Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரூப்-2 குளறுபடி.. டிஎன்பிஎஸ்சி தேர்வை ஒழுங்காக நடத்த முடியாத அரசு..ரத்து செய்க..இபிஎஸ் குட்டு

குளறுபடியாக நடத்தி முடிக்கப்பட்ட டி.என்.பி.எஸ்.சி. குரூப் 2 தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி தேர்வு போன்ற முக்கிய தேர்வுகளையே முறையாக கையாளத் தெரியாத இந்த நிர்வாகத் திறனற்ற திமுக அரசை வன்மையாக கண்டிப்பதாக எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார். 25ஆம் தேதி நடைப்பெற்ற குரூப் 2 தேர்வை ரத்துசெய்து,வேறு ஒருநாளில், உரிய முறையில் மறுதேர்வினை நடத்திட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய 5,529 பணியிடங்களுக்கான குரூப் 2, 2ஏ முதல்நிலை தேர்வு மே 21 அன்று நடைபெற்றது. 11,78,000 பேர் தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் 1 லட்சத்து 83 ஆயிரத்து 285 பேர் தேர்வு எழுதவில்லை. சுமார் 9 லட்சத்து 94 ஆயிரத்து 878 பேர் அதாவது 84.44 விழுக்காடு பேர் இந்த தேர்வை எழுதினர்.

Group-2 main Exam issue: Govt unable to conduct TNPSC exam properly says Edapadi Palanisamy

இந்த தேர்வில் தமிழில் தேர்வெழுத விரும்புவோருக்கு தமிழில் 100 கேள்விகள், பொது அறிவில் 75 கேள்விகள், ஆப்டிட்யூடில் 25 கேள்விகள் கேட்கப்பட்டது. இதுவே ஆங்கிலத்தில் தேர்வெழுத விரும்புவோருக்கு, பொது ஆங்கிலத்தில் 100 கேள்விகள், பொது அறிவியல் 75 கேள்விகள், ஆப்டிட்யூடில் 25 கேள்விகள் கேட்கப்படும். இவற்றின் மொத்த மதிப்பெண் 300க்கு எடுத்துக்கொள்ளப்படும். அதற்கு 90க்கும் அதிகமான மதிப்பெண் பெறுவது அடிப்படை.

இந்தத் தேர்வின் முடிவுகள், ஜூன் மாதத்தில் வெளியிடப்பட்டு, முதன்மை எழுத்துத்தேர்வு செப்டம்பர் மாதமும் நடைபெறும். டிசம்பர் 2022 - ஜனவரி 2023 மாதங்களில், கலந்தாய்வு மற்றும் நேர்முக தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.

பல்வேறு காரணங்களால் தேர்வு முடிவுகள் கடந்த நவம்பர் மாதம் வெளியானது. இதில் 55,071 பட்டதாரிகள் தேர்ச்சி பெற்றனர். இந்நிலையில், டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 2 - ல் நேர்முகத்தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அல்லாத பணிகளுக்கான முதன்மை தேர்வை கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்றது.

காலையில் தமிழ் மொழி தகுதித் தாள் தேர்வும், மதியம் பொதுத் தேர்வும் நடத்தப்பட்டது. சென்னை உள்பட தமிழகத்தின் 20 மாவட்டங்களில் 186 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு தேர்வர்கள் தேர்வு எழுதினர். காலை 9.30 மணிக்கு தேர்வு துவங்கி 12.30 மணி வரை நடந்தது.

தேர்வு நடந்த சில தேர்வு மையங்களில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. வினாத்தாளில் உள்ள பதிவு எண்கள் மாறி மாறி இருந்துள்ளன. இதனால், காலை 9.30 மணிக்கு தொடங்க இருந்த தமிழ் மொழி தகுதித் தாளுக்கான தேர்வு தாமதமானது. ஒரு சில மையங்களில் இந்த சிக்கல் உடனடியாக சரிசெய்யப்பட்டு தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதியவர்களுக்கு கூடுதல் நேரமும் வழங்கப்பட்டது.

இந்த நிலையில் பல்வேறு குளறுபடிகளுடன் நடைபெற்ற குரூப் 2 முதன்மைத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று எதிர்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிச்சாமி வலியுறுத்தியுள்ளார்.

Group-2 main Exam issue: Govt unable to conduct TNPSC exam properly says Edapadi Palanisamy

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், "தமிழ்நாட்டில் 25.02.23 - சனிக்கிழமை நடைபெற்ற TNPSC தேர்வில் வினாத்தாள்களின் பதிவு எண்கள் மாறியிருந்ததன் காரணமாக பல்வேறு குளறுபடிகளுடன் தாமாதமாக தொடங்கியுள்ளன. இதனால் பல முறைகேடுகள் நடந்துள்ளது. அதன் காரணமாக தகுதிவாய்ந்த தேர்வர்கள் தங்கள் வாய்ப்பினை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

TNPSC தேர்வு போன்ற முக்கிய தேர்வுகளையே முறையாக கையாளத் தெரியாத இந்த நிர்வாகத் திறனற்ற திமுக அரசை வன்மையாக கண்டிப்பதுடன்,உடனடியாக 25.02.23 நடைப்பெற்ற தேர்வை ரத்துசெய்து,
வேறு ஒருநாளில், உரிய முறையில் மறுதேர்வினை நடத்திட வேண்டும் என இந்த விடியா திமுக அரசை வலியுறுத்துகிறேன் என்று எடப்பாடி பழனிச்சாமி பதிவிட்டுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+