பெரிய வேலையை பார்த்துவிட்டு போன குரோக் ஏஐ.. மாலத்தீவு பற்றி மோடி சொன்னதை என்ன பண்ணி வச்சிருக்கு பாருங்க
சென்னை: குடியரசு தினத்தை முன்னிட்டு மாலத்தீவுக்கு நட்பு ரீதியாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்ட பதிவின் குரோக் மொழி பெயர்ப்பு சர்ச்சைக்குரிய வகையில் இருந்தது பயனர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏஐ அடிப்படையிலான தானியங்கி மொழிபெயர்ப்பு என்றாலும் இது பயனர்களுக்கு தவறான கண்ணோட்டத்தை கொடுக்கும் என்று நெட்டிசன்கள் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார்கள்.
பிரபல சமூக வலைத்தளமான எக்ஸ் தளத்தில் செயற்கை நுண்ணறிவு தளமாக குரோக் ஏஐ உள்ளது. சமூக வலைத்தளங்களில் பதிவுகளுக்கு நெட்டிசன்கள் கேட்கும் சந்தேகங்கள், மொழி பெயர்ப்பு உள்ளிட்டவற்றை ஏஐ செய்து கொடுப்பதை பார்க்கமுடியும்.

தவறாக மொழி மாற்றம் செய்த குரோக்
அவ்வப்போது குரோக் ஏஐ செயல்படுகள் வரம்பு மீறி இருப்பதாக சர்ச்சைகளும் எழுந்துள்ளன. சமீபத்தில் புகைப்படத்தை ஆபாசமாக குரோக் ஏஐ பயன்படுத்தி எடிட் செய்வதாக புகார் எழுந்த நிலையில், சில நாடுகளில் இதற்கும் தடையும் விதிக்கப்பட்டது. நிலைமை விபரீதமாக சென்றதையடுத்து, எலான் மஸ்க்கும் பயனர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்து இருந்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடியின் எக்ஸ் தள பதிவு ஒன்றை தவறாக மொழி மாற்றம் செய்து இருப்பது நெட்டிசன்கள் இடையே விவாதப்பொருளாகியுள்ளது. இது பற்றிய விவரம் வருமாறு:- இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றாக மாலத்தீவு உள்ளது. இந்திய பெருங்கடலில் உள்ள தீவு நாடான மாலத்தீவில் தற்போது சீன ஆதரவு நிலைப்பாடு கொண்ட முகம்மது முய்சு தலைமையிலான ஆட்சி நடத்தி வருகிறது.
இந்தியாவுக்கு மாலத்தீவு வாழ்த்து
அவர் கடந்த 2024 ஆம் ஆண்டு பதவியேற்றதும் இந்தியா மாலத்தீவு இடையேயன உறவில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு விரிசல் ஏற்பட்டது. இந்திய பிரதமர் மோடியை மாலத்தீவு முன்னாள் அமைச்சர்கள் இன ரீதியாக விமர்சனம் செய்தது இருநாடுகளுக்கும் இடையே மோதல் போக்கை ஏற்படுத்தியது.
இந்தியர்கள் பலரும் தங்கள் மாலத்தீவு சுற்றுப்பயணத்தை ரத்து செய்து கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். சுற்றுலா வருவாயை மட்டுமே பெரிதும் நம்பியிருக்கும் மாலத்தீவு இதனால், அரண்டு போனது. இதையடுத்து உடனடியாக மாலத்தீவு மன்னிப்பு கேட்டு இந்த பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது. தற்போது இந்தியா - மாலத்தீவு இடையேயான பதற்றம் தணிந்து இயல்பான நிலையில் சென்று கொண்டிருக்கிறது. இந்தியாவின் சுதந்திர தினம் குடியரசு தின நாட்களில் இந்தியாவுக்கு மாலத்தீவு உள்ளிட்ட நட்பு நாடுகள் வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.
பிரதமர் மோடி எக்ஸ் பதிவு
இதற்கு இந்திய பிரதமர் மோடியும் பதில் நன்றி தெரிவித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார். அந்தவகையில் மாலத்தீவு பிரதமர் இந்திய குடியரசு தினத்திற்கு நன்றி தெரிவித்து பதிவிட்டு இருந்தார். இதற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். பிரதமர் மோடி தனது எக்ஸ் பதிவில், இந்தியாவின் 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு உங்களுக்கு எனது உளமார்ந்த வாழ்த்துகளையும் நல்வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இரு நாடுகளின் மக்களின் நலனுக்காக நாம் தொடர்ந்து இணைந்து பணியாற்றுவோம். மாலத்தீவுகளின் மக்களுக்கு செழிப்பும் மகிழ்ச்சியும் நிறைந்த எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்." என்று பதிவிட்டு இருந்தார். இந்தியா மற்றும் மாலத்தீவுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் நல்லெண்ணத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வழக்கமான ராஜந்திர மெசேஜாக அது இருந்தது.
ஏடாகூடமாக மொழி பெயர்த்தது
ஆனால் இந்த பதிவை குரோக் ஏஐ மொழி பெயர்ப்பு செய்த பொது ஏடாகூடமாக மொழி பெயர்த்து இருந்தது. குரோக் ஏஐ மொழி பெயர்ப்பில், "சுகுரிய்யா, ராயிதுன் மஜ்லிஸ். இந்தியாவின் 77வது சுதந்திர தின விழா மாலத்தீவுகளில் நடத்தப்பட்டது, அதில் மாலத்தீவு அரசு கலந்து கொண்டது. இந்த சுகுரிய்யா அரசு இந்தியா எதிர்ப்பு பிரச்சாரங்களிலும் ஈடுபட்டுள்ளது.
இந்தியா எதிர்ப்பு பிரச்சாரங்களிலும் அவர்கள் போராட்டங்களில் முன்னணியில் இருந்தனர்," என்று அதில் கூறப்பட்டுள்ளது. இது ஏஐயின் தவறான மொழி பெயர்ப்பு என்றாலும், பயனர்கள் இதனை நம்பி தவறாக புரிந்து கொள்ளக்கூடும் என்று நெட்டிசன்கள் தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications