ஜிஎஸ்டி வரி மாறுது.. இனி உணவு, ஜவுளி பொருட்கள் அடியோடு விலை குறையுது.. சர்ப்ரைஸ் தந்த நிர்மலா

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜிஎஸ்டி கவுன்சிலில் செய்யப்படும் மாற்றங்கள் காரணமாக உணவு மற்றும் ஜவுளிப் பொருட்களின் விலை பல மடங்கு குறைய வாய்ப்பு உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில், செப்டம்பர் 3 மற்றும் 4 ஆகிய தேதிகளில் கூடவுள்ளது. இக்கூட்டத்தில், உணவு மற்றும் ஜவுளிப் பொருட்களை 5% வரி வரம்புக்குள் கொண்டு வருவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது. இதன்மூலம், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைய வாய்ப்புள்ளது.

gst

இந்த நடவடிக்கை, வரி அமைப்பை எளிதாக்குவதோடு, பொருள் வகைப்பாடு தொடர்பான சர்ச்சைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வணிகர்களும், நுகர்வோர்களும் பயனடைவர். மேலும், சிமெண்ட், சலூன்கள் மற்றும் காப்பீட்டுச் சேவைகள் மீதான வரிகளைக் குறைப்பது குறித்த யோசனைகளையும் கவுன்சில் பரிசீலிக்கும்.

இது, ஜிஎஸ்டி கட்டமைப்பை மேலும் எளிமையாக்கி, நுகர்வோருக்கு உகந்ததாக மாற்றுவதற்கான முக்கிய நகர்வாகப் பார்க்கப்படுகிறது. இம்முடிவுகள், வர்த்தகத்திலும், மக்களின் அன்றாட வாழ்க்கையிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது.

ஜிஎஸ்டி வரியில் மாற்றம்

மத்திய அரசு, புதிய சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) விகிதங்களாக 5% மற்றும் 18% ஆகியவற்றை அமல்படுத்த பரிந்துரைத்துள்ளது. இந்த புதிய மறைமுக வரி விதிப்பில், சிகரெட்டுகள் மற்றும் பிற புகையிலை பொருட்களுக்கு 40% வரி விதிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 12% வரி விதிக்கப்படும் பொருட்களில் சுமார் 99% பொருட்கள் இனி 5% வரி அடுப்பிற்கு மாற்றப்படவுள்ளன. இதேபோல், அதிகபட்சமாக 28% வரி விதிக்கப்படும் பொருட்களில் ஏறத்தாழ 90% பொருட்கள் 18% வரி அடுக்குக்கு மாற்றவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இந்த ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள், நாட்டின் பொருளாதாரத்தில் நுகர்வை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரி விகித சீரமைப்பு காரணமாக ஏற்படும் வருவாய் இழப்பை இது ஈடுசெய்யும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாட்டின் மறைமுக வரி விதிப்பில் இரண்டு விகிதங்களை மட்டுமே இறுதி செய்ய, தற்போதுள்ள 12% மற்றும் 28% ஜிஎஸ்டி அடுக்குகளை ரத்து செய்ய மத்திய அரசு முன்மொழிந்துள்ளது.

ஜிஎஸ்டி அடுக்கு மாற்றம்

சிகரெட்டுகள் போன்ற புகையிலை பொருட்களுக்கு 40% ஜிஎஸ்டி விதிக்கப்படுவதுடன், தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மற்றும் ஆடம்பரப் பொருட்களுக்கும் 40% வரி விதிக்கப்படும். அதேவேளையில், அன்றாடப் பயன்பாட்டுப் பொருட்களின் ஜிஎஸ்டி விகிதம் 5% ஆக நிர்ணயிக்கப்பட உள்ளது. தற்போது சிகரெட்டுகள் போன்ற புகையிலை பொருட்களுக்கு 28% ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. இந்த புதிய பரிந்துரை அமலுக்கு வந்தால், சிகரெட்டுகள் விலை 12% கூடும். அதாவது, சுமார் ₹15-க்கு விற்கப்படும் சிகரெட் ₹18 வரை விற்பனையாகும் வாய்ப்புகள் உள்ளன.

பெட்ரோலியப் பொருட்கள் புதிய ஜிஎஸ்டி ஆட்சி முறைக்கு வெளியே தொடர்ந்து இருக்கும். ஒட்டுமொத்த வரி விதிப்புத் தாக்கம் தற்போதைய 88% அளவிலேயே இருக்கும் என அரசு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்தியாவின் 79வது சுதந்திர தினத்தன்று, மத்திய அரசு 'எளிமையான வரி' முறையை நோக்கி நகர்ந்து வருவதாக நிதி அமைச்சகம் அறிவித்தது. இதன் ஒரு பகுதியாக, 'இரண்டு அடுக்குகள்' கொண்ட மறைமுக வரி விதிப்பை அறிமுகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது.

இந்த சீர்திருத்தங்கள், 'நிலையான' மற்றும் 'திறன்சார்' என பெயரிடப்பட்ட இரண்டு ஜிஎஸ்டி அடுக்குகளையும், சில குறிப்பிட்ட பொருட்களுக்கான சிறப்பு வரி விகிதத்தையும் உருவாக்கும் நோக்கில் உள்ளன. இந்த பரிந்துரைகள் ஏற்கனவே ஜிஎஸ்டி கவுன்சிலால் நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுவுக்கு (GoM) அனுப்பப்பட்டுள்ளன. அடுத்த கவுன்சில் கூட்டத்தில், சீரமைக்கப்பட்ட இந்த வரி விதிப்பு முறையை செயல்படுத்துவது குறித்து விவாதித்து விரைவில் அமல்படுத்தப்படும் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஜிஎஸ்டி விலை மாறும் பொருட்கள்

தற்போதுள்ள 12% மற்றும் 28% வரி அடுக்குகளை நீக்கிவிட்டு, 5% மற்றும் 18% அடுக்குகளை மட்டுமே வைத்திருக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தினசரி பயன்பாட்டுப் பொருட்கள், ஆடம்பரப் பொருட்கள் உள்ளிட்ட பல பொருட்களுக்கான ஜிஎஸ்டி கட்டமைப்பை மத்திய அரசு திருத்த வாய்ப்புள்ளது. வரி அமைப்பைச் சீரமைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது என்று அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தீபாவளி பண்டிகைக்கு முன்னதாகவே இந்த ஜிஎஸ்டி விகிதங்கள் திருத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், "இந்த தீபாவளியை, இரட்டை தீபாவளியாக மாற்றுவேன்" என்று அறிவித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+