி மூங்கில் குப்பைத் தொட்டிகள் உள்ளிட்ட பல வசதிகளை மாநகராட்சி ஏற்கனவே உருவாக்கியுள்ளது. மேலும் 40 அடி அகலம் மற்றும் 30 அடி உயரம் கொண்ட மூங்கில் வளைவு, தியான இடம் (30 அடிx30 அடி) மற்றும் வாசிப்பு இடம் (16 அடிx16 அடி), 30 சக்கர நாற்காலிகள் மற்றும் கழிப்பறைகள் உள்ளிட்ட வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
தூய்மை பணிகள்
மெரினா கடற்கரையின் தூய்மை மற்றும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்கான பொறுப்பை உப்ராசர் நிறுவனத்திடம் சென்னை மாநகராட்சி ஒப்படைத்துள்ளது. இப்பணி அதிகாரப்பூர்வமாக இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
தொழிலாளர் சிலை முதல் கலங்கரை விளக்கம் வரையிலான 2.4 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கடற்கரையில், தூய்மைப் பணிகளை மேற்கொள்ள 100 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள். இப்பணியாளர்கள் கடற்கரையை சுத்தமாக வைத்திருக்க முழு ஒத்துழைப்பு வழங்குவார்கள்.
இப்பணியில் ஈடுபடும் 70 ஊழியர்கள் காலை 6 மணி முதல் மதியம் 2 மணி வரை பணியாற்றுவார்கள். அதே போல், மீதமுள்ள 30 பேர் மதியம் 2 மணி முதல் இரவு 10 மணி வரை பணியில் ஈடுபடுவார்கள். மணற்பரப்பை சுத்தம் செய்ய டிராக்டர்கள் தொடர்ந்து பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், மெரினா கடற்கரையை சுத்தமாகவும், குப்பைகள் இல்லாமலும் பராமரிக்க பொது மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. கடற்கரையை தூய்மையாக வைத்திருக்க பொதுமக்களின் ஆதரவு மிகவும் அவசியம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
நீலக்கொடி கடற்கரை
இது போக சென்னை மாநகராட்சி திருவான்மியூர், பாலவாக்கம், உத்தண்டி கடற்கரையை நீலக்கொடி கடற்கரைகளாக மேம்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்கியுள்ளது.
இந்த திட்டம் ஒவ்வொரு கடற்கரையிலும் 10-20 ஏக்கர் பரப்பளவில் மேற்கொள்ளப்படும். கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் (CRZ) விதிமுறைகளை பின்பற்றி தமிழ்நாடு நிலையான கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதாரத்தை பயன்படுத்துதல் (TN-SHORE) மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை ஆகியவை இந்த திட்டத்திற்கான பகுதியை தேர்ந்தெடுக்கும்.
-
Gold Price Fall: ஈரான் போருக்கு மத்தியில்! தங்கம் விலை குறைய 5 முக்கிய காரணங்கள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் பெரிய ரிங் ரோட்டில்.. வருது ராட்சச ரயில் பாதை.. தமிழக அரசு கிரீன் சிக்னல்! தரமான முடிவு -
சென்னைக்கு சரிபட்டு வராது.. டபுள் டெக்கர் ஓபன் டாப் பஸ் திட்டத்தை கைவிடும் எம்டிசி.. பயணிகளுக்கு ஏமாற்றம் -
15 வருட ஏக்கம்! சென்னை வேளாங்கண்ணி இடையே நேரடி ரயில் சேவை! பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி தந்த ரயில்வே -
சென்னை தேர்தல் களத்தில் பிரியாணி கிடையாது? செலவினப் பட்டியலில் விடுபட்டதால் குழப்பம்! -
முடங்கிய பணிகள்.. கிளாம்பாக்கம் மெட்ரோவிற்கு ‘பச்சைக்கொடி’ காட்டாத மத்திய அரசு.. எல்லாம் போச்சு -
மார்ச் மாதத்தில் நடந்த மேஜிக்.. சென்னையில் அசாதாரணமான மழை.. வெதர்மேன் வெளியிட்ட பதிவு -
சென்னை மாநகர பஸ் பயணிகளுக்கு குட் நியூஸ்! கேஷ்பேக் ஆஃபரில் டிக்கெட்.. உடனே இதை பண்ணுங்க -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சிகள்.. சென்னையில் இன்றும் மழை வெளுக்கும்.. 24 ஆம் தேதி வரை விடாது! -
சென்னை விமான நிலையத்தில் போக்குவரத்து மாற்றம்.. ஸ்தம்பித்த ஜிஎஸ்டி சாலை.. வாகன ஓட்டிகள் கவனம் -
அடுத்த 3 மணி நேரம்.. தேனி டூ குமரி வரை.. 10 மாவட்டங்களில் விட்டு விளாசப் போகுது மழை.. வானிலை அலர்ட் -
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி!












Click it and Unblock the Notifications