FedEx மோசடி! ஏமாந்துவிடாதீர்கள்! நடிகர் யோகிபாபு விழிப்புணர்வு வீடியோ! எச்சரிக்கும் காவல் துறை
சென்னை: FedEx மற்றும் TRAI மோசடிகள் தொடர்பான ஏராளமான புகார்கள் வந்ததை அடுத்து காமெடி நடிகர் யோகிபாபுவை வைத்து சென்னை காவல் துறை விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டு பொதுமக்களை எச்சரித்துள்ளது.
இதுகுறித்து யோகிபாபு வெளியிட்ட வீடியோ பதிவில் கூறியிருப்பதாவது: நான் காமெடி நடிகர் யோகிபாபு பேசுகிறேன். இந்த பதிவு சென்னை மாநகர காவல் துறைக்கு! அண்மைக்காலமாக முதியோர் உள்பட சிலருக்கு போன் வருகிறது. அதில் பேசும் நபர்கள் கொரியர் நிறுவனத்தினர் என அறிமுகப்படுத்திக் கொள்கிறார்கள்.

மும்பையிலிருந்து சீனாவுக்கு போன பார்சலில் 5 கிலோ தங்கம், போதை பொருட்கள், புலித்தோல்கள், பணம், டாலர் கரன்சிகள் உள்ளிட்டவைகளை கைப்பற்றியிருக்கிறார்கள். அந்த பார்சலுக்கும் உங்களுக்கும் சம்பந்தம் உண்டு என சொல்கிறார்களாம்.
அப்போது நாம் போனை கட் செய்துவிட்டால் "உங்களை சுற்றி மும்பை போலீஸ் கைது செய்துவிடுவார்கள். அதனால் நாங்கள் சொல்வதை முழுவதுமாக கேட்க வேண்டும். உங்களை பற்றிய தகவல்களை எங்களுக்கு அனுப்ப வேண்டும். தகவல்களை அனுப்பியதும், உங்கள் பணம் முழுவதையும் நீங்கள் எங்களுக்கு பரிமாற்றம் செய்துவிட வேண்டும்.
Greater Chennai Police have received numerous cases related to the FedEx and TRAI scams, where fraudsters pose as officers from the CBI, ED, and Mumbai Police to deceive victims.
— GREATER CHENNAI POLICE -GCP (@chennaipolice_) October 7, 2024
Watch actor #Yogibabu in the awareness video, helping spread the word and protect the public from… pic.twitter.com/ZcdWJ5gFxO
அந்த பணம் உங்களுடையதுதானா என கண்டுபிடித்த பிறகுதான் நாங்கள் அந்த பணத்தை உங்களுக்கு பத்திரமாக திருப்பி அனுப்புவோம்" என சொல்கிறார்களாம். அத்துடன் வீடியோ காலில் வருவார்கள். உங்களையும் வீடியோ காலில் வரச் சொல்வார்கள். இதுவரை காவல் துறையை பொருத்தவரை வீடியோ காலில் வரமாட்டாங்க, உங்களையும் வரச் சொல்ல மாட்டார்கள்.
இது மாதிரி உங்களுக்கு ஏதாவது ஒரு போன் வந்தால் 1930 என்ற எண்ணுக்கு போனில் புகார் அளித்துவிட்டு சென்னை மாநகர காவல் துறைக்கு நீங்கள் புகார் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்பார்கள். உங்கள் பணத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம். யாரும் ஏமாந்துவிடாதீர்கள். இவ்வாறு யோகி பாபு தனது வீடியோவில் தெரிவித்துள்ளார். இது வரை இது போன்ற புகார்களின் மூலம் ரூ 10 கோடி வரை மீட்கப்பட்டுள்ளது. உங்கள் போனுக்கு வரும் எந்த லிங்கையும் கிளிக் செய்ய கூடாது என சைபர் கிரைம் எச்சரிக்கை விடுத்துள்ளது.












Click it and Unblock the Notifications