விளையாட்டு மைதானம் தனியார்மயம்.. தீர்மானத்தை வாபஸ் பெற்றது சென்னை மாநகராட்சி
சென்னை: சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட செயற்கை புல் விளையாட்டு மைதானங்களை தனியார் மயமாக்கும் தீர்மானத்தை, மாநகராட்சி கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. இதற்கு திமுக கூட்டணி கட்சிகளே கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தற்போது இந்த தீர்மானம் வாபஸ் பெறப்பட்டிருக்கிறது.
சென்னையில் 595 பூங்கா, 9 கால்பந்து மைதானம், 2 அரங்குகளை தனியார்மயமாக்க மாநகராட்சி கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டிருந்தது. அதன்படி செயற்கை புல் தரைகள் கொண்ட 9 கால்பந்து மைதானங்களில் ஒரு மணி நேரத்திற்கு ரூ.120 கட்டணமாக வசூலிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இரண்டு அணிகள் (5+5) ஒரு மணி நேரம் விளையாடுவதற்கு ரூ.1200 கட்டணமாக செலுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுவரை இலவசமாக விளையாடி வந்த இளைஞர்கள் இனி கட்டணம் கட்டி விளையாட வேண்டுமா? என்று விளையாட்டு வீரர்கள் உட்பட திமுக கூட்டணி கட்சிகளான சிபிஎம், சிபிஐ உள்ளிட்ட கட்சிகளும், தனியார்மயத்திற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தன.

சென்னை உள்ளிட்ட பெரு நகரங்களில் இளைஞர்களிடையே போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். தவிர, சட்டவிரோத நடவடிக்கைகளிலும் இளைஞர்களின் பங்களிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவதாக சொல்லப்படுகிறது. ஏன் இளைஞர்கள் இவ்வாறு தவறான வழியில் செல்கிறார்கள்? என்பது குறித்து ஆய்வு செய்த போது, அவர்களின் திறனை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் போதுமானதாக இல்லை என்பதே காரணமாக இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
எல்லா இளைஞர்களுக்கும் விளையாட்டின் மீது ஆர்வம் அதிகம். ஆனால், சென்னையில் போதுமான அளவுக்கு விளையாட்டு மைதானங்கள் இருக்கிறதா? என்றால் அது கேள்விக்குறிதான். இருக்கும் கொஞ்சம் நஞ்சம் விளையாட்டு மைதானங்களையும் தனியார்வசம் ஒப்படைத்துவிட்டால், இளைஞர்களால் காசு கட்டி விளையாட முடியாது. எனவே, சமூக விரோத குற்றங்களில் இளைஞர்களின் பங்களிப்புகள் அதிகரித்துவிடும். ஆகவே தனியார்மயம் என்கிற திட்டத்தை கைவிட வேண்டும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தை சேர்ந்த இளைஞர்களும், கால்பந்தாட்ட வீரர்களும், மாநகராட்சி மாளிகை வளாகத்தில் கால்பந்து விளையாடியும், சைதாப்பேட்டை அம்மா பூங்கா மைதானம் வாயிலில் ஆர்ப்பாட்டம் நடத்தியும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்திருந்தனர்.
இதனையடுத்து இந்த தீர்மானம் கைவிடப்படுவதாக மாநகராட்சி மேயர் அறிவித்திருக்கிறார்.
பூங்காக்களை பொறுத்தவரை, 871 பூங்காக்களில் 98 பூங்காக்கள் தத்தெடுப்பு முறையிலும், 168 பூங்காக்கள் மாநகராட்சி மூலமும் பராமரிக்கப்படும் நிலையில், எஞ்சியுள்ள 595 பூங்காக்களையும் ரூ.55.60 கோடி செலவில் தனியார் மூலம் பராமரிப்புக்கு விடவும் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
மேலும், செனாய் நகர் அம்மா அரங்கத்தின் வாடகை ரூ.3.40 லட்சத்திலிருந்து ரூ.5.43 லட்சமாகவும், தி. நகரில் உள்ள சர்.பிட்டி. தியாகராயர் அரங்கத்தின் வாடகை ரூ.20,650 லிருந்து ரூ.50,000 ஆகவும் உயர்த்தி தனியாருக்கு 5 ஆண்டுகளுக்கு குத்தகை விடும் தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. இதிலிருந்து மாநகராட்சிக்கு ஆண்டுக்கு ரூ.2.22 கோடி வருவாய் கிடைக்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. இப்படி நடந்தால் சாமானிய மக்களால் மேற்குறிப்பிட்டதை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகும் என்று சிபிஎம், சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சிகள் சுட்டிக்காட்டியுள்ளன.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications