• search
சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"பச்சை கொடி" வந்தாச்சே.. டாக்டர் சரவணன் இருக்காரே, இங்கேதான் சேர போறாராம்.. அட "அவரே" வாழ்த்திட்டாரே

Google Oneindia Tamil News

சென்னை: டாக்டர் சரவணன் திமுகவில் சேரப்போகிறாரா? இல்லையா? அல்லது ஓபிஎஸ் பக்கம் போகிறாரா? அல்லது பாஜக பக்கமே தஞ்சமடைய போகிறாரா? என்றெல்லாம் யூகங்கள் பறந்த நிலையில், இப்போது ஒரு பச்சை சிக்னல் கிடைத்துள்ளதாக தெரிகிறது.
டாக்டர் சரவணனை பொறுத்தவரை, தொகுதி மக்களிடம் இயல்பாகவே, நல்ல பெயர் பெற்றவர்.. சொந்த காசில் நிறைய நல்ல விஷயங்களை செய்து தந்தவர்..

அதிலும், கொரோனா காலத்தில் சரவணன் , தன் தொகுதி மக்களுக்காக செய்த நற்காரியங்களை யாராலும் அவ்வளவு சீக்கிரம் மறக்கவும் முடியாது.

டாக்டர் சரவணன் இல்ல மண விழா! படையெடுத்து வந்த நடிகர் -நடிகைகள் -அரசியல்வாதிகள் -தொழிலதிபர்கள்! டாக்டர் சரவணன் இல்ல மண விழா! படையெடுத்து வந்த நடிகர் -நடிகைகள் -அரசியல்வாதிகள் -தொழிலதிபர்கள்!

 கிலி துரோகம்

கிலி துரோகம்

அவரது மருத்துவமனை மூலம் பல ஏழை மக்களுக்கு இலவச சிகிச்சை செய்துள்ளார்.. ஆனால், அதேசமயத்தில், பதவிக்காகவும், சீட் தரவில்லை என்பதற்காகவும், இத்தனை கட்சிகளுக்கு ஒருவர் மாறி மாறி சென்று கொண்டிருக்கும் "சந்தர்ப்பவாத அரசியலையும், துரோக அரசியலையும்", மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதையும் யாரும் இங்கு மறந்துவிடவில்லை. கடந்த சில மாதங்களாகவே, சரவணன் திடீரென திமுக பக்கம் போக போகிறார் என்ற தகவல்கள் வட்டமடித்ததில் இருந்தே, மதுரை திமுகவில் கிலி ஏற்பட்டு வருகிறது..

 Dr சரவணன்

Dr சரவணன்

திமுகவில் மாவட்ட செயலாளர்களே, சரவணனுக்கு எதிராக உள்ளதாகவும் கூறப்பட்டு வருகிறது.. இப்படிப்பட்ட சூழலில்தான், டாக்டர் சரவணன் வீட்டில் விசேஷம் நடந்தது.. அவரது இல்லத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில், ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தியது ஆச்சரியத்தை கிளப்பியது.. அதுமட்டுமல்ல, ஓபிஎஸ் வருகையை முன்னிட்டு, ஏகப்பட்ட பேனர்களையும் வைத்து அசத்தியிருந்தார் சரவணன்..

அசத்தல்

அசத்தல்

இதனால், ஒருவேளை ஓபிஎஸ் பக்கம் சரவணன் சேரப்போகிறாரோ என்ற சந்தேகம் கிளம்பியது.. தொண்டர்கள் பெயர் ஒன்றுகூட இல்லாமல், வெறும் சரவணன் பெயர், போட்டோவை வைத்து, ஓபிஎஸ்ஸை வரவேற்றிருந்த பேனர், பலவித குழப்பத்தையும் தந்ததை மறுக்க முடியாது. அதனால்தான், ஓபிஎஸ் பக்கம் போக போகிறாரோ? சந்தேகமும் வலுத்தது.. ஏற்கனவே மதிமுக டூ திமுக டூ பாஜக டூ திமுக என ரவுண்டடித்து வரும் தினகரன், ஓபிஎஸ்ஸிடம் சேர்ந்தாலும் ஆச்சரியமில்லை என்ற முணுமுணுப்புகளும் கிளம்பின..

 முற்றுப்புள்ளி

முற்றுப்புள்ளி

ஆனால், அதேசமயம், அமைச்சர் பிடிஆர், தலைமையில் நடந்த இந்த திருமணத்தில், பாஜக நிர்வாகிகளும் கலந்து கொண்டதையடுத்து, திமுக மீதான சரவணனின் பிடித்தம் அந்த நிகழ்வில் வெளிப்பட்டது.. மேலும், சமூகம் சார்ந்த நிகழ்வு என்பதால் ஓபிஎஸ் அந்த நிகழ்வில் கலந்துகொண்டதாகவும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுவிட்டது. இப்போது இன்னொரு சீக்ரெட்டும் கசிந்துள்ளது.. தன்னுடைய மகன் திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலினுக்கும் சரவணன் அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் அவர் கலந்துகொள்ளவில்லை..

 வாழ்த்துமடல்

வாழ்த்துமடல்

எனினும், சரவணனின் மகன் திருமணத்திற்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து மடலை அப்போது அனுப்பி வைத்துள்ளார்.. அது இப்போது தெரியவந்திருக்கிறது. அந்த வாழ்த்து மடலில், "அன்புடையீர் வணக்கம்! தங்களின் மணவிழா அழைப்பிதழ் பெற்று மனமகிழ்ச்சி அடைந்தேன். 'இயல்பிலான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான் முயல்வருள் எல்லாம் தலை' என்று அய்யன் திருவள்ளுவர் வகுந்தளித்திருக்கும் இல்வாழ்வின் இலக்கணம் உணர்ந்து.

 கலைஞர்

கலைஞர்

தமிழும் அமுதம் போல், பெரியாரும் பகுத்தறிவும் போல், அண்ணாவும் கற்றலும் போல், கலைஞரும் கழகமும் போல், மணமக்கள் பல்லாண்டு காலம் பலரும் போற்றும் இணையராக இல்லறம் காண விழைகிறேன். அனைத்து செல்வங்களும் பெற்று வீட்டுக்கு விளக்காகி, நாட்டுக்கு ஒளி ஏற்றி வாழ்வாங்கு வாழ்ந்திட எனது இதயங்கனிந்த வாழ்த்துகள்" என குறிப்பிட்டிருக்கிறார். இந்த வாழ்த்து மடல்தான் இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது..

 சரவணன் ப்ளான்

சரவணன் ப்ளான்

சரவணனை மறுபடியும் கட்சிக்குள் கொண்டுவர தலைவர் ஸ்டாலினிடமிருந்து எந்த சிக்னலும் கிடைக்காமல் இருக்கிறதே என்ற சலசலப்புகள் வந்தவண்ணம் இருந்தன.. அநேகமாக திமுகவில் இணைய சரவணனுக்கு பச்சைக்கொடி காட்டி விட்டதாகவே தெரிகிறது.. மதுரையில் பிரம்மாண்ட மாநாடு ஒன்றை நடத்தி, அந்த மாநாட்டில் சில பாஜக முக்கிய தலைவர்கள், தொண்டர்களுடன் டாக்டர் சரவணன் திமுகவின் இணைவார் என்றெல்லாம் உலா வந்து கொண்டிருந்த தகவல், விரைவில் நிஜமாகலாம் என்றே தெரிகிறது.. பார்ப்போம்..!

English summary
Green Signal from DMK and Doctor Saravanan will join soon in DMK, says sources, what happened
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X