ஆசை ஆசையாக இருந்த.. மக்களுக்கு ஏமாற்றம்.. ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்ட பின்பு.. இப்படி ஆகிடுச்சே!
சென்னை: இந்தியாவில் ஜி.எஸ்.டி 2.0 வரிச் சலுகைகள் பெரும்பாலான நுகர்வோரை சென்றடையவில்லை என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்துகிறது. அத்தியாவசியப் பொருட்களுக்கும், ஆடம்பரப் பொருட்களுக்கும் வரி குறைக்கப்பட்ட போதிலும், விலை மாற்றங்கள் தாமதமாவதாலும், விநியோகச் சங்கிலியில் உள்ள குறைபாடுகளாலும் இந்தச் சலுகைகள் மக்களை சரியாக சென்றடைவதில்லை என்று புகார்கள் வைக்கப்படுகின்றன.
செப்டம்பர் 22 அன்று ஜி.எஸ்.டி 2.0 அறிமுகப்படுத்தப்பட்டு இரண்டு வாரங்களுக்கு மேல் ஆகிறது. இருப்பினும், வரி குறைப்பால் கிடைக்கும் பலன்கள் பெரும்பாலான இந்திய நுகர்வோரை சென்றடையவில்லை என்பதைக் நாடு தழுவிய ஆய்வு ஒன்று காட்டுகிறது.

LocalCircles என்ற அமைப்பு நடத்திய இந்த ஆய்வில், 332 மாவட்டங்களில் இருந்து 27,000க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து 78,000க்கும் அதிகமான பதில்கள் பெறப்பட்டன. ஜி.எஸ்.டி குறைப்புகளின் தாக்கம் பொருட்களுக்கு ஏற்றபடி மாறுகிறது. உதாரணமாக வாகனத் துறையில் மட்டுமே குறிப்பிடத்தக்க பலன்கள் நுகர்வோருக்கு கிடைத்துள்ளன.
ஜிஎஸ்டி பலன்கள் சென்று சேரவில்லை
இந்த ஆய்வில் பங்கேற்றவர்களில் 66% ஆண்கள், 34% பெண்கள் ஆவர். அடுக்கு-1 நகரங்களில் இருந்து 43%, அடுக்கு-2 மாவட்டங்களில் இருந்து 24%, அடுக்கு-3 முதல் அடுக்கு-5 மற்றும் கிராமப்புறப் பகுதிகளில் இருந்து 33% பேர் இந்த ஆய்வில் பங்கேற்றனர்.
பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், மருந்துகள், வீட்டு உபயோகப் பொருட்கள், வெள்ளைப் பொருட்கள், நுகர்வோர் மின்னணு சாதனங்கள் மற்றும் வாகனங்களுக்கான ஜி.எஸ்.டி குறைப்புகள் இறுதி விலைகளில் பிரதிபலிக்கிறதா என்று நுகர்வோரிடம் கேட்கப்பட்டது.
ஜிஎஸ்டி பலன்கள் கிடைக்கவில்லை
அரசு எடுக்கும் கொள்கை முடிவிற்கும் நுகர்வோரை அது சென்று சேர்வதற்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பதை இந்த ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்களைப் பொறுத்தவரை பலர் தங்களுக்கு ஜிஎஸ்டி பலன்கள் கிடைக்கவில்லை என்று கூறி உள்ளனர். 10% பேர் மட்டுமே முழு வரிச் சலுகையைப் பெற்றதாகத் தெரிவித்தனர். 21% பேர் பகுதி சலுகையைப் பெற்றனர்.
47% பேர், அதாவது கிட்டத்தட்ட பாதி பேர், எந்த விலைக் குறைப்பையும் பார்க்கவில்லை என்று கூறினர். மருந்துகளிலும் இதே நிலைதான்: 10% வாங்குபவர்கள் மட்டுமே முழுப் பலனைப் பெற்றனர், 24% பேர் பகுதி சலுகையைப் பெற்றனர், 60%க்கும் அதிகமானோர் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் செலுத்தினர்.
ஜிஎஸ்டி குறைப்பு பலன் இல்லை
மின்னணு சாதனங்கள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களில் நிலைமை சற்றே மேம்பட்டிருந்தது. சுமார் 34% நுகர்வோர் முழு ஜி.எஸ்.டி குறைப்பைப் பெற்றதாகத் தெரிவித்தனர், மேலும் 33% பேர் பகுதி சலுகைகளைப் பெற்றனர். இருப்பினும், வாகனங்கள் மிகவும் சாதகமான வகையாக இருந்தன. சுமார் 76% கார் வாங்குபவர்கள் குறைந்த ஜி.எஸ்.டி-யின் முழுப் பலனையும் பெற்றதாகக் கூறினர், 24% பேர் பகுதி சலுகையைப் பெற்றனர்.
ஜி.எஸ்.டி 2.0 சீர்திருத்தங்கள் சுமார் 80 பொருட்கள் மற்றும் சேவைகளை மலிவானதாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தன. பன்னீர் மற்றும் UHT பால் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் மீதான வரி 0-5% ஆகவும், சில மருந்துகளுக்கு 5% ஆகவும் குறைக்கப்பட்டது.
கார்கள், ஏர் கண்டிஷனர்கள், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் பெரிய தொலைக்காட்சிகள் போன்ற ஆடம்பரப் பொருட்களுக்கு வரி 28% இலிருந்து 18% ஆகக் குறைக்கப்பட்டது.
இந்த சீர்திருத்தங்கள் இருந்தபோதிலும், பல சில்லறை வணிகர்கள், ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் இரண்டிலும், விலைகளை முழுமையாக புதுப்பிக்கவில்லை. பல இடங்களில் பொருட்களின் விலையில் ஜி.எஸ்.டி-க்கு முந்தைய விலையிலேயே விற்கப்படுவதாக நுகர்வோர் தெரிவித்தனர். கோடிக்கணக்கான சில்லறை விற்பனை நிலையங்கள் இருப்பதால், ஜி.எஸ்.டி 2.0-ஐ FMCG மற்றும் மருந்துப் பிரிவுகளில் செயல்படுத்துவது சவாலானது என்பதையும் இந்த ஆய்வு எடுத்துக்காட்டுகிறது.
இதனால் அரசு என்னவோ ஜிஎஸ்டியை குறைத்து இருந்தாலும்.. இன்னமும் முழுமையாக அதன் பலன் மக்களை சென்று சேரவில்லை என்றே கூறப்படுகிறது.
-
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
விசிக + காங்கிரஸ்.. திமுகவையும் விட்டு வைக்காத இ.கம்யூனிஸ்ட்.. எந்தெந்த தொகுதிகளை கேட்குது பாருங்க! -
தேனியில் 25 சவரன் அடமான தங்க நகையை மீட்க போன பால் வியாபாரி.. கொத்தனார் வேற.. மக்களுக்கு பெரிய பாடம் -
Velmurugan: அதிமுகவின் "3+10" மெகா ஆஃபரால் திக்குமுக்காடிய வேல்முருகன்? திமுகவுக்கு தவாக கெடு! -
தங்கம்.. 15 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய சரிவு! 2011 செப்டம்பர் 'கிளைமாக்ஸ்' மீண்டும் நடக்கிறதா? -
அதிமுகவை அசிங்கப்படுத்திய பாஜக.. ஆண்ட கட்சிக்கு இவ்வளவு தான் சீட்டா? வயிற்றெரிச்சலில் ர.ரத்தங்கள்! -
என்ன விஜய் இதெல்லாம்? சேலத்தில் மானத்தை வாங்கிய தவெகவினர்.. அப்பட்டமான விதிமீறல்! -
விஜய்க்கு அமித்ஷா மகன் அனுப்பிய மெசேஜ்.. கமலாலயத்துக்கு பனையூர் க்ரீன் சிக்னல்.. தவெக பாஜக அஜென்டா -
சனிக்கிழமை காலையில் இடியை இறக்கிய மத்திய அரசு.. அதிரடியாக உயர்ந்த பெட்ரோல் விலை! ஒரே ஒரு ஆறுதல்! -
3 தொகுதிகள்.. அதிமுக கூட்டணியில் இணையும் தவாக? வேல்முருகனுக்கு எடப்பாடி பழனிசாமி கொடுத்த ஆபர்!












Click it and Unblock the Notifications