Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சென்னை ஓஎம்ஆர் சாலையில் இனி ஜம்முன்னு போகலாம்.. இன்று முதல் முக்கியமான போக்குவரத்து மாற்றம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பழைய மகாபலிபுரம் சாலை (ஓஎம்ஆர் சாலை) திருவான்மியூர் சந்திப்பான டைடல் பார்க் பகுதியில் சோதனை அடிப்படையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்ட அறிவிப்பினை பார்ப்போம்.

சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் தான் சென்னையின் பெரும்பாலான ஐடி நிறுவனங்கள், கார்ப்பரேட் நிறுவனங்கள், மிகப்பெரிய மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்கள் காணப்படுகின்றன. அடையாறு கஸ்தூரி பாய் நகர் முதல் சிறுசேரி வரை ஏராளமான ஐடி நிறுவனங்கள் உள்ளன. இதன் காரணமாக நெரிசல் அதிகமாக உள்ளது. குறிப்பாக அடையாறு கஸ்தூரி பாய் நகர் முதல் சோழிங்க நல்லூர் வரை மெட்ரோ ரயில் வேலை நடப்பதால் போக்குவரத்து நெரிசல் மோசமாக உள்ளது.

Greater Chennai Traffic Police said on chennai OMR Road traffic traffic alteration from today

அதிலும் குறிப்பாக திருவான்மியூர் சந்திப்பான டைடல் பார்க் பகுதியில் மோசமான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.அந்த பகுதியில் மேம்பால பணி நடந்து வருகிறது.அந்த பணி நிறைவு பெற்றால் மட்டுமே ஓஎம்ஆர் சாலையில் போக்குவரத்து நெரிசல் கணிசமாக குறையும் என்ற நிலை உள்ளது.

இந்நிலையில் சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை ஓஎம்ஆர் சாலை திருவான்மியூர் சந்திப்பான டைடல் பார்க் பகுதியில் சோதனை அடிப்படையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றம் செய்துள்ளது. இதன்படி, திருவான்மியூரில் இருந்து வரும் வாகனங்கள் டைடல் பார்க் ஜங்சனில் மத்திய கைலாஷ் சிபிடி சந்திப்பை நோக்கி இடதுபுறம் திரும்ப தடை விதிக்கப்படுகிறது. அதற்கு பதிலாக அவர்கள் வலதுபுறம் திரும்பி அசென்டாஸ் சந்திப்பு வரை சென்று (nift அருகில்) யூடர்ன் எடுத்து அதன்பிறகு 100 மீட்டர் சிபிடி சந்திப்பை அடையலாம்.

டைடல் பார்க் ஜங்சனில் இருந்து வாகனங்கள் அசன்டாஸ் ஜங்சனில் தரமணி நோக்கி இடதுபுறம் திரும்ப தடை விதிக்கப்படுகிறது. அவர்களும் யூடர்ன் எடுத்து தரமணியை அடைய வேண்டும்.

வேளச்சேரியில் இருந்து வரும் வாகனங்கள் எஸ்ஆர்பி டூல்ஸ் சந்திப்பில் (ஹாலிடே இன் ஓட்டல்எதிரே) அப்பல்லோ மருத்துவமனை சந்திப்பு மற்றும் துரைப்பாக்கத்திற்கு செல்ல இடதுபுறம் திரும்ப தடைவிதிக்கப்படுகிறது. அதற்கு பதிலாகவும் அவர்களும் வலதுபுறம் சென்று புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ள யூடர்னில் வழியாக போக வேண்டிய இடத்திற்கு போகலாம்" இவ்வாறு சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+