இனி கியர் பைக்கா? ஸ்கூட்டரா? சூப்பர் பைக்கா? எது வாங்குவது பெஸ்ட்.. புதிய GST வரி சொல்வது என்ன?
சென்னை: மத்திய அரசின் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில், செப்டம்பர் 22 முதல் இரண்டு வரி விகிதங்களை மட்டுமே அமல்படுத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இனி 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் ஆகிய இரு விகிதங்களே முக்கிய வரிகளாக இருக்கும். இதன் காரணமாக பல கார் மற்றும் பைக் உள்ளிட்ட ஆட்டோமொபைல்களின் விலைகள் குறைய உள்ளன.
பான் மசாலா, சிகரெட், சர்க்கரை சேர்க்கப்பட்ட காற்றூட்டப்பட்ட பானங்கள் மற்றும் கார்பனேட்டட் பானங்கள் போன்ற சில பொருட்களுக்கு மட்டும் 40 சதவீத சிறப்பு வரி விதிக்கப்படும். நடுத்தர வர்க்கத்தினர் பயன்படுத்தும் பல பொருட்கள் 18 சதவீத வரி வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன.

தொலைக்காட்சிகள், ஏர் கண்டிஷனர்கள் மற்றும் 350 சிசி-க்கு குறைவான மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை இந்த வரி விகிதத்தில் அடங்கும். நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலுவலகம் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்ட பதிவில், "இந்த சீர்திருத்தங்கள் பல துறைகளையும், பல அம்சங்களையும் மையமாகக் கொண்டுள்ளன.
ஆட்டோமொபைல்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி
ஜிஎஸ்டி குழு கூட்டத்திற்கு பின் வெளியான விரிவான விளக்கத்தின்படி, 1,200 சிசி-க்கு குறைவான பெட்ரோல், எல்பிஜி மற்றும் சிஎன்ஜி வாகனங்கள், 4,000 மிமீ-க்கு மிகாத நீளம் கொண்டவை மற்றும் 1,500 சிசி-க்கு குறைவான டீசல் வாகனங்கள், 4,000 மிமீ நீளம் கொண்டவை ஆகியவை 28 சதவீதத்திலிருந்து 18 சதவீத வரி விகிதத்திற்கு மாற்றப்பட்டுள்ளன.
எந்தெந்த வாகனங்களுக்கு ஜிஎஸ்டி அதிகம்
1,200 சிசி-க்கு மேற்பட்ட பெட்ரோல் மற்றும் 1,500 சிசி-க்கு மேற்பட்ட டீசல் கார்களுக்கு 40 சதவீத வரி விதிக்கப்படும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். 1,200 சிசி-க்கு மேற்பட்ட மற்றும் 4,000 மிமீ-க்கு அதிகமான நீளம் கொண்ட அனைத்து தானியங்கி வாகனங்கள், 350 சிசி-க்கு மேற்பட்ட மோட்டார் சைக்கிள்கள், தனிப்பட்ட பயன்பாட்டிற்கான படகுகள், விமானங்கள் மற்றும் பந்தய கார்கள் ஆகியவற்றுக்கு 40 சதவீத வரி விதிக்கப்படும்.
மின்சார வாகனங்களுக்கான ஜிஎஸ்டி
மின்சார வாகனங்களுக்கு (EVs) தொடர்ந்து 5 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்படும். டிஷ்வாஷர்கள், மானிட்டர்கள் மற்றும் புரொஜெக்டர்கள் போன்ற பிற ஆடம்பரப் பொருட்கள் 18 சதவீத வரி வரம்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. சிமெண்டிற்கான ஜிஎஸ்டி வரி 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. மூன்று சக்கர வாகனங்களுக்கான வரியும் 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
ரூ. 20 லட்சம் முதல் ரூ. 40 லட்சம் வரையிலான மின்சார கார்களுக்கு 18% ஜிஎஸ்டி மற்றும் அதற்கு மேல் விலையுள்ள கார்களுக்கு 28% ஜிஎஸ்டி விதிக்க பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. இதனால் அந்த கார்களின் விலை அதிகம் உயரும் வாய்ப்புகள் உள்ளன.
20% எத்தனால் கலப்பு காரணமாக பெட்ரோல் வாகனங்களை பயன்படுத்தும் பலரும் இவி கார்களை பற்றி யோசிக்க தொடங்கி உள்ளனர். EV கார்களுக்கு தற்போதுள்ள 5% வரி விகிதத்திலிருந்து 18% ஆக வரி உயர்த்தப்படும் வாய்ப்புகள் உள்ளன. சுமார் $46,000 (சுமார் ரூ. 40 லட்சம்) க்கும் மேல் விலையுள்ள ஆடம்பர மின்சார கார்களுக்கு ஜிஎஸ்டியை கணிசமாக உயர்த்த வரி குழுமம் பரிந்துரைத்துள்ளது. இது அமெரிக்காவின் டெஸ்லா இன்க். முதல் சீனாவின் BYD வரை பல நிறுவனங்களுக்கு பின்னடைவாக அமையும்.












Click it and Unblock the Notifications