விண்வெளியில் முத்திரை.. ஏர்டெல் பார்ட்னர்! 36 பிரிட்டன் சேட்டிலைட்களை சுமந்து சென்ற இந்தியா ராக்கெட்
சென்னை: இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ இன் 36 செயற்கைக்கோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 செயற்கைகோளை விண்ணில் ஏவி இருக்கிறது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் விண்வெளியில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்திக் கொண்டு வருகிறது. பி.எஸ்.எல்.வி. மற்றும் ஜி.எஸ்.எல்.வி ரக ராக்கெட்டுகள் மூலம் பல செயற்கைக்கோள்கை விண்ணில் ஏவி இருக்கிறது இந்தியா.
அறிவியல், தொழில்நுட்பம், புவியியல், வானிலை, பாதுகாப்பு, ஆராய்ச்சி போன்ற பல்வேறு காரணங்களுக்காக விண்வெளிக்கு செயற்கைக்கோள்கள் இஸ்ரோவால் அனுப்பப்பட்டு வருகின்றன.

36 செயற்கைக்கோள்கள்
இதேபோன்று வணிக அடிப்படையில் வெளிநாடுகளை சேர்ந்த செயற்கைக்கோள்களையும், இஸ்ரோ இந்தியாவின் ராகெட்டுக்களின் மூலமாக வணிக அடிப்படையில் விண்ணில் செலுத்தி வருகிறது. அந்த வகையில் இன்று 36 செயற்கைக்கோள்களுடன் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட்டை விண்ணில் செலுத்தி இருக்கிறது இஸ்ரோ.

கவுண்டவுன்
இதற்கான கவுண்டவுன் நேற்று நள்ளிரவு 12:07 மணியளவில் தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று இன்று நள்ளிரவு 12:07 மணியளவில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் அமைந்து இருக்கும் 2 வது ஏவுதளத்தில் இருந்து ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.

எடை எவ்வளவு?
திட, திரவ மற்றும் கிரையோஜெனிக் வகை எஞ்சின்களால் இயக்கப்படும் 3 நிலைகளை கொண்ட இந்த ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட் 5,796 டன் எடை கொண்ட 36 செயற்கைக்கோள்களை இஸ்ரோ விண்ணில் செலுத்தி இருக்கிறது. இதை சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3 ராக்கெட்டின் எடை 644 டன் ஆகும்.

பிரிட்டன் செயற்கைக்கோள்கள்
இதன் மூலம் வணிக ரீதியில் முறையாக அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை இந்திய ராக்கெட் சுமந்து சென்று சாதனை படைத்து இருக்கிறது. இதன் மூலம் வர்த்தக ரீதியிலான ராக்கெட் சேவையில் இஸ்ரோ புதிய மைல் கல்லை எட்டி இருக்கிறது. விண்ணில் ஏவப்பட்ட 36 செயற்கைக்கோள்களும் இங்கிலாந்தின் ஒன் வெப் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டதாகும்.

ஏர்டெர்ல் பங்குதாரர்
இந்த செயற்கைக்கோள்கள் குறைந்த உயர புவி சுற்று வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது. அரசு, வர்த்தம், கல்வி பயன்பாட்டு சேவைகளுக்காக ஒன் வெப் நிறுவனம் இந்த செயற்கைக்கோள்களை வடிவமைத்து இருக்கிறது. உலகின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமாக ஒன் வெப்-இன் முக்கிய பங்குதாரராக இந்தியாவின் பாரதி ஏர்டெல் நிறுவனம் உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications