மேடவாக்கம், மாம்பாக்கம்.. மாயமாகும் நிலத்தடி நீர்.. பிளாட் வாங்கியவர்கள் கவனத்திற்கு

Subscribe to Oneindia Tamil

சென்னை: பூமிக்கு அடியில் இருக்கும் தண்ணீர் என்பது அவரவர் பட்டா நிலத்தில் இருந்தாலும், தனிநபருக்கு சொந்தம் கிடையாது. எப்படி ஆற்று தண்ணீர் எல்லாருக்கும் பொதுவானதோ, அதுபோலத்தான் பூமிக்கு அடியில் பல ஆண்டுகளாக சேமிக்கப்பட்ட தண்ணீருக்கும் பொதுவானது.. அதனை முறைப்படுத்த அரசு பல்வேறு திட்டங்களை கொண்டுவரத்தான் போகிறது. அதேநேரம் தற்போது வரை தனிநபர்கள் நிலத்தடி நீரை பயன்படுத்த கட்டுப்பாடுகள் இல்லை.. ஆனால் நிலத்தடி நீரை வணிக நோக்கில் பயன்படுத்தி விற்க கடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன. அவ்வளவு எளிதாக அரசு அனுமதி தருவது இல்லை.

இதனால் ஒரு பிளாட்டை வாங்கி அதில், நிலத்தடி நீரை பல லட்சம் லிட்டரை தினமும் திருடுவது அதிகரித்துள்ளது. எனவே வீட்டு மனை வாங்கிப்போட்டவர்கள், புதிதாக பிளாட் வாங்குவோர், ராட்சத பைப்லைன், மின்சார கனெக்சன் மட்டும் வைத்து தண்ணீர் எடுப்பதை பார்த்தால் உடனே புகார் அளியுங்கள். அதிகாரிகள் உடனே சீல் வைப்பார்கள்.

Groundwater vanishing in Medavakkam and Mambakkam areas Attention plot buyers

காட்டாங்குளத்தூர், கூடுவாஞ்சேரி போன்ற ஏரி, குளங்கள் நிறைந்த பகுதிகளில் இதுபோன்ற சட்டவிரோதமாக தண்ணீர் திருடுவது நடப்பதாக புகார்கள் இருக்கிறது. உங்கள் பகுதியில் காலியாக உள்ள பிளாட்டுகளில் ராட்சத மோட்டார், ராட்சத பைப் வைத்து திறந்த வெளியில் தண்ணீர் திருடுகிறார்களா என்பதை பாருங்கள். அப்படி திருடினால், மாவட்ட ஆட்சி தலைவருக்கு போனில் அழைத்து பிரச்சனையை கூறலாம். அதேபோல் போட்டோ மற்றும் வீடியோ எடுத்து ஆதாரத்துடன் புகார் அளிக்கலாம். அப்படி புகார் அளித்தால், பல லட்சம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சுவதை தடுக்க முடியும்.

பொதுவாக வீடுகளுக்கு தண்ணீர் தேவை என்பது வெறும் 500 முதல் 1000 லிட்டர் தான் தேவைப்படும். ஆனால் நிலத்தடி நீரை சட்டவிரோதமாக உறிஞ்சி விற்கும் நிறுவனங்கள் தினமும் பல ஆயிரம் லிட்டர் தண்ணீரை திருடுவார்கள். இறுதியாக உங்களுக்கே நிலத்தடி நீர் கிடைக்காமல் போகும் அபாயமும் ஏற்படலாம்.

காட்டாங்குளத்தூரில் தான் இப்படி இருக்கிறது என்று பார்த்தால், தென்சென்னையின் பல்வேறு பகுதிகளில் இப்படி இருப்பது தெரியவந்துள்ளது. நெட்டிசன் ஒருவர் வெளியிட்ட பதிவில், "சென்னையில் மேடவாக்கம், சித்தாலபாக்கம், மாம்பாக்கம் பகுதிகளில், முதலீடுக்காக வாங்கி போடப்பட்டிருக்கும் பிளாட்களில் போர்போட்டு லாரிகளில் நிலத்தடி நீரை தவக்க திருடர்கள் திருடுகிறார்கள். உங்களுக்கு இந்த பகுதிகளில் பிளாட் இருந்தால் எச்சரிக்கையாக இருக்கவும்" இவ்வாறு கூறியுள்ளார்.

இன்னொரு கடினமான, மிக கசப்பான உண்மையை பலருக்கும் தெரியாது. தமிழ்நாடு 2018ம் ஆண்டு மழை இல்லாமல் கடுமையான வறட்சியை எதிர்கொண்டது. இதன் காரணமாக 2019ம் ஆண்டு கோடைக்காலத்தில் மயிலாப்பூர் முதல் அடையாறு வரை சுற்றுவட்டாரங்களில் போர்களில் தண்ணீர் இல்லாமல் மோசமான பாதிப்பை எதிர்கொண்டனர்.

2019ம் ஆண்டு கிட்டத்தட்ட 6 மாதம் ஒரு சொட்டு கூட மழையே பெய்யவில்லை.. மக்கள் கண்ணீருடன் தவித்த போது, அடுத்த ஜூன், ஜூலையில் பெய்த மழை தான் சென்னையை காப்பாற்றியது. எனவே நிலத்தடி நீர் இருக்கிறதே என்று உறிஞ்சு தள்ளுவதோ அல்லது மோட்டாரை போட்டு விட்டு ஆப் பண்ணாமல் விடுவதோ,நமக்கு மட்டுமல்ல, நம்மை சுற்றியுள்ளவர்களையுமே பாதிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+