ஜில் ஜில் மக்களுக்கு ஜில்லென்று ஓர் செய்தி.. சென்னையில் நிலத்தடி நீர் மட்டம் 4 அடி உயர்வு
Recommended Video
சென்னை: சென்னையில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு அமைத்ததால் நிலத்தடி நீர் மட்டம் 4 அடி உயர்ந்துள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்தது.
கடந்த இரு பருவமழைகளும் பொய்த்துவிட்டதால் கோடை காலத்தில் சென்னையில் கடும் வறட்சி நிலவியது. மக்கள் குடிநீருக்காக அல்லோகப்பட்டனர்.
இரவு பகல் பாராமல் தண்ணீரை தேடி அலைந்தனர். தூக்கத்தை தொலைத்து கூலித் தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு தண்ணீர் வரும் லாரிகளுக்காக வழி மீது விழி வைத்து காத்திருந்த நிலை ஏற்பட்டது.

நிலத்தடி
மாநகராட்சிகளும் லாரிகள் மூலம் தண்ணீர் வழங்கி வந்தது. எனினும் தண்ணீர் பற்றாக்குறை தணியவில்லை. இந்த நிலையில் கோடை காலத்தில் வெப்பச்சலனம் காரணமாக ஆங்காங்கே சென்னையில் மழை பெய்தது. எனினும் அது நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதாக இல்லை.

வானிலை மையம்
ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன்னர் தொடர்ந்து மழை பெய்தது. இந்த மழை நீரை பிடித்து மக்கள் பயன்படுத்தினர். இந்த நிலையில் கடந்த வாரமும் சென்னையில் நல்ல மழை பெய்தது. மழை நீர் சேகரிப்பு திட்டத்தை தொடங்குமாறு வானிலை மைய நிபுணர்கள் மக்களுக்கு அறிவுறுத்தியிருந்தனர்.

4 நாட்கள் மழை
இந்த நிலையில் வெப்பச்சலனம் மற்றும் காற்றின் திசை காரணமாக அவ்வப்போது சென்னையில் மழை பெய்து வருகிறது. இந்த மழை இன்னும் 4 நாட்களுக்கு நீடிக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

நிலத்தடி நீர் மட்டம்
இந்த நிலையில் சென்னையில் மழை நீர் சேகரிப்பு அமைப்பு குறித்து மாநகராட்சி அதிகாரிகள் வீடு வீடாக சென்று ஆய்வு நடத்தினர். அப்போது மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் கூறுகையில் சென்னை மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் 4 அடி உயர்ந்துள்ளது.

ஒரு வாரம் கெடு
சென்னையில் 1,62,284 கட்டடங்களில் மழைநீர் சேகரிப்பில் நல்ல நிலையில் உள்ளது. மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு வைக்காதவர்கள் 69,490 பேருக்கு நோட்டீஸ் வழங்கியுள்ளோம். மழை நீர் கட்டமைப்பை சரி வர பராமரிக்காத 38, 507 வீடுகளின் உரிமையாளர்களுக்கு ஒரு வாரம் கெடு விதித்துள்ளோம் என்றார் பிரகாஷ்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications