குரூப் 4 தேர்வு முறைகேடு: திடுக்கிடும் திருப்பம்.. 2 தாசில்தார்கள் கைது.. அழியும் மையால் அநியாயம்
சென்னை: குரூப் 4 தேர்வு முறைகேடில் திடுக்கிடும் திருப்பமாக மோசடியாளர்களுக்கு உடந்தையாக இருந்த 2 தாசில்தார்கள் சிபிசிஐடியால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிராம நிா்வாக அலுவலா், இளநிலை உதவியாளா் உள்பட குரூப்4 பிரிவில் காலியாக உள்ள சுமாா் 9 ஆயிரம் காலியிடங்களுக்கான, குரூப் 4 தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி தமிழகம் முழுவதும் 5575 மையங்களில் நடந்தது. 16 லட்சத்து 29 ஆயிரத்து 865 பேர், இந்தத் தேர்வை எழுதினார்கள்.
குரூப் 4 தேர்வு முடிவுகள் சமீபத்தில் வெளியானது. அதன்பின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது. தேர்வு நடைபெற்று மிகக் குறைந்த நாள்களில் அதாவது 72 நாள்களில் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாகத் தேர்வாணையம் தெரிவித்திருந்தது.

முதலிடங்கள்
இந்த நிலையில், தேர்வு முடிவுகளை பார்த்ததும், சந்தேகம் எழுந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை ஆகிய இரு நகரங்களிலும் உள்ள தேர்வு மையங்களில் குரூப் 4 தேர்வு எழுதிய 19 பேர் முதல் 19 இடங்களை பிடித்திருந்தனர். முதல் 100 இடங்களில் 39 ரேங்குகளை, குறிப்பிட்ட அந்த இரு தேர்வு மையங்களிலும் தேர்வு எழுதியவர்கள் பெற்றனர். இப்படி அவர்கள், சாதிக்க காரணம் என்ன என்பது பற்றி டிஎன்பிஎஸ்சி விசாரணையை தொடங்கியது.

தாசில்தார்கள்
அதன்பின்னர், இந்த முறைகேடு தொடர்பாக டிஜிபி திரிபாதியிடம் டிஎன்பிஎஸ்சி புகார் அளித்தது. இந்த புகாரை சிபிசிஐடி போலீசாருக்கு டிஜிபி திரிபாதி அனுப்பி வைத்தார். இதையடுத்து, சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று விசாரணையை தொடங்கி உள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட தாசில்தார்கள், பார்த்தசாரதி, வீரராஜ் ஆகியோர் விசாரணை வளையத்தின்கீழ் வந்துள்ளனர். அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குரூப் 4 தேர்வில் பார்த்தசாரதி ராமேஸ்வரம் மையத்திலும், வீரராஜ் கீழக்கரை மையத்தில் முதன்மை தேர்வு அதிகாரிகளாக பணியாற்றியுள்ளனர். அவர்களை சென்னைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.

ஷீட்டுகளில் முறைகேடு
இதையடுத்து, ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரையில் தேர்வு எழுதியவர்களில், விசாரணை வளையத்தில் உள்ள நபர்கள், அந்த தேர்வு மையங்களில் பணிபுரிந்த அலுவலர்கள் ஆகியோரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டு உள்ளனர். தேர்வு அதிகாரிகள், இடைத்தரகர்களுடன் சேர்ந்துகொண்டு, குறைவான மதிப்பெண் பெற்றவர்களின் ஓஎம்ஆர் ஷீட்டுகளை மாற்றி அதிக மதிப்பெண்கள் பெற வைத்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அழியும் சிறப்பு மை
இதனிடையே, குரூப்-4 தேர்வு முறைகேட்டில் ஈடுபட்ட 99 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து அரசுப் பணியாளர் தேர்வாணையம் உத்தரவிட்டுள்ளது. இனிமேல் அவர்களால் அரசு பணி தேர்வுகளை எழுத முடியாது. உடனடியாக அழியும் சிறப்பு மையை பயன்படுத்தி இந்த தேர்வர்கள் விடைகளை குறித்து விட்டு வந்திருக்கிறார்கள். இதன்பிறகு, விடைத்தாள்கள் தேர்வு மையங்களில் வைத்து மறுபடி, சரியான விடையுடன், திருத்தப்பட்டுள்ளது. இதனால்தான் அவர்கள் இத்தனை மதிப்பெண்கள் எடுக்க முடிந்துள்ளது. இதனிடையே, தரவரிசையில் முதல் நூற்றுக்குள், இடம் பெற்ற 39 தேர்வர்களுக்கு பதிலாக, தகுதி உடைய நபர்கள் தர வரிசையில் சேர்க்கப்பட்டு புதிய தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
-
கோவை கலெக்டர் ஆபீஸ் முன்பு ஷாக் சம்பவம்.. ரத்தவெள்ளத்தில் கிடந்த இளைஞர்.. பதுங்கியிருந்த 4 பேர் கைது -
Bakrid: பக்ரீத், வார இறுதிக்கு சொந்த ஊர் போறீங்களா.. போக்குவரத்துக் கழகத்தின் சூப்பர் அறிவிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications